- Advertisement -
மந்திரம்

நந்தி ஸ்லோகம்

மனிதன் மனம் என்கிற ஒன்றால் ஆளப்படுகிறான். இந்த மனம் என்பது நன்மை, தீமை கலந்த எண்ணங்கள், சிந்தனைகள், விருப்பங்கள் கொண்டதாகவே இருக்கிறது. தீமைகளை அதிகம் நினைத்தால் தீய பலன்களே நமக்கு சுலபத்தில் ஏற்படும். ஆனால் நமது நல்லெண்ணங்கள், நியாயமான விருப்பங்கள் மற்றும் கோரிக்கைகள் நிறைவேற நமது உள்ள தூய்மையோடு இறைவனின் அனுக்கிரகமும் வேண்டும். அதற்கான நந்தி பகவானின் நந்தி ஸ்லோகம் இதோ.

நந்தி ஸ்லோகம்

நந்திகேசி மஹாயாக
சிவதயா நபராயண கௌரீ
சங்கரஸேவர்த்தம்
அனுக்ராம் தாதுமாஹஸ

சிவனின் வாகனமும், சிறந்த ஞானியும் ஆன நந்தி பகவானை போற்றும் ஸ்லோகம் இது. இந்த நந்தி ஸ்லோகத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் 9 முறை அல்லது 27 முறை கூறி வழிபடலாம். மாத சிவராத்திரி, பிரதோஷம் மற்றும் மஹாசிவராத்திரி ஆகிய தினங்களில் சிவன் கோவிலுக்கு சென்று நந்தி பகவானை இந்த ஸ்லோகத்தை கொண்டு 9 முறை துதித்த பின்பு சிவபெருமான் மற்றும் பார்வதியை வணங்குவதால் நமது மனதில் இருக்கும் தீமையானவை அனைத்தும் நீங்கி, உங்களின் கோரிக்கைகள், நல்லெண்ணங்கள், நியாயமான விருப்பங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற அருள்புரிவார் நந்தி பகவான்.

- Advertisement -

அகிலத்தை காக்கும் சிவபெருமானை அனைத்து இடங்களுக்கும் சுமந்து செல்லும் வாகனமாக இருக்கிறார் நந்தி பகவான். நந்தனார் சிவனை வழிபட விரும்பும் போது, சிவனின் கட்டளைப்படி விலகி அமர்ந்து நந்தனார் சிவனை வழிபட உதவினார். இந்த நந்தி பகவான் சிவன் வாகனம் என்ற அளவில் இல்லாமல் அவரின் ஆத்மார்த்த சீடனாகவும் இருக்கிறார். தமிழ் சித்தர்களில் “நந்தீசர்” எனும் சித்தர் சிவனின் சீடரான நந்தி பகவானே என கூறப்படுகிறது. அவரை போற்றும் இந்த ஸ்லோகத்தை துதிப்பதால் நமக்கு நன்மைகள் பலவற்றை உண்டாக்கும்.

இதையும் படிக்கலாமே:
பணம் அதிகம் சேர செய்யும் குபேர துதி

- Advertisement -

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Nandi sloka in Tamil. It is also called as Nandi slogam in Tamil or Nandhi slogam in Tamil or Nandhi mantra in Tamil or Nandhi manthiram in Tamil.

- Advertisement -