- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வரவு அதிகரிக்க மாசி வெள்ளிக்கிழமை வழிபாடு

பண வரவு அதிகரிக்க மாசி வெள்ளிக்கிழமை வழிபாடு

- Advertisement -

நும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தை சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இருப்பினும் நமக்கு நம்முடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு ஏற்படுவது இல்லை. அப்படியே ஏற்பட்டாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் அதிக செலவாகி விடுகிறது. அதனால் பலரும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைக்கும் நாம் சம்பாதிக்கக்கூடிய பணமே காரணமாக திகழ்கிறது. அப்படி நாம் சம்பாதிக்கக்கூடிய பணம் பல மடங்கு அதிகரிப்பதற்கு மாசி மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மாசி வெள்ளிக்கிழமை வழிபாடு

ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் உகந்த கிழமையாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாரை நாம் சிறப்பாக வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் பலவிதமான சிறப்புகள் உண்டாகும். மகாலஷ்மி தாயாரை மட்டும் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்யாமல் சுக்கிர பகவானையும் சேர்த்து நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய அடிப்படைத் தேவைகள் பூர்த்தி அடைவதற்குரிய பண வரவுகள் உண்டாகும். அதனால் கடன் பிரச்சினை என்பதே இல்லாமல் போய்விடும். அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று வரக்கூடிய சுக்கிர ஹோரையில் செய்ய வேண்டும். இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ள இந்த வழிபாட்டை செய்வது சிறப்ப. இதற்கு முதலில் வீட்டு பூச்சி அருகில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீபங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒரு சிறிய மனைப் பலகை ஒன்றை போட்டு அதில் மகாலட்சுமி தாயாரின் படத்தை வைத்துக் கொள்ளுங்கள். மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு பக்கத்தில் வீட்டில் சுக்கிர பகவானின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்தை வைத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் ஒரு அகல்விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி அந்த தீபத்தை சுக்கிர பகவானாக பாவித்து கொள்ள வேண்டும்.

பிறகு மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக ஒரு சிறிய அகல்விளக்கில் கல் உப்பை வைக்க வேண்டும். சுக்கிர பகவானாக நினைத்து நாம் ஏற்றிய தீபத்திற்கு முன்பாக ஒரு சிறிய அகல் விளக்கில் வெள்ளை மொச்சை வைக்க வேண்டும். பிறகு “ஓம் மகாலட்சுமி தாயே போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை 9 முறை கூற வேண்டும். அதேபோல் “ஓம் சுக்கிர பகவானே போற்றி ஓம்” என்னும் மந்திரத்தையும் ஒன்பது முறை கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அன்று இரவு முழுவதும் இந்த கல்லுப்பும், வெள்ளை மொச்சையும் அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும். மறுநாள் காலையில் சனிக்கிழமை அன்று எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய இந்த கல்லுப்பை தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். வெள்ளை மொச்சை பறவைகளுக்கு தானமாக தந்துவிட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:மாசி அமாவாசை குலதெய்வ வழிபாடு

இப்படி மாசி மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாம் வழிபாடு செய்துவர சுக்கிர பகவான் மற்றும் மகாலட்சுமி தாயாரின் அருளால் நம்முடைய வாழ்வில் பணத்திற்கு எந்தவித குறையும் இருக்காது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்