- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

பண வரவு அதிகரிக்க தேய்பிறை பஞ்சமி பரிகாரம்

- Advertisement -

வாராகி அன்னையை எந்நாளும் வழிபட்டாலும் அவர்களுக்கே உரிய பஞ்சமி திதியில் வழிபடுவது அளப்பரிய யோகத்தை நமக்கு கொடுக்கும் ஏனெனில் சப்த கன்னிகளில் ஐந்தாவது அன்னையாக திகழ்வதால் வாராகி அன்னைக்கு பஞ்சமி திதி உகந்ததாக கருதப்படுகிறது இந்த நாளில் நம்முடைய எந்த விதமான துன்பங்களும் தேவைகளும் தீர அன்னை வழிபடுவதன் மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.

அப்பேர்ப்பட்ட அதிசக்தி வாய்ந்த அன்னை இன்றைய தேய்பிறை பஞ்சமி வழிபாட்டில் நாம் சில பொருட்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும் இப்படி செய்வதன் மூலம் நம்முடைய வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது அது குறித்தான தகவலை ஆன்மீகம் பற்றிய இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பண வரவு அதிகரிக்க பஞ்சமி

இந்த பஞ்சமி திதியானது இன்று மாலை 6:00 மணிக்கு மேல் துவங்கி நாளை மாலை 5 மணி வரை உள்ளது வாராகி அன்னை வழிபாடு என்பது மாலை நேரத்தில் செய்வது சிறந்தது அப்படி இருக்கையில் இன்றைய தினம் பஞ்சமி வழிபாடு செய்வது நல்ல பலனை தரும் முடியாதவர்கள் நாளை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்து கொள்ளலாம்.

அதிலும் திங்கட்கிழமை வந்திருப்பதால் சந்திரனுக்கு உரிய கோரை நேரமான இரவு 8-ல் இருந்து 9 அன்னையை வழிபடுவது அதிக பலனைத் தரும் இந்த பரிகாரத்தையும் இந்த நேரத்திலே செய்வது சிறந்தது இந்த பரிகாரம் செய்வதற்கு முன்பாக வீட்டில் வாராகி அன்னையின் படம் இருந்தால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள் இல்லை எனில் பஞ்சமுகம் கொண்ட ஒரு அகல் தீபத்தை அன்னையாக பாவித்து ஏற்றி விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அன்னைக்கு உகந்த நெய்வேத்தியங்களை வைத்துவிட்டு சாம்பிராணி தூபம் போட்டு வீட்டில் தெய்வ மனம் கமலும் படி பார்த்துக் கொள்ளுங்கள. இது மிகவும் முக்கியம் இப்போது ஒரு வெள்ளை நிற துணியை நனைத்து காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது மிகச் சிறிய அளவில் இருந்தால் போதும். அதேபோல் 21 பச்சரிசி எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அரிசி உடையாமல் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

அடுத்தது சிறிதளவு பச்சைக் கற்பூரம் ஒரு ஐந்து ரூபாய் நாணயம் இந்த மூன்றையும் வெள்ளை நிற துணியில் வைத்து முடிச்சாக கட்டி வாராகி அன்னைக்கு முன்பாக வைத்து விடுங்கள். நீங்கள் வழிபாடு துவங்கும் போது இதை அன்னையின் முன்பு வைத்து விடுவது நல்லது. அதன் பிறகு உங்களுடைய பண பிரச்சனை கடன் பிரச்சனை போன்றவை தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த முடிச்சு இன்று இரவு முழுவதும் அன்னைக்கு முன்பாக இருக்கட்டும். நாளைய தினத்தில் இந்த முடிச்சை எடுத்து உங்கள் மணி பரிசில் வைத்துக் கொள்ளுங்கள். இது எப்போதும் பஸ்ஸிலே இருக்கட்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை இந்த பச்சரிசியை எறும்புகளுக்கு தானமாக வைத்து விடுங்கள். நாணயத்தை மங்களப் பொருட்கள் வாங்க பயன்படுத்திக் கொள்ளுங்கள் பச்சை கற்பூரம் கரைந்து இருக்கும்.

பச்சரிசியானது சந்திரனுக்கு உரியதாக கருதப்படுகிறது. அது மட்டும் இன்றி மகாலட்சுமி தாயாரின் அம்சமும் நிறைந்துள்ளது. ஐந்து ரூபாய் நாணயம் குபேர அம்சம் பொருந்தியது. பச்சைக் கற்பூரமும் மகாலட்சுமி தாயார் உகந்தது வெள்ளை நிறம் சந்திரனுக்கு உரியது. இவை அனைத்தையும் பஞ்சமி திதி நேரத்தில் அன்னையை நினைத்து சேர்த்து வைத்து வணங்கும் போது சகல செல்வங்களையும் அள்ளித் தரும்.

இதையும் படிக்கலாமே: குழந்தை பாக்கியம் கிடைக்க வாராகி அம்மன் தீப வழிபாடு

ஆகையால் இது உங்கள் மணி பர்ஸ் இருக்கும் போது பணத்தடையை நீக்கி பணவரவை அதிகரித்து கொடுத்துக் கொண்டே இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இன்றைய பஞ்சமி வழிபாட்டின் போது இதை செய்து பலன் பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -