- Advertisement -

நினைத்தது நடக்க செம்பருத்தி இலை பூஜை

விக்னங்களை தீர்க்கும் விநாயகரை நாம் பல வேண்டுதலுக்காக வழிபடுவோம். நினைத்த காரியம் நினைத்தபடியே நடந்தேற வேண்டும் என்பதற்காக பலரும் விநாயகர் பெருமானை வழிபடுவார்கள். விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் அந்த காரியத்தில் எந்தவித தடைகளும் இல்லாமல் நல்லபடியாக அந்த காரியம் நிறைவேறும். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானுக்கு செம்பருத்தி இலையை வைத்து எந்த முறையில் நாம் பூஜை செய்தால் நாம் நினைத்தது அனைத்தும் நடக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

செம்பருத்தி இலை பூஜை

இந்த வேண்டுதல் என்பது நியாயமான வேண்டுதலாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முழு மனதோடு விநாயகப் பெருமானை நம்பி இந்த வழிபாட்டை நீங்கள் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை நாம் செவ்வாய்க்கிழமை தோறும் செய்ய வேண்டும் அல்லது சங்கடஹர சதுர்த்தி தோறும் செய்யலாம். செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6:00 மணிக்கு மேல் தான் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.

- Advertisement -

ஆனால் செம்பருத்தி இலைகளை காலையிலேயே பறித்துக் கொள்ளுங்கள். 54,108 என்ற எண்ணிக்கையில் செம்பருத்தி இலைகளை பறித்து அதை தண்ணீர் இல்லாமல் சுத்தமான துணியை வைத்து துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு சந்தனத்தில் சிறிது பன்னீர் ஊற்றி நன்றாக கரைத்து விட்டு உங்களுடைய வலது கை மோதிர விரலை பயன்படுத்தியோ அல்லது மாதுளம் பழ குச்சியை பயன்படுத்தியோ அல்லது துளசியின் குச்சியை பயன்படுத்தியோ ஒவ்வொரு செம்பருத்தி இலையிலும் ஓம் என்று எழுத வேண்டும்.

பிறகு அதை நன்றாக காய வைத்து விடுங்கள். காலையில் குளித்திருந்தாலும் மாலையிலும் இந்த பூஜை செய்வதற்கு முன்பாக குளித்து விடுங்கள். பூஜை அறைக்கு வந்து விநாயகரின் படத்திற்கு முன்பாக இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து விநாயக பெருமானுக்கு நெய்வேத்தியமாக அவருக்கு பிடித்த சக்கரை பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை, அவல், பொறி என்று ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும்.

- Advertisement -

நாம் எழுதி வைத்திருக்கும் இந்த செம்பருத்தி இலைகளை எடுத்து வைத்துக்கொண்டு விநாயகப் பெருமானின் 108 நாமங்களை கூறி இந்த இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். 54 என்ற எண்ணிக்கையில் இலைகளை பறித்திருந்தால் ஒருமுறை மலரை வைத்தும் மற்றொரு முறை இந்த இலையை வைத்தும் அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு அர்ச்சனை செய்து முடித்துவிட்டு உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை விநாயகப் பெருமானிடம் வைக்க வேண்டும்.

செவ்வாய்க்கிழமை செய்வதாக இருந்தால் தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமை செய்ய வேண்டும். சங்கடஹர சதுர்த்தி செய்வதாக இருந்தால் மூன்று முதல் ஒன்பது சங்கடஹர சதுர்த்தி வரை செய்யலாம். முழு மனதோடு விநாயகப் பெருமானை நம்பி இந்த செம்பருத்தி இலை பூஜையை செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டிய நியாயமான கோரிக்கை முழுமையாக நிறைவேறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இதையும் படிக்கலாமே: பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு

எளிதில் கிடைக்கக்கூடிய இந்த செம்பருத்தி இலையால் விநாயகப் பெருமானுக்கு பூஜை செய்து அந்த பூஜையின் பலனால் நாம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -