
இன்று மகா கந்த சஷ்டி விரதம். அறுபடை வீட்டிலும் முருகப் பெருமானுக்கு திருவிழா கோலம் கலைக்கட்டும். மற்ற நாட்களில் முருகனை நினைத்து வழிபாடு செய்கின்றோமோ இல்லையோ இந்த ஒரு நாள் முருகப்பெருமானை நினைத்து மனதார வழிபாடு செய்தால், நமக்குள் இருக்கும் கெடுதல் அனைத்தும் அழியும். காரணம், இன்று தான் திருச்செந்தூரில் சூரசம்காரம் நடைபெறும்.
முருகப்பெருமான் அசுரரை வதம் செய்யக்கூடிய வைபவம் இன்று தான் நடைபெறும். இன்று நான் முருகப்பெருமானை வழிபாடு செய்தால் நமக்குள் இருக்கும் அசுரனையும் முருக பெருமான் வதம் செய்துவிடுவார். நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணம், குரோதம், விரோதம், வஞ்சகம் வன்மம் இது போல, நமக்குத் தேவையில்லாமல், நம்முடைய உடம்பில் என்னென்ன விஷயங்கள் அமர்ந்திருக்கிறதோ அந்த கெட்டதை எல்லாம் நாம் வதம் செய்ய வேண்டும் என்றால், இன்று முருகர் வழிபாடு மிக மிக அவசியம்.
நீங்கள் முருகரை வேண்டி விரதம் இருந்து வழிபாடு செய்தாலும் சரி, விரதம் இல்லை என்றாலும் சரி, இன்று மாலை பூஜையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். சூரசம்ஹாரம் முடிந்தவுடன், பின் சொல்லக் கூடிய இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பங்களால் முருகனுக்கு பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் உங்களை பின்தொடர்ந்து வந்த கெட்டது அனைத்தும் அழியும். முருகனின் பரிபூரண அருளை பெறலாம்.
திருப்பரங்குன்றம் , திருச்செந்தூர் , பழனி , சுவாமிமலை , திருத்தணி , பழமுதிர்ச்சோலை இவைதான் அறுபடை வீடு. இந்த ஊர் பெயரை இன்று உச்சரிக்கவே தனி புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !
வீரவேல் முருகனுக்கு அரோகரா !
‘அர ஹரோ ஹரா’ என்ற வார்த்தையின் சுருக்கம் தான் அரோஹரா. அரோஹரா ! அரோகரா ! என்பது மிகவும் சக்தி வாய்ந்த வார்த்தை. ‘இறைவா எங்களுடைய துன்பங்களை நீக்கி நற்கெதியை அருள்வாயாக’. இதுதான் இந்த அரோகரா என்ற வார்த்தைக்கு உண்டான அர்த்தம். இந்த வார்த்தையை சொல்லும்போதே அடி வயிற்றிலிருந்து நாம் சத்தத்தை எழுப்ப கூடிய உணர்வு வரும். இன்று மாலை இந்த ‘அரோகரா’ கோஷத்தை எழுப்பி எந்த வீட்டில் முருகர் வழிபாடு செய்யப்படுகிறதோ, அந்த வீட்டில் கஷ்டங்கள் இன்றோடு வதம் செய்யப்படும் என்பது நம்பிக்கை.
திருப்பரங்குன்றத்து முருகனுக்கு அரோகரா !
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவருக்கு அரோகரா !
பழனி ஸ்ரீ பால தண்டாயுத சுவாமிக்கு அரோகரா !
சுவாமிமலை முருகனுக்கு அரோகரா !
திருத்தணி வள்ளி தெய்வயானை முருகனுக்கு அரோகரா !
பழமுதிர்ச்சோலை முருகனுக்கு அரோகரா !
இதையும் படிக்கலாமே: கார்த்திகேய துவாதச நாம ஸ்தோத்திரம்
இப்படியாக அறுபடை வீட்டு முருகனின் பெயரைச் சொல்லி அரோகரா கோஷத்தை எழுப்பும்போது சொல்லவே வேண்டாம். அறுபடை முருகனின் ஆசிர்வாதம் நம்மை வந்து சேரும். முருகப்பெருமானே வந்து உங்கள் வீட்டுப் பூஜையில் சந்தோஷமாக அமர்ந்து கொள்வர். இன்றைய தினம் சூரசம்ஹாரத்தை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பை பார்த்துவிட்டு, முடிந்தால் குளித்துவிட்டு எளிமையான மேல் சொன்ன பூஜையை உங்கள் வீட்டு பூஜை அறையில் செய்யுங்கள். முருகப் பெருமானின் அருளை பரிபூரணமாக பெறலாம். என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.