
அமாவாசை முடிந்து வரக்கூடிய மூன்றாவது நாளை தான் மூன்றாம் பிறை என்று கூறுகிறோம். இந்த நாளில் பிறை நிலவை காண்பது என்பது மிகவும் சிறப்பு. ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய மூன்றாம் பிறை தரிசனத்தை மேற்கொள்பவர்களுக்கு ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டாகும். தொடர்ச்சியாக யார் ஒருவர் ஒரு வருடம் முழுவதும் மூன்றாம் பிறை தரிசனத்தை காண்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித குறையும் இருக்காது என்று புராணங்கள் கூறுகின்றன. ஆனால் இதை பார்ப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனென்றால் பல இடங்களில் மேகமூட்டும் காரணமாக மூன்றாம் பிறையை தரிசனம் செய்ய இயலாது. மூன்றாம் பிறையை தரிசனம் செய்தாலும் செய்யாவிட்டாலும் சந்திர பகவானை நினைத்துக் கொண்டு இந்த ஒரு வரியை எழுதுபவர்களுக்கு பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி பணவரவு அதிகரிக்கும். அதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பௌர்ணமியாக இருக்கக்கூடிய சந்திர பகவான் சிறிது சிறிதாக தேய்ந்து ஒன்றும் இல்லாமல் அமாவாசை நாளில் இருப்பார். பிறகு திரும்பவும் சிறிது சிறிதாக வளர்ந்து முழு நிலவாவார். இதில் தேய்பிறை வளர்பிறை என்று இரண்டு வரும். சந்திரன் வளருகின்ற நாட்களில் நாம் செய்யக்கூடிய காரியங்கள் வளர்ந்து கொண்டே செல்லும் என்றும் தேய்பிறை நாட்களில் நாம் செய்யக்கூடிய காரியங்கள் தேய்ந்து கொண்டே செல்லும் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் வளர்பிறையில் வரக்கூடிய திதிக்கும் தேய்பிறையில் வரக்கூடிய திதிக்கும் பலன்கள் என்பது மாறுபடுகின்றன.
அந்த வகையில் இன்று மூன்றாம் பிறை தரிசனம். இந்த நாளில் நாம் பிறை நிலவை தரிசனம் செய்கிறோமோ இல்லையோ சந்திர பகவானை நினைத்து இந்த ஒரு வரியை எழுதினால் போதும். சந்திர பகவானின் அருளால் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி பணவரவு அதிகரிக்கும். இந்த ஒரு வரி வாக்கியத்தை 27 முறை எழுதவேண்டும். ஏனென்றால் சந்திர பகவானுக்கு 27 மனைவிகள் என்றும் அந்த 27 மனைவிகள்தான் நட்சத்திரங்களாக திகழ்கின்றன என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் இன்றைய தினம் சந்திர பகவானை நினைத்து யார் ஒருவர் இந்த வரியை 27 முறை எழுதுகிறார்களோ அவர்களுக்கு சந்திர பகவானின் பரிபூரண அருள் கிடைப்பதோடு பண வரவும் அதிகரிக்கும்.
“பிறை வளர்வது போல் என்னிடம் உள்ள செல்வம் வளர்கிறது”
இந்த வரியை சந்திர பகவானை நினைத்துக் கொண்டு 27 முறை ஒரு வெள்ளை நிற பேப்பரில் எழுதி அதை மடித்து பணம் இருக்கும் இடத்தில் சந்திர பகவானை நினைத்து வைத்து விட வேண்டும். இந்த பேப்பர் எப்பொழுது கிழியும் நிலைக்க வருகிறதோ அப்பொழுது கால் பிடாத இடத்திலோ அல்லது ஓடுகின்ற தண்ணீரிலோ போட்டு விடலாம். இதை நாம் இன்று இரவுக்குள் எழுதி பணம் இருக்கும் இடத்தில் வைப்பதன் மூலம் மூன்றாம் பிறைக்கு பிறகு வரக்கூடிய அனைத்து நாட்களும் வளர்பிறையாகவே வரும் என்பதைப்போல நம்முடைய செல்வமும் வளர்ந்து கொண்டு செல்லும் என்று நம்பப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: ஆடி மாதம் அம்மன் வளையல்
மூன்றாம் பிறையை பொறுத்தவரை பலவிதமான வழிபாடுகளும் பரிகாரங்களும் இருக்கின்றன. மிகவும் எளிமையான முறையில் எந்த செலவும் இல்லாமல் செய்யக்கூடிய இந்த பரிகாரத்தை முழுமனதோடு செய்வதன் மூலம் பணவரவு அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.