- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval11 நாளில் வேண்டுதல் நிறைவேற விநாயகர் வழிபாடு

11 நாளில் வேண்டுதல் நிறைவேற விநாயகர் வழிபாடு

- Advertisement -

கேட்டதை கொடுக்கக்கூடிய, நினைத்ததை நடத்தி வைக்கக்கூடிய வேலையை செய்யக்கூடிய கடவுள் என்றால் அது விநாயகப் பெருமான்தான். விநாயகரிடம் நீங்கள் வாய் விட்டு எந்த வரங்களை கேட்கிறீர்களோ, அந்த வரத்தை அவர் அப்படியே உங்களுக்கு கொடுப்பார். எதுவுமே கேட்காமல் விநாயகரின் முன்பு போய் நீங்கள் அமைதியாக நின்றால் அவரும் அமைதியாக தான் இருப்பார்.

உங்க வீட்டில் பிள்ளையாரின் திரு உருவப்படம் நிச்சயம் இருக்கும். உங்களுடைய வேண்டுதலை அவரிடம் சொல்லி, அந்த படத்திற்கு பின் சொல்லக்கூடிய முறைப்படி பொட்டு வைத்து வாருங்கள். இந்த பொட்டை வைத்து முடிப்பதற்குள் உங்கள் மனதில் நினைத்த காரியம் நிறைவேறும்.

- Advertisement -

11 நாளில் நினைத்தது நடக்க

தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்து விடுங்கள். பெண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஆண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்களுக்கான வேண்டுதலை வைத்தும் இந்த பரிகாரத்தை செய்யலாம், அல்லது உங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்கள் யாராவது ஒருவருக்கு இந்த நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்து இந்த பரிகாரத்தை செய்தாலும் நிச்சயம் அது பலிக்கும்.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு சந்தனமும் குங்குமமும் இருந்தால் மட்டும் போதும். சந்தனத்தை தண்ணீர் ஊற்றி குழைக்கலாம். பன்னீர் ஊற்றி குழைத்தாலும் தவறு கிடையாது. முதல் நாள் பிள்ளையாரின் பாதத்திற்கு ஒரே ஒரு பொட்டு, சந்தனம் குங்குமம் வைத்து விடுங்கள். ஏதாவது ஒரு வேண்டுதலை அந்த விநாயகரிடம் சொல்லுங்கள். பிறகு ‘ஓம் விக்னங்களை தீர்க்கும் விநாயகா போற்றி போற்றி’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். விளக்கு ஏற்றி வைத்துவிட்டு விநாயகரை மனதார நமஸ்காரம் செய்து வழிபாட்டை நிறைவு செய்து கொண்டு உங்களுடைய அன்றாட வேலையை தொடங்கலாம்.

- Advertisement -

இரண்டாவது நாள், முதல் நாள் வைத்த பொட்டுக்கு மேல் பக்கம் இன்னொரு பொட்டு வைக்கவும், அதேபோல மந்திரத்தை சொல்லி விளக்கு ஏற்றி விநாயகரை நமஸ்காரம் செய்து கொள்ளவும். இதே போல 11 பொட்டு விநாயகரின் பாதத்திலிருந்து மேல் பக்கமாக அப்படியே வைத்துக் கொண்டே செல்லுங்கள். அவருடைய தும்பிக்கையில் வந்து அந்த பொட்டு முடியட்டும்.

கொஞ்சம் கொஞ்சம் இடைவெளி விட்டு வைக்கவும். கிட்டத்தட்ட இந்த பொட்டு வைக்கக்கூடிய வடிவத்தை பார்த்தால் ஓம் என்ற வடிவம் நமக்கு கிடைக்கும். வெறும் ஓ போட்டு அதன் நடுவே புள்ளி வைத்தால் ஓம் என்ற வார்த்தை நமக்கு வரும் அல்லவா. அதை போல ஓ வடிவம் உங்களுக்கு அந்த பிள்ளையார் உருவத்தில் தெரியும், நீங்கள் பொட்டு வைத்த இடத்தை எல்லாம் இணைக்கும்போது. அந்த வடிவத்தில் நீங்களே பார்த்து பொட்டை வையுங்கள்.

- Advertisement -

11 பொட்டு, 21 பொட்டு இப்படி எத்தனை கணக்கு வைத்தாலும் தவறு கிடையாது. உங்களுடைய வழிபாட்டினால் அத்தனை நாள் நீளும். 11 நாள், 21 நாள், நீளம். 21 நாளும் ஒரே வேண்டுதலை சொல்லுங்கள். என் பையனுக்கு திருமணம் நடக்க வேண்டுமா, அதே வேண்டுதலை வைத்து விநாயகரை வழிபாடு செய்யுங்கள். என் கணவருக்கு வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா, அதே வேண்டுதலை வையுங்கள் 21 நாள் வேண்டுதலை வைத்து வேண்டுதல் நிச்சயம் வேண்டுதல் நிறைவேறும்.

உங்களுடைய போரத காலம் வேண்டுதல் நிறைவேறவில்லையா? மறுபடியும் பிள்ளையாருக்கு வைத்த குங்குமத்தை எல்லாம் துடைத்து எடுத்து விட்டு மீண்டும் பாதத்திலிருந்து பொட்டு வைக்க தொடங்கி மீண்டும் வேண்டுதலை பிள்ளையாரின் காதில் சொல்லிக் கொண்டே இருங்கள். நிச்சயம் சீக்கிரம் அந்த வேண்டுதல் பலிக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: திருமண தடை நீங்கவும் தொழில் முன்னேற்றகரமாகவும் நடைபெற உதவும் செடி

இது தவிர விநாயகருக்கு பூ போடுவது அருகம்புல் போடுவது இதெல்லாம் உங்களுடைய வழிபாட்டில் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். தவறு கிடையாது, சந்தனம் விநாயகரது மனதை குளிர வைக்கும். குங்குமம் வேண்டியவற்றை நிறைவேற்றித் தரும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்