- Advertisement -

ஒவ்வொரு நாளும் சிறப்பான நாளாக மாற

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் மாறி நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதான் ஒவ்வொரு நாள் பிறக்கும் பொழுதும் நாம் நினைப்போம். ஆனால் பலருக்கும் அப்படி நடப்பது கிடையாது. பலருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் இருந்து கொண்டு தான் இருக்கும். பிறக்கின்ற புதிய நாள் தங்களுடைய வாழ்க்கையை புதுவிதமாக மாற்ற வேண்டும் என்றும் முன்னேற்றகரமான வாழ்க்கையாக மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் கூற வேண்டிய பெருமாள் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒவ்வொரு நாளும் சிறப்பான நாளாக மாற

நம் வாழுகின்ற வாழ்க்கை சிறப்பான வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நம் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். பிரம்மர் நம்மை படைத்தவர், நம்மை காக்கக்கூடிய தெய்வமாக பெருமாள் தான் திகழ்கிறார். நம்முடைய கர்ம வினைகளை நீக்கி மறுபிறவி அற்ற நிலைக்கு கொண்டு செல்பவர் தான் சிவபெருமான். அதனால் நாம் வாழ்கின்ற வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும், வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்றால் நாம் கண்டிப்பாக முறையில் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி பெருமாளை வழிபாடு செய்வதற்கு சிறப்பான வழிமுறைகள் இருந்தாலும் அனுதினமும் சிறப்பான நாளாக மாறுவதற்கு கூற வேண்டிய பெருமாள் மந்திரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

பெருமாளுக்கு என்று பலவிதமான மந்திரங்கள் இருக்கின்றன. அந்த மந்திரங்கள் அனைத்தையுமே கூற இயலாவிட்டாலும் மிகவும் எளிமையான மந்திரமான ஒரு மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரத்தை கூறினாலேயே அன்றைய தினம் நமக்கு சிறப்பான தினமாக மாறும். இதை தினமும் கூற வேண்டும். இந்த மந்திரத்தை கூறுவதற்கு எந்தவித தடைகளும் கிடையாது. காலையில் கண் விழித்ததும் இந்த மந்திரத்தை நாம் கூறலாம். இத்தனை முறை கூற வேண்டும் என்ற எண்ணிக்கையும் கிடைக்காது. குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் முழு மனதோடு பெருமாளை நினைத்து கூறினால் போதும்.

இந்த மந்திரத்தை ஆண்கள், பெண்கள் என்று யார் வேண்டுமானாலும் கூறலாம். பெண்கள் தங்களுடைய மாதாந்திர பிரச்சனைகள் இருக்கும் சமயத்திலும் இந்த மந்திரத்தை கூறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பல் துலக்க வேண்டும், குளிக்க வேண்டும், சுத்தமாக இருக்க வேண்டும், அசைவம் சாப்பிடக்கூடாது என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. அதைப்போல் இந்த மந்திரத்தை நம்முடைய வீட்டு பூஜை அறையில் அமர்ந்து கொண்டு தான் கூற வேண்டும் என்றும் கிடையாது. எங்கு வேண்டுமானாலும் நாம் அமர்ந்து கொண்டு முழு மனதோடு பெருமாளை நினைத்து கூறினால் போதும்.

- Advertisement -

எந்த நாள் வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை நாம் கூற ஆரம்பிக்கலாம். இருப்பினும் பெருமாளுக்கு உரிய நாட்களிலோ அல்லது மகாலட்சுமிக்குரிய சிறப்பு மிகுந்த நாட்களிலோ இந்த மந்திரத்தை கூறத் தொடங்கினோம் என்றால் அது இன்னும் சிறந்த பலனை தரும். தொடர்ச்சியாக 10 நாட்கள் இந்த மந்திரத்தை நாம் கூறும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படுவதை நம்மால் உணர முடியும். நம் வாழ்நாள் முழுவதும் தினமும் ஐந்து நிமிடம் பெருமாளை நினைத்து இந்த மந்திரத்தை கூறினால் நம்முடைய வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களும் நல்ல முன்னேற்றங்களும் உண்டாகும்.

மந்திரம்


“அபயக்கர கோவிந்தா வஸமானய ஸ்வாஹா”

இதையும் படிக்கலாமே: சுக்ர தோஷம் நீங்கவும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவும்

எளிமையான இந்த ஒரு வரி மந்திரத்தை முழு மனதோடு பெருமாளை நினைத்து கூறுபவர்களுக்கு அவர்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி சிறப்பான வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -