
ஒருவருடைய வாழ்க்கையில் முயற்சி என்பது கண்டிப்பாக இருக்கும். முயற்சி செய்யாதவன் மனிதனாகவே இருக்க முடியாது. சிறு குழந்தை முதல் வயதான முதியவர்கள் வரை முயற்சி என்பதை செய்து கொண்டுதான் இருப்பார்கள். மூச்சு விடுவது கூட நம்முடைய முயற்சியால்தான் நடக்கிறது. அந்த முயற்சியை நாம் நிறுத்தி விட்டோம் என்றால் நம்மால் உயிர் வாழவே முடியாது. அந்த அளவிற்கு முயற்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்வார்கள். ஆனால் அந்த முயற்சிகள் வெற்றி அடையாமல் ஏதாவது ஒரு தடங்கல்கள் வந்து தடைப்பட்டு நின்றுவிடும்.
அப்படி தொடர்ச்சியாக தடங்கல்கள் வந்து கொண்டு இருக்கிறது என்று நினைப்பவர்கள் தங்களுடைய சுயஜாதகத்தில் ராகு கேதுவின் நிலை எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ராகு கேது இவர்கள் இருவர் தான் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடங்கல்களுக்கு காரணமாக திகழ்கிறார்கள். அப்படிப்பட்ட தடங்கல்களை நீக்கி வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வதற்கு நாகரை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நாகர் என்பது நம்முடைய ஆன்மீக ரீதியில் பல தெய்வங்களுடன் நேரடியாக தொடர்புடையதாகவே திகழ்கிறது. சிவபெருமான் தன்னுடைய கழுத்தில் நாகரை வைத்திருப்பார். அம்மனோ நாகத்தை தன்னுடைய தலையில் வைத்து மாரியம்மன் காட்சியளிக்கிறார். விஷ்ணுவோ நாகத்தை படுக்கையாக பயன்படுத்தி அதில் படுத்து உறங்குகிறார். பிள்ளையாரோ நாகத்தை தன்னுடைய இடுப்பில் கட்டி வைத்திருக்கிறார். முருகரோ நாகத்தை தன்னுடைய பாதத்திற்கு அருகில் வைத்திருக்கிறார்.
இப்படி பல தெய்வங்களுக்கும் நாகத்திற்கும் பல தொடர்பு இருக்கிறது. இப்படிப்பட்ட நாகத்தை பலரும் தெய்வமாகவும் வழிபாடு செய்கிறார்கள். இந்த நாகத்தை தான் நாம் ராகு கேது என்று கூறுகிறோம். யாருக்காவது ராகு கேதுவால் பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கும் பட்சத்தில் அவர்கள் நாகநாதரை வழிபட வேண்டும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். இது பொதுவாக திருமணத்தடை, குழந்தை பாக்கியம் போன்ற தடைகள் இருப்பவர்கள் செய்யக்கூடிய பரிகாரமாகவே திகழ்கிறது.
இதோடு மட்டுமல்லாமல் இந்த மாதம் ஆடி மாதம் என்பதால் ஆடிச் செவ்வாய் ஆடி வெள்ளி போன்ற கிழமைகளில் அருகில் இருக்கக்கூடிய புற்று கோவிலுக்கு சென்று பார்த்தால் அங்கு மிகவும் விசேஷமாக பல வழிப்பாட்டு முறைகள் நடைபெறும். இந்த வழிபாட்டு முறைகளை செய்வதற்கு காரணம் அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் ராகு கேதுவால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதனால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடங்கல்களும் நீங்கி நல்ல நிலைக்கு நாம் செல்வோம்.
இந்த ராகு கேதுவை மிகவும் எளிமையான முறையில் நாம் வழிபடலாம். எந்த இடத்தில் நாகர் சிலை இருக்கிறதோ அந்த இடத்திற்கு சென்று சுத்தமான தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்த பிறகு பசும்பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும். மறுபடியும் சுத்தமான தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்து விட்டு நாகர் சிலைக்கு முழுவதுமாக மஞ்சளை தடவி குங்குமம் வைத்து விட்டு இரண்டு வேப்பிலை ஒரு எலுமிச்சம் பழம் இதை அவர்கள் முன்பாக வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி வழிபாடு செய்தாலே நாக தோஷம் என்பது நீங்கும். ராகு கேதுவால் ஏற்பட்ட பாதிப்புகளும் குறையும் ராகு கேதுவால் ஏற்பட்ட தடைகள் நீங்கி வெற்றி வாய்ப்பு நம்மை தேடி வரும்.
இதையும் படிக்கலாமே: ஆடி முதல் வெள்ளி வழிபாடு
எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு அவர்கள் நினைத்த பலன் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.