
அல்லும் பகலும் உழைத்து அயராது பாடுபடுவது பணத்தை சம்பாதிப்பதற்காக தான். அப்படிப்பட்ட பணத்தை சம்பாதிப்பதன் மூலம் தன்னுடைய தேவைகள் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும் என்று தான் அனைவரும் ஆசைப்படுகிறோம். எவ்வளவுதான் உழைத்தாலும் உழைப்பிற்கேற்ற பண வரவு ஏற்படவில்லை என்றாலோ பணவரவில் தடைகள் இருந்தாலோ பணத்தால் பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டே இருந்தாலோ அதை சரி செய்ய எந்த முறையில் மாரியம்மனை வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு தெய்வத்திற்கென்று ஒவ்வொரு விதமான அற்புத பலன்கள் இருக்கின்றன. அந்த தெய்வத்தை நாம் முறையாக எந்த முறையில் வழிபடுகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியமான ஒன்று. அப்படி நாம் அந்த சூட்சும ரகசியத்தை தெரிந்து கொண்டு வழிபட்டோம் என்றால் நம்மை போல ஒரு பாக்கியசாலி வேறு யாருமே இந்த உலகத்தில் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ரகசியமான சூட்சுமமான வழிபாட்டு முறையை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
இந்த சூட்சுமமான வழிபாட்டை நாம் மாரியம்மன் கோவிலில் செய்ய வேண்டும். இந்த உலகத்திற்கு தேவையான மழையாகிய மாரியை வழங்கக்கூடிய தெய்வமாக திகழ்ந்தவள் தான் மாரியம்மன். மாரியம்மனின் அருள் பரிபூரணமாக கிடைத்தால் தான் அந்த இடத்தில் மழை பொழியும். மழை பொழிந்தால் தான் அந்த இடத்தில் பஞ்சம் என்பதே ஏற்படாது என்பது நம்முடைய முன்னோர்களின் அனுபவபூர்வமான மொழியாகும். அப்படிப்பட்ட மாரியம்மன் நாம் வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையிலும் பஞ்சம் என்ற பேச்சுக்கு இடம் இல்லாமல் அனைத்துவித செல்வ செழிப்புகளையும் மழையைப் போல பொழியக்கூடிய கருணை மிகுந்த தாயாக மாரியம்மன் திகழ்கிறாள்.
வளர்பிறை வெள்ளிக்கிழமையாக பார்த்து ஒரு வெள்ளிக்கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அன்றைய தினம் அருகில் இருக்க இருக்கக்கூடிய மாரியம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது சம்மங்கி பூ மாலை வாங்கிக்கொண்டு, நான்கு எலுமிச்சம் கனி, வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய் போன்றவற்றை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்.
இவை அனைத்தையும் கையில் வைத்துக்கொண்டு அம்மனை ஒருமுறை வலம் வர வேண்டும். பிறகு மூன்று எலுமிச்சம் கனிகளை எடுத்து திரிசூலத்தில் குத்த வேண்டும். பிறகு நேராக அம்மனின் சன்னதிக்கு சென்று சம்மங்கி பூ மாலையை அம்மனுக்கு சாற்றி விட்டு மீதம் இருக்கும் ஒரு எலுமிச்சம் பழத்தை அம்மனின் பாதத்தில் வைத்து விட்டு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
அர்ச்சனை தட்டை திரும்ப வாங்காமல் அம்மனின் பாதத்திலேயே வைத்துவிட்டு அம்மனை 9, 11, 15 என்ற எண்ணிக்கையில் வலம் வர வேண்டும். பிறகு வந்து ஆண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் சட்டையைப் பிடித்து அதில் எலுமிச்சம் பழம் மற்றும் அர்ச்சனை தட்டை வாங்க வேண்டும். பெண்களாக இருந்தால் முந்தானையில் வாங்கிக் கொள்ள வேண்டும். இப்படி வாங்கி விட்டு வீட்டிற்கு வந்து விட வேண்டும். அதில் இருக்கக்கூடிய எலுமிச்சம் பழத்தை வீட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.
இப்படி தொடர்ந்து 21 வெள்ளிக்கிழமைகள் மாரியம்மனை வழிபாடு செய்ய பணரீதியாக ஏற்பட்டிருக்கும் தடைகள் அனைத்தும் நீங்கும். பிரச்சினைகளும் நீங்கும். பணவரவு என்பது அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்து வந்த வறுமைகள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் நலமாக வாழ முடியும்.
இதையும் படிக்கலாமே: சுக்கிரனை வசியம் செய்யும் பரிகாரம்
குழந்தையின் மனதை புரிந்து கொண்டு குழந்தைக்கு தேவையான அனைத்தையும் கேட்காமலே தரக்கூடிய தாயை நாம் முழு மனதோடு நம்பினால் நம்முடைய வேண்டுதலையும் நாம் கேட்காமலேயே நிறைவேற்றுவாள்.