- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுழந்தை பாக்கியம் கிடைக்க வாராகி அம்மன் தீப வழிபாடு

குழந்தை பாக்கியம் கிடைக்க வாராகி அம்மன் தீப வழிபாடு

- Advertisement -

வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்று நம் முன்னோர்கள் ஆசிர்வாதம் செய்வார்கள். தங்கள் வம்சம் எந்தவித தடையும் இல்லாமல் வளர்ந்து கொண்டே செல்ல வேண்டும் என்பதுதான் வாழையடி வாழை என்பதற்கு அர்த்தம். பதினாறு செல்வங்களும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என்றும் நம்முடைய முன்னோர்கள் ஆசிர்வாதம் செய்வதில் இருக்கக்கூடிய மிகவும் முக்கியமான ஒரு செல்வம் தான் குழந்தை பாக்கியம். இந்த குழந்தை பாக்கியம் இல்லாத நபர்கள் படும் வேதனையை நம்மால் சொற்களால் சொல்ல இயலாது. அப்படிப்பட்ட குழந்தையின்மை பிரச்சனை தீர்வதற்கு செய்யக்கூடிய வாராகி அம்மன் தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எவ்வளவு சொத்துக்கள் சேர்த்து வைத்தாலும் அந்த சொத்துக்களை அனுபவிப்பதற்கு என்று பிள்ளை வேண்டும். அன்றைய காலத்தில் ஒரு குடும்பத்தில் 10,15 பிள்ளைகள் கூட பிறக்கும். இன்றைய காலத்தில் ஒன்று பிறப்பதே மிகவும் அரிதாக போய்விட்டது. இதற்கு வாழ்வியல் ரீதியான காரணங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தாலும் ஒரு சிலருக்கு தங்களுடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்களும் காரணமாக திகழும். மருத்துவர் ரீதியாக ஆலோசனை பெற்று கொள்வதோடு மட்டுமல்லாமல் இந்த வாராகி அம்மன் வழிபாட்டையும் நாம் செய்தோம் என்றால் விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

- Advertisement -

குழந்தை பாக்கியம் கிடைக்க ஏற்ற வேண்டிய தீபம்

இந்த தீபத்தை நாம் நம்முடைய வீட்டிலேயே ஏற்றலாம். வாராகி அம்மனுக்கு உகந்த திதியான பஞ்சமி திதி அன்று ஏற்ற ஆரம்பிக்கலாம். அப்படி இல்லை என்றால் செவ்வாய்க்கிழமை அன்று ஏற்ற ஆரம்பிக்கலாம். ஆனால் இந்த முறை வரக்கூடிய பஞ்சமி செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வருவதால் இன்றைய தினம் நாம் ஆரம்பிப்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது.

அன்றைய தினம் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் வாராகி அம்மனின் படம் இருந்தால் அந்த படத்திற்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். முதல் நாள் மட்டும் முருகப்பெருமானுக்கும் சேர்த்து ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும். அதோடு தங்களால் இயன்ற ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைக்க வேண்டும். மற்ற நாட்களில் தீபம் மட்டும் ஏற்றினாலே போதும்.

- Advertisement -

இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு அரச இலை தேவைப்படும். இரண்டு அரசு இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தமாக கழுவிக்கொண்டு அந்த அரச இலைக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அரச இலையின் நுனியானது கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். தீபமும் கிழக்கு பார்த்தவாறு எரிய வேண்டும். இப்பொழுது இந்த இரண்டு அரசு இலைகளுக்கு மேலே புதிதாக வாங்கிய இரண்டு அகல் விளக்குகளை வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த அகல் விளக்குகளுக்கும் சந்தனம் குங்குமம் வைத்துவிட்டு அதில் சுத்தமான நல்லெண்ணெயை ஊற்றி இரண்டு பஞ்சுத்திரிகளை ஒன்றாக இணைத்து ஒரு திரியாக்கி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி நாம் தீபம் ஏற்றி வைத்துவிட்டு வாராகி அம்மனிடம் குழந்தை பாக்கியம் வேண்டும் குழந்தை பாக்கியம் இல்லாததால் பட்ட கஷ்டங்கள் என்று அனைத்தையும் நம்முடைய அம்மாவிடம் கூறுவது போல வாராகி அம்மனிடம் கூறி வழிபட வேண்டும்.

- Advertisement -

இப்படி தினமும் பிரம்ம முகூர்த்த வேளையில் அதாவது 5:30 மணிக்குள் இந்த தீபத்தை ஏற்றி நாம் வழிபட வேண்டும். இயன்றவர்கள் தினமும் அரச இலையை மாற்றலாம். இயலாதவர்கள் அரச இலை காய்ந்த பிறகு புதிதாக மாற்றி வைத்துக் கொள்ளலாம். தொடர்ந்து 48 நாட்கள் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். 48 நாட்களில் பலன் கிடைக்காத பட்சத்தில் 90 நாட்கள் வரை கூட ஏற்றலாம். தங்களுடைய கர்ம வினைகளுக்கு ஏற்றவாறுதான் பலன் கிடைக்கும் என்பதால் நம்பிக்கையுடன் தொடர்ந்து இந்த தீபத்தை ஏற்றி வாராகி அம்மனை வழிபட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சொந்த வீடு கட்ட வராகி அம்மன் வழிபாடு

அற்புத சக்திகள் கொண்ட வாராஹி அம்மனை முழு மனதோடு நம்பி இந்த தீப வழிபாட்டை செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கும். நம்பிக்கை இருப்பவர்கள் வழிபட்டு பலன் நடையுங்கள்.

சற்று முன்