
ஒரு மனிதனின் கௌரவத்தை நிர்ணயிக்கக் கூடியது அவர் செய்யக்கூடிய வேலை தான். அப்படிப்பட்ட வேலை மனநிறைவை தரக்கூடிய வேலையாக இருக்கும் பட்சத்தில் தான் அந்த வேலையில் சிறந்து விளங்க முடியும். ஒரு சிலருக்கு தாங்கள் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் இருக்கும். இன்னும் சிலருக்கு தாங்கள் ஆசைப்பட்ட வேலை கிடைக்காமல் இருக்கும். அதேபோல் இன்னும் சிலருக்கோ தங்களுடைய வேலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் ஒரே நிலையில் இருந்து கொண்டு இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய விடாமுயற்சியோடு நரசிம்மரையும் வழிபாடு செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் அவர்கள் வேலை தொடர்பான அனைத்து வேண்டுதலும் நிறைவேறும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடியவர் நரசிம்மர் என்று நம் அனைவருக்கும் தெரியும். நரசிம்மரை முழு மனதோடு நம்பி நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடும் நமக்கு பலனை தரும். அதற்கு நரசிம்மர் அவதாரம் செய்த கதையே ஒரு சான்றாக திகழ்கிறது. சாதாரண ஒரு சிறிய பாலகன் தன் மீது வைத்த நம்பிக்கையின் காரணமாகவும் தூணிலும் இருப்பார் என்று கூறியதன் விளைவாகவும் தூணில் இருந்து தான் நரசிம்மர் பிறந்தார் என்று நாம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நரசிம்மரை முழு மனதோடு நம்பி நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாடு நம்முடைய வேலை தொடர்பான வேண்டுதலை நிறைவேற்றும்.
பொதுவாக வேலை தொடர்பான வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றால் நாம் புதன்கிழமை வழிபாடு செய்ய வேண்டும். புதன் பகவான் தான் வேலை தொடர்பான அனைத்திற்கும் காரண கர்த்தாவாக திகழ்கிறார். அதனால் புதன்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய நரசிம்மரின் ஆலயத்திற்கு சென்று நரசிம்மரை வழிபாடு செய்ய வேண்டும். நரசிம்மருக்கு துளசி மாலையை வாங்கிக் கொண்டு போய் கொடுத்து பாணகத்தை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்தாலே போதும். வழிபாட்டை செய்து முடித்த பிறகு பாணகத்தை ஆலயத்திற்கு வருபவர்களுக்கு பிரசாதமாக தர வேண்டும்.
அருகில் நரசிம்மரின் ஆலயம் இல்லை என்று நினைப்பவர்கள் வீட்டிலேயே நரசிம்மரின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு முன்பாக இதே முறையில் வழிபாடு செய்யலாம். ஒருவேளை வீட்டில் நரசிம்மரின் படமும் இல்லை என்பவர்கள் பெருமாளின் படத்திற்கு முன்பாக நரசிம்மரை நினைத்து ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டை ஒவ்வொரு புதன்கிழமை செய்வதோடு பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை தினமும் 27 முறை உச்சரிப்பதன் மூலம் வேலை தொடர்பான அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும்.
“ஓம் வஜ்ரனாகய வித்மஹே
தீஷ்ன தம்ஸ்டீர்ய தீமஹி
தந்தோ நரசிம்மஹ பிரசோதயாத்”
இதையும் படிக்கலாமே:திங்கட்கிழமை சாய்பாபா வழிபாடு
முழு மனதோடு நரசிம்மரை இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வேலை தொடர்பான அனைத்து வேண்டுதலும் விரைவிலேயே நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.