- Advertisement -

பண வசியம் உண்டாக ஏலக்காய் பரிகாரம்

- Advertisement -

நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும். அந்த பிரச்சனையின் அடிப்படையே பணமாகத்தான் இருக்கும். குடும்பத்தில் பிரச்சனை என்றாலும் அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணமாக பணமும் திகழ்கிறது. அதேபோல் கடன் பிரச்சனை, சொந்த வீடு வாங்குவதில் இருக்கக்கூடிய பிரச்சனை இப்படி பல பிரச்சினைகளை நாம் கூறலாம். இவை அனைத்திற்கும் அடித்தளமாக அமையக்கூடியது பணம்தான். அப்படிப்பட்ட பணத்தை வசியம் செய்வதற்கு இன்று இரவு ஏலக்காயை வைத்து எந்த முறையில் பரிகாரம் செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஏலக்காய் பரிகாரம்

இன்று தை பௌர்ணமி, புதன்கிழமையோடு சேர்ந்து இருக்கிறது. இன்று இரவு நிலவு வானிற்கு வந்த பிறகு நிலவைப் பார்த்து இந்த ஏலக்காய் பரிகாரத்தை செய்தால் போதும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஆறு ஏலக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அதை உங்களுடைய இரண்டு கைகளிலும் வைத்துக் கொண்டு உங்கள் வீட்டு பூஜை அறைக்கு சென்று உங்களுடைய குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் மனதார வேண்டிக் கொட்ட வேண்டும்.

- Advertisement -

பிறகு வீட்டிற்கு வெளியே வந்து சந்திரனை பார்த்தவாறு இரண்டு கைகளிலும் இருக்கக்கூடிய ஏலக்காயை வைத்துக்கொண்டு சந்திரபகவானிடம் உங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதோ அவை அனைத்தையும் கூற வேண்டும். உதாரணமாக கடன் பிரச்சினை தீர வேண்டும், அடமானத்தில் இருக்கக்கூடிய நகையை திருப்ப வேண்டும், சொந்த வீடு வாங்க வேண்டும், பணவரவு அதிகரிக்க வேண்டும் இப்படி நமக்கு என்னென்ன பிரச்சனை இருக்கிறதோ அவை அனைத்தையும் கூற வேண்டும்.

இவ்வாறு கூறி முடித்த பிறகு இந்த ஆறு ஏலக்காய்களை உங்களுடைய இடது கையில் வைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து ஒரு ஏலக்காயை மட்டும் வலது கையில் எடுத்து ஐந்து ஏழு ஒன்று என்ற இந்த மூன்று எண்களையும் ஒரு முறை கூற வேண்டும். பிறகு அந்த ஏலக்காயை உங்களுடைய வலது கையிலேயே வைத்துக் கொள்ளுங்கள். மறுபடியும் இடது கையில் இருக்கக்கூடிய ஒரு ஏலக்காய் எடுத்து இந்த மூன்று எண்களின் கூறி வலது கையில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி ஆறு ஏலக்காய்களையும் ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொரு முறையும் இந்த மூன்று எண்களை கூறி வலது கையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு வீட்டிற்கு வந்து மஞ்சள் அல்லது பச்சை நிற துணியில் இந்த ஆறு ஏலக்காயையும் வைத்து மூட்டையாக கட்டி வீட்டு சமையலறையில் சமைப்பதற்காக அரிசி கொட்டி வைத்திருக்கும் பாத்திரத்தில் போட்டுவிட வேண்டும். அடுத்த மாதம் பௌர்ணமி வரும் பொழுது இதை எடுத்துக் கொண்டு போய் ஓடுகின்ற நீரிலோ அல்லது கோவிலில் இருக்கக்கூடிய மரத்திற்கு அடியிலோ போட்டு விட வேண்டும். இந்த முறையில் நாம் ஏலக்காயை வைத்து இன்றைய தினத்தில் சந்திர பகவானை பார்த்து இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீருவதோடு நமக்கு பண வசியம் ஏற்பட்டு பணவரவு அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே:நினைத்த காரியம் கைகூடி வர பரிகாரம்

அனைவரின் இல்லங்களிலும் ஏலக்காய் என்பது இருக்கத்தான் செய்யும். அதை இந்த முறையில் கையில் வைத்துக்கொண்டு நிலாவை பார்த்து இந்த பரிகாரத்தை முழுமனதோடு நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு பணவசியம் ஏற்படும், அதன் மூலம் பணவரவும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -