
முன்பெல்லாம் ஒரு வீட்டினுள் நுழையும் போதே அந்த வீட்டின் நுழைவாயில் அவ்வளவு மங்களகரமாக இருக்கும். சாணம் தெளித்து கோலமிட்டு வாசற்படியில் மஞ்சள், குங்குமம் வைத்து பார்க்கவே லட்சுமி கடாட்சம் நிறைந்ததாக இருக்கும். இன்றைய அவசர காலத்தில் அதை எல்லாம் செய்ய யாருக்கும் நேரம் இல்லை. இப்படி நாம் செய்ய மறந்த சில காரணங்கள் தான் இன்று பெரும்பாலான வீட்டில் தரித்திரம் தாண்டவமாட காரணமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அது என்ன காரணம் அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இப்போது இந்த ஆன்மீகம் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் ஒவ்வொரு இடத்திற்கும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே விட அதிகமான முக்கியத்துவம் நம் வீட்டின் நிலை வாசலுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். நிலை வாசலில் எப்போதும் நிலை வாசல் தேவதை குடி கொண்டு இருப்பதாக ஐதீகம் உண்டு. எந்த தெய்வம் நம் வீட்டிற்குள் நுழைவதாக இருந்தாலும் அதற்கு முதலில் நிலை வாசல் தேவதையின் அனுமதி வேண்டும். அப்படியே நிலை வாசலை நாம் எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதை பற்றிய பதிவு தான் இது.
இந்த நிலை வாசலை நாம் தெய்வ கடாட்சமாக வைத்திருந்தால் மட்டுமே மகாலட்சுமி தாயார் நம் இல்லம் தேடி வருவார். ஒரு வீட்டில் நிலை வாசல் தோற்றம் என்பது அந்த வீட்டின் முன்னேற்றத்திற்கும் நிம்மதிக்கும் முக்கியமான காரணமாக அமைகிறது.
நிலை வாசலில் செய்யக் கூடாத தவறு:
சிலர் நிலைவாசல் கதவை வெளியில் செல்லும் போதும் உள்ளே வரும் போதும் வேகமாக அடித்து சத்தம் வரும் படி சாத்துவார்கள். அப்படி ஒரு போதும் செய்யக் கூடாது. அதே போல ஒரு சிலர் வீட்டில் நிலை வாசலில் கதவை சாத்தும் போதும், திறக்கும் போதும் சத்தம் கேட்கும் இந்த சத்தமும் வீட்டினுள் எப்போதும் கேட்கவே கூடாது
எந்த வீட்டில் இப்படி சத்தங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டும், சண்டைகள் நடந்து கொண்டும் இருக்கிறதோ அந்த வீட்டில் மகாலட்சுமி தாயார் தங்காமல் அவருடைய தங்கையான ஜதிஷ்டா தேவியானவர் இருப்பார் என்று சொல்லப்படுகிறது. அப்படி மகாலட்சுமி தாயார் தாங்காமல் சொல்லும் போது நம் வீட்டில் என்ன மாதிரியான சூழ்நிலைகள் நிலவும் என்று சொல்லத் தேவையே இல்லை.
இவையெல்லாம் நம் முன்னோர்கள் பார்த்து பார்த்து கடைபிடித்து விஷயங்கள். வீட்டில் தாழ்பாள் சத்தம் கேட்கக் கூடாது. கதவை அடித்து சாற்றக் கூடாது, வீட்டில் எந்நேரமும் சண்டை, சத்தம் கூச்சல் போட்டுக் கொண்டு இருக்கக் கூடாது என்று ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து வாழ்ந்து வந்தார்கள். இந்த செயல்களை எல்லாம் சரிவர செய்ததால் தான் அந்த காலத்தில் நோய் நொடி இல்லாமல் 100 ரூபாய் சம்பாதித்தால் கூட நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இன்று இதையெல்லாம் நாகரீகம் என்ற பெயரில் புறக்கணித்த தன் விளைவு ஒவ்வொரு வீட்டின் நிம்மதியும் தொலைந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
இதையும் படிக்கலாமே: மார்ச்சில் பெயர்ச்சியாகும் செவ்வாய் கிரகம்! ராஜயோகம் பெறவிருக்கும் 3 ராசிகள் என்னென்ன?
இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை நம் வாழ்வில் கடைபிடிக்கும் போது பெரிய அளவிலான நிம்மதிகள் நம்மை தேடி வரும் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை. இதை செய்வதில் நிம்மதியுடன் சேர்த்து வீட்டில் பணப் புழக்கம் அதிகரிக்கும் என்றும் வீண்விரயம் ஆகாமல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பணம் வீண் விரயம் ஆகாமல் கையில் தங்கினாலே அதுவே தனியாக ஒரு சேமிப்பிற்கு சமம். உங்கள் வீட்டின் நிலை வாசலில் இது போன்ற இருந்தால் அதை உடனடியாக சரி செய்து நோய் நொடி இல்லாமல் நிம்மதியான, சந்தோஷமான ஒரு வாழ்க்கையை வாழ வழித் தேடி கொள்வோம்.