பணம் அதிகம் சேர செய்யும் குபேரன் துதி

Kuberan-1

இந்த உலகில் பணமில்லாமல் வாழ்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. எல்லாவற்றையும் துறந்து விட்ட துறவிகளுக்கு கூட சில சமயங்களில் பணம் கட்டாயம் தேவைப்படுகிறது. எல்லா மக்களுக்கும் பணம் எவ்வளவு கிடைத்தாலும் பத்தாது என்ற மனப்பான்மையிலிருக்க காரணம் பணத்தை எதிர்காலத்திற்காக சேர்த்து வைக்கும் எண்ணம் தான். நாம் என்ன தான் கடினமாக உழைத்தாலும், நம்மிடம் பணம் அதிகம் சேர செல்வத்தின் அதிபதியான குபேரனின் அருள் வேண்டும். அதை பெறுவதற்கான “குபேரன் துதி” இதோ.

kubera

குபேரன் துதி

அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் சிரமமெல்லாம்
உந்தனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ
இன்றோடு குறை விலக இனிய தெய்வம் குபேரனே
மன்றாடிக் கேட்கின்றேன் வருவாய் இது சமயம்

மிகுந்த செல்வத்திற்கு அதிபதியான குபேரனை போற்றும் குபேரன் துதி இது. இந்த குபேர துதியை தினந்தோறும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, காலை 6 மணிக்குள்ளிருந்து 7 மணிக்குள்ளாக உங்கள் வீட்டு பூஜையறையில் இருக்கும் மகாலட்சுமி, குபேரன் தெய்வங்களின் படத்திற்கு முன்பு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, கற்கண்டுகளை நிவேதனமாக வைத்து வடதிசையை பார்த்தவாறு இந்த துதியை 6 முறை துதித்து வழிபட்டு வந்தால் உங்கள் வேலை, தொழில், வியாபாரத்தில் அதிகளவு பணவரவு கிடைக்க செய்வார் குபேர பகவான்.

money

குள்ள உருவம், பானை போன்ற வயிறு, சதைப்பிடிப்பான அழகிய முகம் ஆகியவற்றை கொண்ட குபேர பகவான், பூலோக வாழ்க்கையில் மனிதர்கள் அதிகம் விரும்பும் செல்வத்திற்கு அதிபதியாக இருக்கிறார். அரக்க குலத்தில் பிறந்திருந்தாலும், படைப்பு கடவுளான “பிரம்ம” தேவனால் உலகின் செல்வங்கள் அனைத்திற்கும் அதிபதியாகும் பேறு பெற்றார். குபேரன் தனது கையில் கீரியை வைத்திருந்தாலும், அவரது வாகனமாக இருப்பது செல்வம் சேர்க்க வேண்டும் என்கிற தணியாத ஆசையுடன் நடமாடும் “மனிதர்கள்” தான். தன்னை உண்மையாக வழிபாடும் பக்தர்களுக்கு அருள்புரிவார் குபேரன்.

இதையும் படிக்கலாமே:
அனைத்து ராசிகாரர்களும் சொல்ல வேண்டிய குரு சுலோகம் என்ன

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kuberan thuthi in Tamil. It is alos called as Kuberan mantra in Tamil or Kuberan manthiram in Tamil language or selvam tharum manthiram in Tamil.