கலியுக தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கென்று சில குறிப்பிட்ட நாட்கள் இருக்கின்றன. அப்படிபட்ட விரதங்களில் ஒன்றுதான் ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கக்கூடிய கந்த சஷ்டி விரதத்தை அனுஷ்டிப்பார்கள். அப்படி கந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்பவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தீர்க்க முடியாத பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கூற வேண்டிய முருகனின் நாமங்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்தி என்பது இருக்கும். அந்த தெய்வத்திற்கு பலவகையான பெயர்களும் இருக்கும். அந்த பெயர்களை கூறி நாம் அந்த தெய்வத்தை வழிபடும் பொழுது அந்தப் பெயர்களுக்குரிய ஆற்றல்களும் பலன்களும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் முருகப்பெருமானுக்குரிய நாம வழிபாட்டு முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
நாமம் என்றாலே பெயர் என்று நம் அனைவருக்கும் தெரியும். முருகப் பெருமானின் 12 நாமங்களை நாம் கார்த்திகை துவாதச நாம ஸ்தோத்திரம் என்று கூறுகிறோம். இந்த நாம ஸ்தோத்திரத்தை யார் ஒருவர் முழு மனதோடு முருகப்பெருமானை நினைத்து கூறுகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய தீர்க்க முடியாத பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று கூற ப்படுகிறது. அதிலும் குறிப்பாக சூரனை வதம் செய்த சூரசம்கார நாளன்று இந்த நாமங்களை கூறி வழிபாடு செய்பவர்களுக்கு எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சினையில் இருந்து முழுமையாக விடுபட முடியும்.
சூரசம்கார நாளன்று விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும் விரதம் இல்லாமல் வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும் இந்த நாம வழிபாட்டை மேற்கொள்ளலாம். இதற்கு நமக்கு 12 மிளகு வேண்டும். காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு முருகப்பெருமானுக்கு இனிப்பு பொருட்கள் ஏதாவது ஒன்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆறு நெய் தீபங்களோ அல்லது ஒரே ஒரு நெய் தீபத்தையோ ஏற்றி வைத்துக் கொள்ளலாம்.
இப்படி செய்துவிட்டு அன்றைய தினத்தில் விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். விரதம் இருக்க இயலாது என்று நினைப்பவர்கள் மாலை நேரத்தில் சூரசம்காரம் நிறைவடைந்த பிறகு வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமானுக்கு முன்பாக விளக்கேற்றி நெய்வேத்தியம் வைத்துவிட்டு ஒரு வெள்ளை அல்லது சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு 12 மிளகுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மிளகை அந்த துணியில் வைத்து மூட்டையாக கட்டி நம்முடைய கையில் வைத்துக்கொண்டு முருகப்பெருமானின் இந்த 12 நாமங்களை ஒரு முறை மட்டும் கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு இந்த மிளகு மூட்டையை முருகப்பெருமானின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
கார்த்திகேயன் துவாதச நாம ஸ்தோத்திரம்
கார்திகேயோ மஹாஸேன꞉
ஶிவபுத்ரோ வரப்ரத꞉ . ஶ்ரீவல்லீதேவஸேனேஶோ
கஜவக்த்ரானுஜஸ்ததா ..
மயூரவாஹனோ பக்த
மோக்ஷத꞉ குக்குடத்வஜ꞉ .
தாரகாஸுரஸம்ʼஹர்த்தா
ஷட்வக்த்ர꞉ ஶக்திதாரக꞉ ..
த்வாதஶைதானி நாமானி
கார்திகேயஸ்ய ய꞉ படேத் .
ஸர்வதா பக்திமான் ரக்ஷாம்ʼ
ப்ராப்னோத்யபி மஹாபலம் ..
இந்த முறையில் 12 மிளகை வைத்து இந்த 12 நாமங்களை கூறி முருகப்பெருமானை சூரசம்கார நாளில் நாம் வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தீர்க்க முடியாத பிரச்சினைகள் அனைத்தையும் முருகப்பெருமான் தீர்த்து வைப்பார். மேலும் 12 வருடங்களுக்கு நமக்கு எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாமல் முருகப்பெருமான் நமக்கு பாதுகாவலாக தன்னுடைய 12 கரங்களையும் அனுப்புவார் என்று கூறப்படுகிறது. இந்த மிளகுகளை எடுத்து வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் பிரசாதமாக உண்ண வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே:தலையெழுத்தை மாற்றும் முருகனின் பாடல்
இந்த முறையில் மிளகை வைத்து முருகப்பெருமானின் இந்த நாமங்களை கூறுபவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்று கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.