
மனிதனுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையும் கிரகங்களின் அமைப்பை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. கிரகங்கள் மனித வாழ்க்கையில் அத்தனை முக்கிய அம்சம் பெற்றவை. ஆகையால் தான் ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் கிரகங்களின் தன்மையை பொறுத்து அவருக்கான வழிபாடுகளையும் பரிகாரங்களையும் கூறுவார்கள்.
அப்படி ஒருவருக்கு நவகிரகங்களால் தோஷங்கள் ஏற்பட்டிருப்பின் அதற்கென அவர்கள் பெரிய அளவில் பயப்படத் தேவையில்லை. பெருமளவில் பொருட்செலவும் செய்ய வேண்டாம் ஒரு சில எளிமையான பரிகாரங்களை செய்தாலே போதும். கிரகங்களின் தாக்கம் நிச்சயமாக குறையும் அந்த வகையில் நவகிரகங்களின் தாக்கங்களும் குறைய சில ஆன்மீக குறிப்புகள் உள்ளது. அது என்னவென்று தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
மனிதனுடைய வாழ்க்கையில் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலுக்கும் சாஸ்திரங்கள் பலவிதமான வரையறைகளை வைத்திருக்கிறது. அதில் குளிக்கும் முறைக்கெனவும் சில வரைமுறைகளை நமக்கு வகுத்துக் கொடுத்திருக்கிறது. முதலில் கால் நனையும் படி தண்ணீர் ஊற்ற வேண்டும். அதன் பிறகு முழங்கால், தொடை, இடுப்பு என கீழிருந்து மேலாக குளிக்க வேண்டும் இது தான் சரியான குளியல் முறை.
இந்தக் குளியல் முறையில் ஒரு சில மாற்றங்களை செய்வது பற்றி தான் நாம் இப்போது இந்த பரிகார முறைகளை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். ஒவ்வொரு கிரக தோஷத்திற்கும் ஆன ஒவ்வொரு குளியல் முறை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.
இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் குளிக்கும் நேரில் சிவப்பு நிற பூக்கள் அல்லது குங்கும பூ கலந்து குளிக்க வேண்டும்.
சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குளிப்பதற்கு முன்பாக தயிரை உடல் முழுவதும் தேய்த்து கொள்ள வேண்டும். அதன் பிறகு குளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சந்திர பகவானால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்று சொல்லப்படுகிறது.
செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் பலவிதமான தடைகளை சந்திப்பார்கள் குறிப்பாக திருமண தடை இவர்கள் வில்வம் பழத்தின் கொட்டையை பொடி செய்து அந்த பொடியை தண்ணீரில் கலந்து குளிக்க வேண்டும்.
புதன் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கங்கை தீர்த்தத்தை சிறிதளவு எடுத்துக் கொண்டு, அதில் மஞ்சள்,கடுகு தேன் இவற்றை நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதை நீங்கள் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம். இந்த கங்கை தீர்த்தம் நாட்டு மருந்து கடைகளிலும் தெய்வீக பொருட்கள் விற்கும் கடைகளில் கூட கிடைக்கிறது
இவர்கள் கருப்பு ஏலக்காய் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குளிக்கும் நீரில் சேர்த்து குளிக்கும் பொழுது குரு கிரகத்தினால் ஏற்பட்டிருக்கக் கூடிய தோஷங்கள் நிவர்த்தி ஆகும்
இந்த தோஷம் உள்ளவர்கள் பச்சை ஏலக்காய் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குளிக்கும் நீருடன் கலந்து குளித்தால் புதன் தோஷம் நிவர்த்தியாகும் என்று சொல்லப்படுகிறது.
இவர்கள் கருப்பு எல்லை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குளிக்கும் நீரில் கலந்து குளிக்கும் போது சனி தோஷம் நிவர்த்தி ஆகும் என்று சொல்லப்படுகிறது.
இந்த தோஷம் உள்ளவர்கள் சிறிதளவு அருகம்புல்லை எடுத்து தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குளிக்கும் நீரில் சேர்த்து குளித்தால் தோஷம் நிவர்த்தி ஆகும்.
இதையும் படிக்கலாமே: இழந்ததை திரும்ப பெற வழிபாடு
மிகப்பெரிய பாதிப்புகளை தரக்கூடிய நவகிரகங்களின் தோஷத்தை கூட மிக எளிமையான முறையில் இப்படி குறைத்துக் கொள்ளலாம். நவகிரகங்களின் தோஷங்கள் நீங்க செய்யக் கூடிய இந்த பரிகாரக் குளியல் முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் இந்த குளியல் முறையை செய்யலாம்.