- Advertisement -

புது முயற்சிகள் வெற்றி அடைய அரசமர பரிகாரம்.

- Advertisement -

ஒவ்வொரு மனிதனும் தற்போது இருக்கும் பொருளாதார நிலையில் இருந்து, மேலும் மேலும் உயர வேண்டும் என்று தான் தினமும் அயராது உழைக்கின்றான். ஆனால் அவன் எடுக்கக்கூடிய புது முயற்சிகளில் சிக்கல்களும், தோல்விகளும் வந்து கொண்டே இருக்கிறது. உதாரணத்திற்கு இப்போது நல்ல வேலையில் இருக்கிறீர்கள்.

இதைவிட அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று புதுசாக வேலைக்கு முயற்சி செய்யலாம், புதுசாக எதையாவது கற்றுக்கொண்டு, புது வேலையை தேடி பிடிக்கலாம் என்று முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால் அந்த புது படிப்பை படிப்பதற்கு நிறைய தடைகள் வரும். செய்யும் தொழிலை விரிவுபடுத்தலாம் என்று நினைப்பீர்கள்.

- Advertisement -

மாதம் 50 ஆயிரம் ரூபாய் லாபத்தை கொடுக்கும் தொழிலை விரிவுபடுத்தி, மாதம் 1 லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம் என்று பல வருடங்கள் முயற்சி செய்து கொண்டு இருப்பீர்கள். ஆனால் அதற்கான வெற்றியே உங்களுக்கு கிடைக்காமல் தடைகள் வந்து கொண்டே இருக்கும். நான் நன்றாகத் தான் இருக்கின்றேன், ஆனால் இன்னும் கூடுதல் நன்மைகளைப் பெற என்ன செய்வது.

புது முயற்சிகளில் வெற்றி பெற

ஞாயிற்றுக்கிழமை இந்த வழிபாட்டை செய்தால் உங்களுடைய வாழ்க்கை தரம், செல்வ வளம் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்லும். அது என்ன பரிகாரம் தெரியுமா. ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு கல்லில் செய்யப்பட்ட சின்ன அம்மி அல்லது உரல் ஏதாவது தேவை. உங்க வீட்ல பெரிய அம்மி தான் இருக்கு, பெரிய உரல் தான் இருக்கு அப்படின்னாலும் அதை நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் கல்லில் செய்யப்பட்ட ஒரு பொருள் தேவை.

அந்த கல் உரலில் கொஞ்சமாக மஞ்சள் பொடி, கொஞ்சமா தயிர், கொஞ்சமாக வெந்தய பொடி, போட்டு கலந்து கொள்ளுங்கள். இரண்டு ஸ்பூன் மஞ்சப்பொடி, இரண்டு ஸ்பூன் தயிர், இரண்டு ஸ்பூன் வெந்தயப் பொடி போட்டாலும் போதும். இந்த பொருளை எல்லாம் அந்த கல்லை வைத்தே இழைக்க வேண்டும். சில்வர் ஸ்பூன், சில்வர் கரண்டி மரக் கரண்டி எதுவும் பயன்படுத்தாதீங்க.

- Advertisement -

இது கொஞ்சம் பேஸ்ட் ஆக கிடைக்கும். அதை வழித்து ஒரு கண்ணாடி கிண்ணத்திலோ, அல்லது பீங்கான் கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும். வீட்டு பக்கத்தில் அரசமரம் இருக்கும் இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த அரச மரத்திற்கு இந்த பேஸ்ட்டை அப்படியே தடவி விட வேண்டும்.

அப்படி தடவும் போது வாழ்க்கையில் நான் முன்னேற வேண்டும், தொழிலில் வெற்றி அடைய வேண்டும் புது முயற்சிகளில் வரும் தடைகள் விலக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு அந்த அரச மரத்தை 11 முறை வலம் வந்து, பிறகு வீடு திரும்பவும். அரச மரத்தடி பிள்ளையார் இருந்தாலும் அந்த இடத்தில் இந்த பரிகாரத்தை தாராளமாக செய்யலாம்.‌இதை காலை 10 மணிக்கு முன்பாகவே செய்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: 11 நாளில் வேண்டுதல் நிறைவேற விநாயகர் வழிபாடு

அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு இந்த பரிகாரத்தை தொடர்ந்து 48 வாரம்  செய்து வந்தால் சிறப்பான பலன் கிடைக்கும். பெண்கள் ஆண்கள் யார் வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண்களாக இருந்தால் நடுவில் வரும் மாதவிடாய் நாட்களை மட்டும் தவிர்த்து விட்டு, மீதம் உள்ளநாளை கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேற உங்களுக்கு நல்ல வழி பிறக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -
Published by