
எல்லோருக்குமே லட்ச லட்சமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் இருக்கத்தான் செய்கிறது. ஒரே நாளில் எல்லாம் மாறி விடாது. ஒரே நாளில் மொத்தமாக லட்ச லட்சமாக ரூபாய் கொட்டாது. கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதிக்கணும், கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்க தொடங்கனும். சிறுக சேமித்தால், பெருக வாழலாம் என்று சொல்லுவார்கள்.
அதே போல தான் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையில் சேமிக்க தொடங்குங்கள். ஒரு காலகட்டத்தில் அந்த சேமிப்பு உங்களை காப்பாற்றும். சேமிக்க வழியே இல்லை. வரும் பணமெல்லாம் செலவாகிறது என்ற காரணத்தை சொல்லவே சொல்லாதீங்க. சேமிப்பை உயர்த்துவதற்கு உண்டான ஒரு ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.
பணத்தை சேமிப்பதற்கு அழகாக ஒரு மரத்தால் செய்யப்பட்ட பெட்டியை வாங்கிக் கொள்ளுங்கள். இப்போது அதற்கு கையில் பணம் இல்லை என்றால், ஒரு அழகான பணம் வைக்கும் டப்பா வாங்கிக் கொள்ளுங்கள். அழகான பணம் சேமிக்கும் பெட்டி மலிவான விலைகளில் கூட கடைகளில் இப்போது கிடைக்கிறது. அதை வாங்கி அதன் உள்ளே பச்சை நிற துணியை விரிக்கவும். அந்த டப்பாவுக்கு மேலே மஞ்சளில் சுவஸ்திக் சின்னத்தை வறையுங்கள்.
டப்பாவுக்கு உள்ளே, பச்சை கற்பூரத்தை நுணுக்கி தூவுங்கள், ஜவ்வாது 1 சிட்டிகை, மஞ்சள் குங்குமம் 1 சிட்டிகை, ஏலக்காய் 2, கிராம்பு 2, சோழி 2, தாமரை விதை 2, கோமதி சக்கரம் 2, ஒற்றை கண் தேங்காய் 1 (குட்டி குட்டி சைஸில் கிடைக்கும்), சிவப்பு குன்றின்மணி 5, வெட்டிவேர் சிறிதளவு, அஷ்ட லட்சுமிகளின் நாணயம் இருந்தால் வைக்கலாம். இல்லையென்றால் 8 ஐந்து ரூபாய் நாணயங்களை அதில் போட்டு விடுங்கள். குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மகாலட்சுமியே பிரார்த்தனை செய்து 101 ரூபாயை அந்த பணப்பெட்டியில் வையுங்கள்.
இன்று மாலை வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் போது இந்த பரிகாரத்தை செய்து, பணத்தை சேமிக்க தொடங்குங்கள். பணப்பெட்டியில் வைத்திருக்கும் இந்த பொருட்கள் எல்லாம் பணத்தை ஈர்த்துக் கொடுக்கக்கூடிய பொருட்கள். ஒட்டுமொத்த நேர்மறை ஆற்றலும் வந்து உங்களுடைய பணப்பெட்டியில் தங்க வேண்டும்.
இதோடு சேர்த்து உங்களுடைய நம்பிக்கையும் இதில் அடங்கி இருக்க வேண்டும். அப்போது அந்த பணப்பெட்டியில் மேலும் மேலும் சேமிப்பு உயர தொடங்கிவிடும். வீட்டில் இருக்கும் பெண்களும் இதை செய்யலாம். ஆண்களும் இதை செய்யலாம். உங்களுடைய பிள்ளைகளுக்கும் இதை சொல்லிக் கொடுங்கள். அவர்களுடைய சேமிப்பு பழக்க வழக்கமும் தொடரட்டும்.
நிச்சயம் வீட்டில் பணக்கஷ்டம் வராமல் இருக்க இந்த பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும். மேலே சொன்ன பொருட்கள் எல்லாம் சின்ன சின்ன சைஸில் வாங்கிக்கோங்க. நாட்டு மருந்து கடையில் கேட்டாலே கிடைக்கும். அப்படியே பணப்பெட்டியில் இந்த பொருட்கள் எல்லாம் இருக்கட்டும். இதை மாற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது.
இதையும் படிக்கலாமே: வெள்ளிக்கிழமை பச்சை கற்பூர பரிகாரம்
வருடத்திற்கு ஒருமுறை ஏலக்காய் கிராம்பு இந்த பொருட்களை எல்லாம் மட்டும் கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள். பச்சைக் கற்பூரம் வாசம், ஜவ்வாது வாசம் நீங்கிவிட்டால் அந்த பொருட்களை புதிதாக சேர்த்தால் போதும். மற்ற பொருட்கள் எல்லாம் அப்படியே உங்கள் பணப்பெட்டியில் இருக்கட்டும். நிச்சயம் உங்கள் பணம் பிரச்சனை தீரும். சேமிப்பு உயரும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.