ஒவ்வொருவரும் காலை மாலை என இருவேளையும் வீட்டில் விளக்கு ஏற்றுவது பூஜை செய்வது ஆலயம் செல்வது எல்லாமே நம் வீடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான். வீடு சுபிட்சமாக இருக்க வேண்டுமெனில் அங்கு இறையருள் நிறைந்திருக்க வேண்டும். அந்த இறையருளை பெறுவதற்காக தான் நாம் இத்தனை வழிபாடுகளையும் செய்கிறோம்.
அதிலும் குறிப்பாக தீபம் ஏற்றுவது இந்த வழிபாடுகளில் முக்கியமானதாக சொல்லப்படுகிறது. அப்படி ஏற்றக் கூடிய இந்த ஒரு தீபம் நம்முடைய வாழ்க்கையே மாற்றி விடும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
வீடு சுபிட்சமாக இருக்க பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்ற வேண்டிய தீபம்
வீட்டில் தீபம் ஏற்றுவது எத்தனை பெரிய நன்மை என்று யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அதிலும் காலையில் மாலையிலும் தீபம் ஏற்றும் வீட்டில் சகல வித பிரச்சனைகளும் கரைந்து காணாமல் போகும் என்று சொல்வார்கள். இவை அனைத்திலும் விட சிறப்பு வாய்ந்தது பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம் ஏற்றுக் கூடிய தீபம்.
அப்படி பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றக் கூடிய ஒரு தீபத்தை ஒரு சில வழிமுறைகளை பின்பற்றி ஏற்றும் பொழுது வீட்டில் அனைத்து விதமான நலன்களையும் ஒரு சேர கொண்டு வந்து சேர்க்கும் என்று சொல்லப்படுகிறது. அதுவும் வாரத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் இது செய்தால் போதும் என்றும் சொல்லப்படுகிறது. அது என்னவென்று பார்க்கலாம்.
இந்த தீபத்தை நீங்கள் வாரத்தில் ஒரு நாள் ஏற்ற வேண்டும். அது எந்த நாளாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது உங்களுடைய சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்து கொள்ளுங்கள். அதற்கு ஒரு சிறிய தட்டில் கொஞ்சமாக பச்சரிசியை பரப்பி அதன் மேல் ஒரு விளக்கு வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இந்த விளக்கானது அகல் விளக்கு, காமாட்சி அம்மன் விளக்கு, வெள்ளி விளக்கு, வாராகி அம்மன் விளக்கு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இந்த விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதே போல் விளக்கை சுற்றி நல்ல வாசம் மிக்க மலர்களை வைக்க வேண்டும. இந்த தீபம் ஏற்றும் நேரத்தில் வீடு பூஜை அறை அனைத்திலும் நல்ல தெய்வீக மணம் கமழும் படி தூபம் போட்டு விடுங்கள். இந்த தீபம் கிழக்கு முகமாக எரியட்டும் நீங்கள் வடக்கு பார்த்து அமர்ந்து உங்களுக்கு பிடித்த தெய்வத்தின் மந்திரம் அல்லது குலதெய்வம் மந்திரம் ஏதாவது சொல்லுங்கள்.
எதுவும் தெரியவில்லை என்றால் அந்த தீபத்தின் முன் அமர்ந்து ஓம் நமசிவாய என்ற நாமத்தை மட்டும் 108 முறை சொல்லுங்கள் போதும். இந்த தீபம் வீட்டில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எரியும் போது சகல தெய்வங்களும் உங்கள் வீடு தேடி வந்து ஆசி வழங்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் வீட்டில் செல்வ கடாக்ஷம் பெருகி நலமுடன் நாம் வாழலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:
முதல் வாரத்தில் திங்கட்கிழமை ஏற்றினால் அடுத்த வாரத்தில் திங்கட்கிழமை தான் ஏற்ற வேண்டும் என்று கிடையாது உங்களுக்கு என்ன நாள் முடிகிறதோ அந்த நாளில் ஏற்றலாம். ஆனால் வாரத்தில் ஒரு நாள் கட்டாயமாக இந்த முறையில் தீபம் ஏற்ற வேண்டும் இந்த தீப வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலனை அடையலாம்.