
இந்த கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான் அப்படிப்பட்ட முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரமாக கருதப்படுவது விசாக நட்சத்திரம். அந்த விசாக நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உகந்த கிழமை ஆன செவ்வாய் கிழமையுடன் சேர்ந்து வருகிறது. அதாவது நாளைய தினம் செவ்வாய்க்கிழமை அதனுடன் சேர்ந்து விசாக நட்சத்திரம் வருகிறது. இது முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த தினமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட தினத்தில் முருகப்பெருமானை வழிபாடு செய்யும் முறையை பற்றி இந்த ஆன்மீகம்குறித்த பதிவில் பார்ப்போம்.
பொதுவாகவே முருகப்பெருமானின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இதோடு மட்டுமல்லாமல் கிருத்திகை, சஷ்டி போன்ற தினங்கள் முருகப்பெருமானுக்கு விஷேகரமான தினங்களாக திகழ்கிறது. அன்றைய தினத்திலும் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இதே போல் முருகப்பெருமான் பிறந்த நட்சத்திரமான விசாக நட்சத்திரமும் அவருக்கு உகந்த நாளாகவே கருதப்படுகிறது.
இந்த விசாக நட்சத்திரம் செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து நாளைய தினம் வருகிறது என்னும் பொழுது அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும் அல்லவா? அப்படிப்பட்ட நாளில் செய்யக்கூடிய எளிமையான வழிபாட்டை பற்றி பார்ப்போம்.
காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபட வேண்டும். நாளைய தினம் ஒரு முறையாவது கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். அதேபோல் மாலை நேரத்தில் ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தை கூறி வீட்டில் இருக்கக் கூடிய முருகனின் சிலை அல்லது வேலிற்கு தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
இயன்றவர்கள் நாளைய தினம் அருகில் இருக்கக்கூடிய முருகனின் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது என்பது சிறப்பு. இதோடு மட்டுமல்லாமல் நாளைய தினம் யாராவது மூவருக்கு தங்களால் இயன்ற அன்னதானத்தை வாங்கி தருவதன் மூலமும் பல நன்மைகள் உண்டாகும். இந்த எளிமையான வழிமுறைகளில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது நாளைய தினம் நாம் பின்பற்றி முருகப் பெருமானை வழிபாடு செய்தோம் என்றால் முருகப்பெருமானின் அருள் என்பது நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
இயன்றவர்கள் இந்த அனைத்து காரியங்களையும் நாளைய தினம் செய்யலாம். முருகப்பெருமானுக்குரிய மந்திரமான “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தையும் முருகப் பெருமானுக்கு உகந்த பாடலான கந்த சஷ்டி கவசத்தையும் முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து பாராயணம் செய்யும் பொழுது முருகப்பெருமானின் அருளானது பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதோடு மட்டுமல்லாமல் முருகப்பெருமானுக்கு நாளைய தினம் வைக்கக்கூடிய மலர்கள் ஆறு எண்ணிக்கையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் ஏதாவது பழங்களை நெய்வேத்தியம் செய்வதாக இருந்தாலும் ஆறு என்ற எண்ணிக்கையில் வைத்து நெய்வேத்தியம் செய்யும் பொழுது ஆறுமுகத்தின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.
இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்க செவ்வாய்க்கிழமை பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த வழிபாட்டு முறையில் ஏதாவது ஒன்றை பின்பற்றி முருகப் பெருமானை மனதார நினைப்பதன் மூலம் முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.