- Advertisement -

பணம் அதிக அளவில் சேர தாந்திரீக பரிகாரம்

- Advertisement -

பணம் நம்மிடம் அதிக அளவில் சேர வேண்டும் என்பதற்காக தான் நாம் அனைவரும் வேலை செய்கிறோம். அந்த வேலையை எவ்வளவு சிரமப்பட்டு செய்தாலும் ஒரு சிலருக்கு மட்டும் பணம் என்பதே வராது. அதையும் மீறி பணம் வந்தாலும் அது கையில் தங்காமல் செலவாகிக் கொண்டே இருக்கும். இன்னும் சிலருக்கு சம்பாதித்த பணம் செலவாகதோடு அதிக அளவில் கடனும் வாங்க வேண்டிய சூழ்நிலை கூட உண்டாகும். இவை அனைத்தையும் நீக்கி பணம் நம்மை தேடி வந்து நம்மிடம் அதிக அளவில் சேருவதற்கும் அதிக அளவில் சேர்ந்த பணம் நம்மிடமே நிரந்தரமாக தங்குவதற்கும் செய்ய வேண்டிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பணம் சேர தாந்திரீக பரிகாரம்

நமக்கு ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடக்க வேண்டும் என்றால் அதற்கு என்று சில குறிப்புகள் இருக்க வேண்டும். இதை நாம் அதிர்ஷ்டம் என்றும் கூறலாம். அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் நமக்கு இயற்கையிலேயே கிடைக்கும் பொழுது அதனால் நமக்கு பலவிதமான பலன்கள் உண்டாகும். ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் என்று பேச்சுக்கு கூட இருக்காது. அப்படிப்பட்டவர்கள் அந்த அதிர்ஷ்டத்தை பெறுவதற்கும் அந்த அதிர்ஷ்டத்தின் மூலமாக பண வரவை அதிகரிப்பதற்கும் சில தாந்திரீக பரிகாரங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த தாந்திரீக பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று காலை வரக்கூடிய சுக்கிர கோரையான 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் செய்ய வேண்டும். ஆறு மணிக்கு முன்பாகவே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து சுவாமி படங்களுக்கு மலர்களை சாற்றி தீபம் ஏற்றி சாம்பிராணி தூபம் எல்லாம் போட்டு தயாராக வைத்துக் கொள்ளுங்கள். சரியாக ஆறு மணிக்கு சுக்கிர ஹோரை ஆரம்பித்த பிறகு ஒரு நல்ல டம்ளராக பார்த்து ஒரு டம்ளர் எடுத்து அதில் நாம் குடிக்கின்ற தண்ணீரை அதுவும் எச்சில் படாத தண்ணீராக பார்த்து எடுத்து பூஜையறையில் வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு ஐந்து ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்து மஞ்சள் மற்றும் உப்பு கலந்த தண்ணீரில் சுத்தம் செய்து அந்த ஒரு ரூபாய் நாணயங்களை டம்ளரில் இருக்கக்கூடிய தண்ணீரில் போட்டு விட வேண்டும். இப்பொழுது அந்த டம்ளருக்கு முன்பாக வடக்கு பார்த்தவாறு நாம் அமர்ந்து கொள்ள வேண்டும். பிறகு “எனக்கு பணம் அதிக அளவில் சேர வேண்டும், என்னிடம் பணம் நிரந்தரமாக தங்குகிறது” என்ற பணத்தை ஈர்க்கும் வாக்கியத்தை முழுமனதோடு 27 முறை கூற வேண்டும்.

- Advertisement -

இப்படி கூறி முடித்த பிறகு சுக்கிர ஹோரை முடியும் வரை அந்த டம்ளர் தண்ணீர் அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும். சுக்கிர ஹோரை முடிந்த பிறகு அந்த டம்ளரில் இருக்கக்கூடிய தண்ணீரை எடுத்து வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் பிரசாதமாக அருந்த வேண்டும். அந்த தண்ணீருக்குள் போட்ட நாணயத்தை பணம் வைக்கும் இடத்தில் பத்திரமாக செலவு செய்யாமல் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்வதன் மூலம் பணம் நம்மை தேடி வருவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். பணம் அதிகளவில் சேரும் யோகம் கிடைக்கும். அப்படி சேரக்கூடிய பணம் நம்மிடம் நிரந்தரமாக தங்குவதற்குரிய வழிகளும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:வளர்பிறை சஷ்டியில் ஏற்ற வேண்டிய தீபம்

கை நிறைய பணத்தை சம்பாதித்து அதை சேமிப்பாக உயர்த்தி நாமும் நம் குடும்பமும் சந்தோஷமாக வாழ்வதற்கு இந்த தாந்திரீக பரிகாரத்தை முழுமனதோடு செய்தால் போதும். ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள் நல்ல பலனை அடைவீர்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -