- Advertisement -
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பாசம் வெளிப்படக் கூடிய நாளாக இருக்கும். பேச்சில் சந்தோஷம் இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுப காரியம் நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். இறை நம்பிக்கை அதிகரிக்கும் நாள் இன்று.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இருந்தாலும் மனதிற்கு நிம்மதி கிடைக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளோடு பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். இந்த விடுமுறை நாள் இனிமையான நாளாக அமையும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனம் நிறைய நிம்மதி இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். குடும்பத்தோடு சேர்ந்து கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். இறை நம்பிக்கையால் மனதில் இருந்த பாரம் குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் பெரிசாக பிரச்சனைகள் இருக்காது.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். நேரத்திற்கு நல்ல சாப்பாடு, நேரத்திற்கு நல்ல தூக்கம் என்று இந்த நாளை என்ஜாய் பண்ணுவீங்க. இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்வதற்கான நல்ல வாய்ப்புகள் வரும். சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுடைய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை தரும். சுறுசுறுப்பு வெளிப்படும். விடுமுறை நாள் என்று கூட பார்க்காமல் உங்களுடைய கடமைகளை தவறாமல் செய்து முடிப்பீர்கள். இதுநாள் வரை அலட்சியமாக இருந்த விஷயங்களை எல்லாம் கூட சரி செய்து பொறுப்புணர்ச்சியோடு, சில வேலைகளை செய்து முடித்து நல்ல பெயர் வாங்குவீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மனக்குழப்பம் நீங்கும். தெளிவாக சிந்தித்து வாழ்க்கைக்கு தேவையான தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் நீண்ட நாள் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். பஞ்சாயத்துகள் வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் இருக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். ஆர்வத்தோடு செயல்படுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்பாராத அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது. நீண்ட நாள் செய்ய முடியாத வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டிருந்த பொருட்களை இன்று வாங்க கூடிய வாய்ப்புகள் அமையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆக்கபூர்வமான நிறைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை சுத்தம் செய்வது, பழுது போன பொருட்களை சரி பார்ப்பது, இது போன்ற வேலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளுடைய கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து தடைகள் விலகும். நல்லது நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனது கொஞ்சம் குழப்பமாக இருக்கும். புது முடிவுகள் எடுக்கும் போது சில தடுமாற்றம் வரலாம். சிந்தித்து செயல்படுங்கள். அவசரப்பட்டு எந்த வேலையும் செய்ய வேண்டாம். முன்கோபம் வேண்டாம். எதிரிகளை உருவாக்கிக் கொள்ளக் கூடாது. நிதானத்தோடு இருந்தால் இந்த நாள் நல்ல நாளாக அமையும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த விரிசல் சரியாகும். மனதில் இருந்த பாரம் குறையும். சுப செலவுகள் ஏற்படும். உயர் அதிகாரிகளோடு வாக்குவாதம் வேண்டாம். வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் அனுசரித்து செல்வது நல்லது.

- Advertisement -