
பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்காத நபர்களே இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான முறையில் பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு என்பது ஏற்படும். அப்படிப்பட்ட வாய்ப்பை முறையாக நாம் பயன்படுத்தி பணத்தை சம்பாதித்தாலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் அந்த பணம் வீண்விரயம் ஆவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். ஒரு சிலருக்கு பணவரவை விட செலவு அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு காரணமாக திகழ்வது பணவசியம்தான். ஒருவருக்கு பணவசியம் ஏற்பட்டு விட்டால் அவர் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும் அதன் மூலம் நாளா பக்கமும் பணவரவு ஏற்படும். பண வசியம் இல்லை என்றால் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் அதன் மூலம் எந்தவித பண வரவும் ஏற்படாது. இப்படிப்பட்ட பண வசியத்தை அதிகரிப்பதற்கு செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தன தானியம் என்ற 16 வகையான செல்வங்களை பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் என்றால் நமக்கு மகாலட்சுமியின் அருள் என்பது கண்டிப்பான முறையில் வேண்டும். அப்படிப்பட்ட 16 செல்வங்களில் மிகவும் முக்கியமான ஒரு செல்வமாக திகழ்வதுதான் தனம். அதாவது நாம் சம்பாதிக்கக்கூடிய பணம். அந்த பணத்தை வசியம் செய்வதற்கு மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கும் செய்ய வேண்டிய ஒரு எளிமையான மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய பொருளைப் பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய வழிபாட்டை பற்றி இப்பொழுது பார்க்க போகிறோம்.
மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய பொருட்கள் பல இருக்கின்றன. அதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு பொருளாக திகழ்வதுதான் மருதாணி. பொதுவாகவே பெண்கள் தங்கள் கையில் மருதாணியை வைத்துக் கொள்வதன் மூலம் மகாலட்சுமியின் அம்சம் அவர்களிடம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது ஆண்களுக்கும் பொருந்தும். அப்படிப்பட்ட மருதாணியை வைத்து நாம் செய்யக்கூடிய ஒரு தீப வழிபாடு வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றலை நீக்குவதோடு பண வசியத்தையும் ஏற்படுத்தும். அதேசமயம் மகாலட்சுமியின் அருளையும் பரிபூரணமாக பெறச் செய்யும்.
இதற்கு மருதாணி இலைகளை பறித்து அம்மியிலோ அல்லது மிக்ஸிலோ தண்ணீர் ஊற்றி கைக்கு மருதாணி வைப்போம் அல்லவா அந்த பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை நிழல் காய்ச்சலாக காயவைத்து அதை நன்றாக பிணைந்து ஒரு அகல் விளக்கு போல் தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த அகல் விளக்கை ஒரு மண் விளக்கிற்குள் வைத்து அதில் கிராம்பு, பச்சை கற்பூரம், மருதாணி விதைகள் போன்றவற்றை வைத்து தினமும் தெய்வத்திற்கு வழிபாடு செய்யும் பொழுது கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். மருதாணி விளக்கு முற்றிலுமாக எரிந்து சாம்பல் ஆகும் வரை அதையே நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
அது சாம்பலான பிறகு அதை தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இப்படி நாம் செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும் அதன் மூலம் நமக்கு பண வசியம் உண்டாகி தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் ஏற்பட்டு நாலா பக்கமும் பணவரவு உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை நீக்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை தரும் விநாயகர் வழிபாடு
மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய முக்கியமான பொருட்களை பயன்படுத்தி இந்த முறையில் தீப ஆராத்தி காட்டி வழிபாடு செய்பவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் பண வரவும் அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.