- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

ஒரே வாரத்தில் பாத வெடிப்பு நீங்கி மிருதுவான பாதத்தை பெற

- Advertisement -

நம்மை தாங்க கூடிய ஒரு உறுப்பு என்றால் அது நம்முடைய கால்கள் தான். அதிலும் குறிப்பாக நம்முடைய பாதத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் இருக்கிறது. இந்த பாதத்தை நாம் எந்த அளவிற்கு சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் பார்த்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நாமும் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்று கூறலாம். பாதத்தில் சேற்றுப்புண், பித்த வெடிப்பு, தோல் நோய்கள் என்று பல பிரச்சினைகள் உண்டாகும். ஏனெனில் பாதம் தான் நேரடியாக பூமியுடன் தொடர்புடையது பூமியில் இருக்கக்கூடிய கிருமிகள் அனைத்தும் பாதத்தின் ரூபமாக தான் நம்முடைய உடலுக்குள் வரும் என்று கூறப்படுகிறது. அதனால் பாதத்தை எந்த அளவிற்கு தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டுமோ அந்த அளவிற்கு நாம் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி தூய்மையாக வைத்துக் கொள்ளவில்லை என்றாலும் பாதத்தை ஒழுங்காக பராமரிக்கவில்லை என்றாலோ நம்முடைய பாதத்தில் பலவிதமான தொற்றுகள் ஏற்பட்டு அதன் மூலம் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பாத வெடிப்பு வந்ததும் அதற்குரிய முழுமையான பராமரிப்பை நாம் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அந்த பாத வெடிப்பே அதிக அளவு பெரியதாகி அதிலிருந்து ரத்தம் வருவதற்குரிய வாய்ப்புகள் கூட உண்டாகும். மேலும் நமக்கு அதனால் வலியும் வேதனையும் அதிகமாகவே இருக்கும். இந்த பாத வெடிப்பை முற்றிலும் நீக்கி ஆரோக்கியமான மிருதுவான பாதத்தை பெறுவதற்கு என்ன செய்யலாம் என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

முதலில் பாதத்தில் இருக்கக்கூடிய கிருமிகளை நாம் நீக்க வேண்டும். இதற்கு நமக்கு ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீர் வேண்டும். அந்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் இரண்டு கைப்பிடி அளவு வேப்பிலையை போட வேண்டும். ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை போட வேண்டும். இரண்டு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை போட வேண்டும். இதை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடுங்கள். வேப்பிலையின் சாறு அந்த தண்ணீரில் இறங்க வேண்டும். பிறகு இதை எடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி நம் கால் சூடு பொறுக்கும் அளவிற்கு அதனுடன் சிறிது தண்ணீரையும் கலந்து அதற்குள் நம்முடைய கால்கள் இரண்டையும் வைக்க வேண்டும். இப்படி வைப்பதற்கு முன்பாக காலை தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவி பிறகு தான் வைக்க வேண்டும். ஐந்திலிருந்து பத்து நிமிடம் அந்த வெதுவெதுப்பான தண்ணீரிலேயே நம்முடைய பாதங்கள் இருக்கட்டும்.

10 நிமிடம் கழித்து பாதங்களை அந்த தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு துருவிய மெழுகை சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு கடுகு எண்ணெயை சேர்க்க வேண்டும். இதை டபுள் பாய்லிங் மெத்தடில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீருக்குள் இந்த கிண்ணத்தை வைத்து அந்த மெழுகு முற்றிலும் கரைந்து எண்ணெயுடன் சேரும் அளவிற்கு வைக்க வேண்டும். இது நன்றாக சேர்ந்த பிறகு எண்ணையும் மெழுகும் ஒன்றாக கலந்த பிறகு இது அப்படியே எடுத்து எந்த இடத்தில் பாத வெடிப்பு இருக்கிறதோ அந்த இடத்தில் தடவ வேண்டும். பிறகு நாம் படுக்கச் செல்லலாம்.

- Advertisement -

காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் இந்த மெழுகு எண்ணெயை நாம் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு காலில் தேங்காய் எண்ணெயை தேய்த்துக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 7 நாட்கள் இரவு படுக்கச் செல்வதற்கு முன் செய்வதன் மூலம் நம்முடைய கால்களில் இருக்கக்கூடிய பித்தவெடிப்பு முற்றிலும் நீங்கி மிருதுவான அழகான பாதத்தை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: அடர்த்தியான முடியை பெற உதவும் தேங்காய் பால் மூலிகை எண்ணெய்

எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அதை முழுமையுடன் செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி ஒருநாள் செய்துவிட்டு அப்படியே விடாமல் தொடர்ச்சியாக ஏழு நாட்களில் இருந்து பத்து நாட்கள் வரை இந்த முறையை நாம் பின்பற்றும் பொழுது நம்முடைய பாதங்கள் மிருதுவாக இருக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -