ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம்தான். அதிலும் ஆடி வெள்ளி என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. ஏனென்றால் வெள்ளிக்கிழமை என்பதே அம்மன் மற்றும் மகாலட்சுமி தாயாருக்கு உகந்த வழிபாட்டுக்கிழமையாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை என்பது பல அற்புதமான பலன்களை தரக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட ஆடி வெள்ளிக்கிழமை எந்த முறையில் நாம் வழிபாடு செய்தால் அம்மன் மற்றும் குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெற முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆடி முதல் வெள்ளி வழிபாடு
பொதுவாக வெள்ளிக்கிழமை என்றதும் நாம் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் பூஜை செய்வோம். அதிலும் குறிப்பாக மகாலட்சுமி தாயாரின் வழிபாடு என்பது சிறப்புக்குரியது. அதிலும் குறிப்பாக சுக்கிர ஹோரையில் செய்யக்கூடிய வழிபாடு என்பது பல அற்புதமான பலன்களை தரக்கூடியதாகவே திகழ்கிறது.
இந்த ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை அன்றும் நாம் காலையிலேயே வழிபாட்டை செய்ய வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது ஆறு மணியில் இருந்து ஏழு மணிக்குள் அல்லது எட்டு மணியில் இருந்து ஒன்பது மணிக்குள்ளோ இந்த நேரங்களில் செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் மாலை நேரத்தில் ஐந்து முப்பது மணியிலிருந்து எட்டு முப்பது மணிக்குள் வழிபாட்டை செய்ய வேண்டும்.
இந்த வழிபாட்டை செய்வதற்கு முதலில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து வீடும் முழுவதும் மஞ்சள் கலந்த தண்ணீரை தெளிக்க வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கக் கூடிய அம்மனின் விக்ரகத்திற்கு மஞ்சள் தண்ணீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். இப்படி அபிஷேகம் செய்து முடித்த பிறகு வடக்கு, கிழக்கு, மேற்கு முகமாக பார்த்து மூன்று அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
இப்படி செய்து விட்டு அம்மனுக்கு பால் பாயாசம், இளநீர், வெங்காயம் சேர்க்காத உளுந்த வடை, சர்க்கரை பொங்கல் போன்ற ஏதாவது ஒன்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். எந்த நேரத்தில் நீங்கள் பூஜை செய்கிறீர்களோ அந்த நேரத்தில் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய சிறு வயது பெண் குழந்தையை அழைத்து வந்து பூஜையறையில் அம்மனாக அமர வைத்து அந்த குழந்தைக்கு தேவையான வளையல், துணிகள், பூ என்று நம்மால் எதை வாங்கி தர முடியுமோ அதை வாங்கி கொடுத்துவிட்டு,
“ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பராசக்தி பராசக்தி பராசக்தி ஓம்
ஆதிசக்தி ஆதிசக்தி ஆதிசக்தி ஓம்
வந்திரங்கி காத்தருள்வாய் போற்றி ஓம்”
என்னும் மந்திரத்தை 54 முறை உச்சரித்து மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த அர்ச்சனையை செய்யும் பொழுது அந்த பெண் குழந்தைக்கும் சேர்த்து செய்தால் அந்த அம்மனை பெண் குழந்தை ரூபத்தில் நம் வீட்டிற்குள் வருவார்கள் என்று கூறப்படுகிறது.
இதோடு மட்டுமல்லாமல் வெள்ளிக்கிழமை எப்பொழுதும் சாம்பிராணி தூபம் காட்டுவோம். அவ்வாறு நாம் சாம்பிராணி தூபம் காட்டும் பொழுது அந்த சாம்பிராணியுடன் சிறிது ஏலக்காய் தூளையும் சேர்த்து வீடு முழுவதும் தூபம் காட்ட மகாலட்சுமி தாயாரின் அருளும் அதே சமயம் குலதெய்வத்தின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: குபேர வசியம் ஏற்பட வழிபாடு
இந்த எளிமையான வழிபாட்டு முறையை பின்பற்றி வழிபடுபவர்களுக்கு அம்மனின் அருளும் குலதெய்வத்தின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.