
பணம், ஒரு இடத்தில் நிலையாக தாங்காது. ஒரே இடத்தில் பணத்தை தேக்கி வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு பணம் வருவதும் போவதுமாக இருக்கும் பட்சத்தில் தான், அந்த பணத்தின் மூலம் ஒரு பயன் இருக்கும். ஒரு வேலை கிரக சூழ்நிலை காரணமாக பணம் ஒரே இடத்தில் தங்கி தேங்கி நின்று விட்டால். அந்த பணத்தின் மூலம் எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது.
பணத்தை எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டே இருந்தால், நமக்கு சந்தோஷம் கிடைத்து விடுமா. நிச்சயம் கிடைக்காது. அந்த பணத்தை எடுத்து செலவு செய்யும்போது தான் நமக்கு சந்தோஷம் ஏற்படுகிறது. அதற்காக மொத்த பணத்தையும் செலவு செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. தேவைக்கு ஏற்ப சேமிப்பும் இருக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட தொகை சேமிப்பு வைத்தது போக மீதம் இருக்கும் பணத்தை செலவு செய்து சந்தோஷமாக வாழ்ந்தால் தான் வாழ்க்கை இனிமையாக மாறும். அப்போது பண சுழற்சி என்பது நாளுக்கு நாள் சீராக இருக்க வேண்டும். அதற்கு என்ன பரிகாரம் செய்வது. இதோ ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிமையான வழி இந்த பதிவில் உங்களுக்காக.
பணத்தை உழைத்து சம்பாதிக்க வேண்டும், பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் பரிகாரம். வெறுமனே பரிகாரம் மட்டும் செய்தால் பணம் நம் வீடு தேடி வராது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இன்று வெள்ளிக்கிழமை. நிறைந்த மாசி மாத வெள்ளிக்கிழமை. பூஜை அறையில் கட்டாயம் மகாலட்சுமிக்கு அனைவரும் பூஜை செய்வோம் அல்லவா. அந்த பூஜையோடு சேர்த்து இந்த பரிகாரத்தையும் செய்யுங்கள். மகாலட்சுமியின் திருவுருவப்படத்திற்கு முன்பாக கட்டாயம் எல்லோர் வீட்டிலும் கொஞ்சம் இடம் இருக்கும்.
அந்த இடத்தில் அரிசி மாவால் இன்ஃபினிட்டி (infinity symbol) கோலத்தை போட்டு விடுங்கள். எட்டு என்ற எண், இப்படி படுக்க வைத்த படி போடுவது தான், இந்த இன்ஃபினிட்டி சிம்பல். மேலே மகாலட்சுமி பக்கத்தில் இருக்கும் புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு தெரியும். இது சுக்கிரனுக்கு உரிய குறியீடாக சொல்லப்படுகிறது.
இந்த கோலத்தை பூஜை அறையில், பச்சரிசி மாவால் போட்டு வைக்க, அதுவும் மகாலட்சுமி முன்பு இந்த கோலத்தை போட்டு வைக்க, உங்களுடைய வீட்டில் பண சுழற்சி சீராக இருக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூஜை அறையை சுத்தம் செய்யும் போது, இந்த பழைய கோலத்தை எடுத்துவிட்டு புதுக்கோலத்தை போட வேண்டும்.
தினமும் விளக்கு ஏற்றி மகாலட்சுமிக்கு தூபம் காட்டி, பணவரவு சீராக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாலே போதும். உங்களுடைய பண பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை. பெரிய அளவில் செலவு செய்யப்போவதில்லை. 8 என்ற எண், கோலமாவில் வரையப் போகிறீர்கள். அவ்வளவுதான். பிறகு வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் போது இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள் போதும்.
ஓம் ஸ்ரீம் நமஹ !
இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரிக்க மாசி வெள்ளிக்கிழமை வழிபாடு
இவ்வளவுதான். வெள்ளிக்கிழமை வழிபாட்டில் இந்த இரண்டு விஷயங்களையும் சேர்த்துக் கொண்டால் நீங்கள் தான் அந்த மகாலட்சுமிக்கு பிடித்த நபராக மாறுவீர்கள். மகாலட்சுமியே சுலபமாக வசியம் செய்யலாம். சுக்கிர யோகம் கிடைக்கும். பண பிரச்சினை இல்லாமல் சந்தோஷமாக வாழலாம். நம்பிக்கை இருந்தால் மட்டும் இதை செய்து பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.