
ஒன்பது நாட்களும் கொண்டாடப்படுகின்ற நவராத்திரியின் இரண்டாம் நாள் துர்க்கை அம்மனை நாம் கௌமாரி ஆக வழிபாடு செய்வோம். மேலும் அன்றைய தினத்தில் ராஜராஜேஸ்வரி ஆகவும் அம்மனை நினைத்து வழிபாடு செய்வதுண்டு. இந்த வழிபாட்டை செய்வதற்கான சிறப்பான மந்திரங்களும், வழிபாட்டு முறைகளை பற்றியும் தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்
ஆண்களுக்கு ஒரு நாள் சிவராத்திரி பெண்களுக்கு ஒன்பது நாள் நவராத்திரி என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட நவராத்திரியின் இரண்டாம் நாள் அன்று துர்க்கை அம்மனை ராஜராஜேஸ்வரி ஆகவும் கௌமாரியாகவும் ஆகவும் நினைத்து வழிபாடு செய்வதுண்டு. அப்படி நாம் வழிபாடு செய்வதற்குரிய வழிமுறைகளை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
இன்றைய தினத்தில் நாம் மாலை ஐந்து முப்பது மணியிலிருந்து ஒன்பது முப்பது மணிக்குள் வழிபாட்டை செய்து விட வேண்டும். இந்த வழிப்பாட்டிற்கு கருப்பு கொண்டை கடலை சுண்டல், புளி சாதம், லட்டு, மாம்பழம் போன்ற பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் நம் அணிய வேண்டிய உடையின் நிறம் மஞ்சளாக இருக்க வேண்டும். மேலும் அம்மனுக்கு புடவை சான்றுபவர்களாக இருக்கும் பட்சத்தில் மஞ்சள் நிறத்திலான புடவையை சாட்சி வழிபாடு செய்வது என்பது மிகவும் நல்ல பலனை தரும்.
அன்றைய தினத்தில் நாம் அம்மனுக்கு அர்ச்சனை செய்வதற்காகவும், அலங்காரம் செய்வதற்காகவும் துளசி, மரு, முல்லை போன்ற மலர்களை பயன்படுத்த வேண்டும். இது தவிர்த்து வாசனை மிகுந்த மற்ற மலர்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். முக்கியமாக இந்த மூன்று மலர்களும் இடம் பெற்று இருக்க வேண்டும் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. அன்றைய தினத்தில் வீட்டிற்கு மூன்று, ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் சுமங்கலி பெண்களை அழைத்து வந்து இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள சொல்ல வேண்டும். இந்த வழிபாடு நிறைவு செய்த பிறகு அவர்களுக்கு பிரசாதம் தரும் பொழுது மாம்பழம், லட்டு போன்றவற்றை தர வேண்டும்.
கொலு வைத்து வழிபாடு செய்பவர்கள் காலையில் எளிமையான முறையில் வழிபாடு செய்து கொண்டு மாலையில் இந்த முறைப்படி வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது துர்க்கை அம்மனை ராஜராஜேஸ்வரி ஆகவும் கௌமாரி ஆகவும் நினைத்து நாம் கூற வேண்டிய மந்திரம் ஒன்று இருக்கிறது. இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தோடு அம்மனின் மற்ற போற்றிகளையும் நாம் கூறி வழிபாடு செய்யலாம்.
ஓம் ராஜேஸ்வரியே நமோ நம
ஓம் கௌமாரி தேவியே நமோ நம
ஓம் மங்கள ரூபிணியே நமோநம
ஓம் தைரியம் தருபவளே நமோநம
இந்த முறையில் நவராத்திரியின் இரண்டாம் நாள் அன்று நாம் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதன் மூலம் நாம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் நமக்கு வெற்றிகள் உண்டாகும். முயற்சிகள் வெற்றியை தரும். காரிய தடைகள் அனைத்தும் நீங்கும். உடலில் இருக்கக்கூடிய ஆரோக்கிய குறைபாடுகள் அனைத்தும் நீங்கி ஆரோக்கியமான சுகமான வாழ்க்கையை வாழ முடியும்.
கொலு, கலசம் வைத்து வழிபாடு செய்யாதவர்கள் கூட மாலை நேரத்தில் வீட்டில் இருக்கக் கூடிய அம்மனின் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே:நவராத்திரி தீப வழிபாடு
நவராத்திரியின் இரண்டாம் நாள் இந்த மந்திரத்தை கூறி இந்த பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து துர்க்கை அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை அமைவதோடு தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.