- Advertisement -

பண வரவை அதிகரிக்கும் பச்சரிசி பரிகாரம்

- Advertisement -

பெருமாளுக்குரிய மாதமான மார்கழி மாதத்தில் பெருமாளுக்குரிய திதியான ஏகாதசி திதி வருவது என்பது மிகவும் சிறப்புக்குரியது. அதுவும் வியாழக்கிழமையுடன் சேர்ந்து வரும்பொழுது அதை குபேர ஏகாதசி என்றே கூறுகிறோம். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த நாளில் நம்முடைய பணவரவை அதிகரிப்பதற்கும், நமக்கு இருக்கக்கூடிய தரித்திரம் நீங்கவும், செல்வ வளம் அதிகரிக்கவும் சில தாந்திரீக பரிகாரங்களை செய்தால் அதனால் நமக்கு நல்ல பலன் கிடைக்கும். அந்த பரிகாரங்களில் ஒன்றான பச்சரிசி பரிகாரத்தை எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பண வரவை அதிகரிக்கும் பரிகாரம்

பெருமாளுக்கு உரிய வழிபாட்டை செய்யும் பொழுது நம்மை அறியாமலேயே நாம் மகாலட்சுமியையும் வழிபாடு செய்கிறோம். அதனால் தான் பெருமாளை வழிபாடு செய்பவர்களுக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பெருமாளுக்கு உரிய திதியான ஏகாதசி திதி அன்று நாம் மகாலட்சுமிக்குரிய பொருளான பச்சரிசியை வைத்து பரிகாரம் செய்யும் பொழுது இதுவரை தடைப்பட்டு இருக்கக்கூடிய பணவரவு தடை இன்றி ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாக்கும். பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும். பணவரவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த பரிகாரத்தை இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி இரவு 11 மணிக்குள் செய்து முடித்து விட வேண்டும். இதற்கு நமக்கு முனை உடையாத 11 பச்சரிசி வேண்டும். அடுத்ததாக ஒரு வெள்ளை நிற பேப்பர் வேண்டும். சிவப்பு அல்லது பச்சை நிற மை கொண்ட பேனா வேண்டும். முதலில் ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த வெள்ளை நிற பேப்பரில் பச்சை அல்லது சிவப்பு நிற மையை பயன்படுத்தி ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வரைந்து முடித்த பிறகு ஒரே ஒரு அரிசியை நம்முடைய உள்ளங்கையில் வைத்துக்கொண்டு நாளா புறமும் பணம் என்னை தேடி வந்து கொண்டே இருக்கிறது பணவரவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று கூறி அந்த பச்சரிசியை ஸ்வஸ்திக் சின்னத்திற்கு நடுவே வைக்க வேண்டும்.

இப்படி ஒவ்வொரு பச்சரிசியும் நம்முடைய வலது உள்ளங்கையில் வைத்து இந்த வார்த்தையை கூறிவிட்டு பிறகு ஸ்வஸ்திக் சின்னத்தில் வைக்க வேண்டும். 11 பச்சரிசிகளையும் வைத்து முடித்த பிறகு இதை அப்படியே மடித்து நம்முடைய பணம் வைத்திருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருளால் நமக்கு செல்வ வளம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கொடுத்த இடத்தில் இருந்து பணம் வருவதற்கும், கடன் பிரச்சினை தீருவதற்கும், வேலையில் நல்ல சம்பள உயர்வை பெறுவதற்கும் என்று பல வழிகளில் பணம் நம்மை தேடி வந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:மார்கழி சனி மகா பிரதோஷ வழிபாடு

பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் முழுமையான அருளை பெறுவதற்கு குபேர ஏகாதசி நாள் அன்று பச்சரிசியை வைத்து முழு மனதுடன் இந்த பரிகாரத்தை செய்பவர்களுடைய வாழ்க்கையில் பணவரவிற்கு எந்தவித பஞ்சமும் இருக்காது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -