- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமார்கழி சனி மகா பிரதோஷ வழிபாடு

மார்கழி சனி மகா பிரதோஷ வழிபாடு

- Advertisement -

இந்த மார்கழி மாதத்தில், ஒரு நாள் கூட பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சிவன் கோவிலுக்கு சென்று உங்களால் வழிபாடு செய்ய முடியவில்லையா. கவலையே படாதீங்க. வரும் சனிக்கிழமை டிசம்பர் 28ஆம் தேதி அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று உங்கள் வேண்டுதலை சொல்லி, இந்த வழிபாட்டை மட்டும் மேற்கொள்ளுங்கள் போதும்.

நிச்சயமாக மார்கழி மாதம் 30 நாளும் அந்த ஈசனை வழிபாடு செய்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். சிவனின் பரிபூரண ஆசி கிடைக்கும். மலை போல் வந்த பெரிய பெரிய கஷ்டங்கள் எல்லாம் கூட பணி போல் உருகி கண்ணுக்கு தெரியாமல் காணாமல் போய்விடும். அந்த எளிய பரிகாரம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

மார்கழி மாத சனி மகா பிரதோஷம்

வெள்ளிக்கிழமை மாலை வில்வ இலை வாங்கி வைத்துக் கொண்டாலும் சரி, அல்லது சனிக்கிழமை காலை உங்களுக்கு வில்வ இலை கிடைக்கும் என்றாலும் சரி, சனிக்கிழமை 28-12-2024 காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீங்கள் சிவன் கோவிலில் இருக்க வேண்டும். 4:30 மணிக்கு மார்கழி மாதம் தனுர் பூஜை நடக்கக்கூடிய சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகள் நடக்கும் அந்த நேரத்தில் நீங்கள் கோவிலில் இருக்க வேண்டும். எடுத்து வைத்திருக்கும் வில்வ இலைகளை ஒவ்வொன்றாக எடுத்து அதில் ‘சிவசிவ’ என்ற நாமத்தை எழுதுங்கள். (வெறும் விரல்களால் மானசிகமாக சிவ சிவ என்று எழுதினாலே போதும்).

- Advertisement -

பிறகு உங்களுடைய வேண்டுதலை சிவபெருமானிடம் வையுங்கள். சிவசிவ நாமத்தை எழுதி அந்த வில்வ இலைகள் தான் சிவபெருமானாக நினைத்து, அந்த இலையிடம் உங்களுடைய பிரச்சனைகளை சொல்லுங்கள். பிறகு அந்த வில்வ இலைகளை சிவபெருமானுக்கு கொடுத்து விடுங்கள்.

நீங்கள் சிவனுக்கு கொடுக்கும் வில்வ இலைகளோடு இந்த இலைகளை கலந்து கொடுத்தாலும் சரி, அல்லது தனியாக இதை சிவபெருமானுக்கு கொடுத்து சிவனின் பாதங்களில் இந்த இலைகளை சமர்ப்பணம் செய்ய சொன்னாலும் சரி, அது உங்களுடைய விருப்பம். ஆக மொத்தம் நீங்கள் சிவ சிவ என்று எழுதிய அந்த வில்வ இலைகள் பிரம்ம முகூர்த்த நேரத்தில், வரும் சனிக்கிழமை பிரதோஷ நாளில் அந்த சிவபெருமான் பாதத்தில் போய் சேர்ந்தால் போதும்.

- Advertisement -

உங்களுடைய பிரார்த்தனைகள் அந்த ஈசனின் காதில் விழும். இவ்வளவுதான் பரிகாரம். எளிமையான பரிகாரம். உங்களால் முடியும் என்றால் 108 வில்வ இலைகளில் சிவ சிவ என்று எழுதி மாலையாக கட்டி போடலாம். இன்னும் இன்னும் நல்லது, இன்னும் இன்னும் மன நிறைவு ஏற்படும், இன்னும் இன்னும் சிவபெருமானின் மீது நாட்டம் ஏற்படும் உங்களுடைய வாழ்வில் இருக்கும் துன்பங்கள் தீரும்.

இதையும் படிக்கலாமே: 2025 ஆவது வருடம் வெற்றி கொடுக்கும் மந்திர வார்த்தை

உங்கள் மனது பக்குவப்படும் இந்த எளிமையான பரிகாரத்தை வரும் சனிக்கிழமை செய்பவர்கள் அனைவருமே பாக்கியம் செய்தவர்கள். அப்போது இந்த வழிபாட்டை தவறவிட்ட அவர்களுக்கு பாக்கியம் இல்லையா என்று கேட்காதீங்க. சிவசிவ நாமத்தை நீங்கள் சொல்லுங்கள். உங்கள் வாயால் சிவ சிவ நாமத்தை சொல்லி அடுத்தவர்களை, சிவ சிவ சொல்ல வையுங்கள் இன்னும் கோடி கோடி புண்ணியம் உங்களை வந்து சேரும். காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த வழிபாட்டை செய்ய முடியாதவர்கள், நாளை பிரதோஷ நேரத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம், என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்