- Advertisement -

நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றும் பரணி தீப வழிபாடு

- Advertisement -

சிவபெருமானுக்கு உரிய மாதமாக திகழக்கூடியது கார்த்திகை மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட கார்த்திகை மாதத்தில் சிவபெருமானுக்காக நாம் தினமும் தீபம் ஏற்றி வழிபட்டாலும் சிவபெருமானுக்குரிய பரணி நட்சத்திர நாளன்று சிவபெருமானுக்காகவே ஏற்ற வேண்டிய தீபம்தான் பரணி தீபம் என்று பலரும் அறிந்திருப்பார்கள். இதை பலரும் தங்களுடைய வீட்டில் ஒவ்வொரு வருடமும் கடைபிடித்துதான் வருவார்கள். அப்படிப்பட்ட பரணி தீபம் ஏற்ற வேண்டிய நாளில் சிவபெருமானுக்கு எந்த பொருளை வாங்கி கொடுத்து வழிபாடு செய்தால் நம்முடைய நிறைவேறாத நீண்ட நாள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பரணி தீப வழிபாடு

ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு வேண்டுதலை முன்வைத்து இறைவழிபாட்டை மேற்கொள்வார்கள். அப்படி முழுமனதோடு இறைவழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது அந்த வேண்டுதல் நிறைவேறுவதற்குரிய வாய்ப்புகள் வந்து சேரும். இதில் முக்கியமான குறிப்பு அந்த வேண்டுதல் நியாயமான வேண்டுதலாக இருக்க வேண்டும் என்பதுதான். அதிலும் பிறரை கஷ்டப்படுத்தாத வேண்டுதலாக இருக்கும் பட்சத்தில் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. ஒரு சிலருக்கு இது விதிவிலக்காக எவ்வளவு முறை எப்படி வேண்டுதல் வைத்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேறாமலேயே இருக்கும். அப்படிப்பட்ட வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு உகந்த பரணி தீப வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

பொதுவாக கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பரணி நட்சத்திர நாளில் வீட்டில் சிவபெருமானை நினைத்து 5 தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் என்பது இருக்கும். சிவாலயங்களில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று காலையில் தான் இந்த பரணி தீபத்தை ஏற்றுவார்கள். ஆனால் வீடுகளில் பரணி நட்சத்திர நாள் அன்று அதாவது கார்த்திகை தீபத்திற்கு முதல் நாள் மாலை நேரத்தில் இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்வார்கள். இதில் எப்படி சிவபெருமானுக்காக நாம் தீபம் ஏற்றுகிறோமோ அதே போல் தான் அந்த பரணி நட்சத்திரம் வரக்கூடிய நாளில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.

அப்படி நாம் சிவபெருமானை வழிபாடு செய்ய போகும் பொழுது சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலைகளை வாங்கி மாலையாக தொடுத்து கொண்டு போய் சிவபெருமானுக்கு சாற்றச் சொல்லி கொடுக்க வேண்டும். இப்படி செய்வதோடு மட்டுமல்லாமல் வீட்டிலும் இந்த பரணி தீபத்தை ஏற்றும் பொழுது வீட்டில் இருக்கக்கூடிய சிவபெருமானின் படத்திற்கும், லிங்கத்திற்கும் வில்வ இலைகளால் மாலை கட்டி சாற்ற வேண்டும். இப்படி மாலை கட்டிப்போட்டு நாம் எந்த ஒரு வேண்டுதலை முன்வைக்கிறோம் அந்த வேண்டுதலை சிவபெருமான் விரைவிலேயே நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:ராஜ வாழ்வு தரும் கார்த்திகை தீப வழிபாடு

நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கக்கூடிய வேண்டுதலை பரணி நட்சத்திர நாளன்று இந்த முறையில் சிவபெருமானை வழிபாடு செய்து விட்டு வேண்டுதல் வைத்தோம் என்றால் அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -