
நீண்ட நாட்களாக ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளையும் செய்வோம். அந்த முயற்சிக்கு வெற்றிகள் கிடைக்கும் பொழுது அந்த ஆசைகள் நிறைவேறும். வெற்றிகள் கிடைக்காத பட்சத்தில் அந்த ஆசைகள் நிறைவேறாமல் போய்விடும். இது அனைவருக்கும் நடக்கக்கூடிய ஒன்றுதான். அந்த காரியம் நடந்து விட்டால் நம்முடைய வாழ்க்கையே மாறிவிடும், நல்ல நிலைக்கு சென்று விடுவோம் என்னும் பட்சத்தில் திரும்பத் திரும்ப அந்த காரியத்தை செய்ய முயற்சி செய்வோம். அப்படி முயற்சி செய்தும் நடைபெறவில்லை என்னும்பொழுது செய்யக்கூடிய ஒரு எளிமையான வசிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
எந்த ஒரு பொருள் நமக்கு வேண்டும் என்றாலும் அந்த பொருளுடன் நம்முடைய தொடர்பு என்பது அதிகமாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பொழுது தான் நம்மையும் அறியாமல் ஒருவித வசிய சக்தி என்பது ஏற்பட்டு அந்த பொருள் நம்மை வந்து சேரும் என்று அன்றைய காலத்திலேயே நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். இதை பயன்படுத்தி தான் முனிவர்களும், தேவர்களும், ரிஷிகளும் தன்னை மறந்து தான் அடைய வேண்டிய இலக்கை நினைத்து தியானம் செய்து அந்த இலக்கியம் அடைந்தார்கள். அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் நாம் நினைத்த செயலை செய்து முடிக்கவோ அல்லது நினைத்த பொருளை பெறவோ நினைத்த நபருடன் சேரவோ வசியம் செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
இந்த பரிகாரத்தை என்றைக்கு வேண்டுமானாலும் நாம் செய்யலாம். செய்பவர்களுக்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளாக இருக்க வேண்டும். இதற்கு மூன்றே மூன்று பொருட்கள் தேவைப்படும். அவை பச்சை கற்பூரம், குறுமிளகு, துளசி. வீட்டு பூஜை அறையில் அமர்ந்து ஒரு வெள்ளை நிற துணியை எடுத்து அதில் சிறிது பச்சை கற்பூரம், சிறிது குறுமிளகு, சிறிது துளசி இலைகள் இவற்றை வைத்து மூட்டையாக கட்டி உங்களுடைய குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தின் பாதத்தில் வைத்து விடுங்கள்.
இந்த மூட்டையை கட்டும் பொழுது எது நடக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை முழு மனதோடு நினைத்து அந்த காரியம் நடைபெற்று இருந்தால் எந்த அளவுக்கு மகிழ்ச்சியுடன் இருப்பீர்களோ அந்த அளவிற்கு மகிழ்ச்சியுடன் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய வேண்டும். இப்படி மூட்டையாக கட்டி தெய்வத்தின் பாதத்தின் கீழ் வைத்துவிட்டு தொடர்ந்து 13 நாட்கள் இந்த மூட்டைக்கு ஊதுபத்தி சாம்பிராணி தூபம் காட்டிவிட்டு ஐந்து நிமிடம் பூஜை அறையில் அமர்ந்து நீங்கள் நினைத்த காரியம் நடந்து விட்டது என்ற எண்ணத்தை மனதில் கொண்டு வந்து தியானம் செய்ய வேண்டும்.
இப்படி தொடர்ச்சியாக 13 நாட்கள் நீங்கள் செய்து வர நீங்கள் விரும்பிய காரியம் விரைவிலேயே நிறைவேறும். விரும்பிய பொருட்களை வாங்கும் சூழ்நிலையும் உண்டாகும். விரும்பிய நபர் உங்களை வந்து செய்வார். முக்கியமான குறிப்பு பிறரை புண்படுத்தாமல் தனக்குரிய பொருளை நியாயமாகப் பெற வேண்டும் என்று நினைத்து இந்த பரிகாரத்தை செய்தால் தான் அதன் பலன் முழுமையாக கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை நன்மைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் தீய செயல்களுக்கும், தீய எண்ணங்களுக்கு பயன்படுத்தினால் அதனால் பிரச்சனைகளை ஏற்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.