- Advertisement -
- Advertisement -

பணம் என்பது இன்று அத்தியாவசியமான ஒன்றாகும். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், அது நம்மிடம் நிலைக்க வேண்டும், பெருக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இதற்கு ஆன்மீக ரீதியாக சில எளிய, ஆனால் சக்திவாய்ந்த வழிமுறைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் சில்லறை நாணயங்களுடன் சில விசேஷமான பொருட்களைச் சேர்த்து வீட்டில் வைப்பது. சில்லறை நாணயங்கள் வீட்டில் எப்படி இருந்தால் பணம் பெருகும்? என்பதைத்தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

குபேரனின் அருளைப் பெற்று செல்வ வளம் பெருக, நீங்கள் உங்கள் பணப்பெட்டி (பீரோ) அல்லது சில்லறை சேமிக்கும் இடத்தில் இந்த இரண்டு சக்தி வாய்ந்த பொருட்களை எப்போதும் சேர்த்து வைக்கலாம். அந்த இரண்டு பொருட்களில் ஒன்று பச்சை கற்பூரம், மற்றொன்று கிராம்பு ஆகும். இந்த ரகசிய பொருளை வீட்டில் சில்லறை நாணயங்களுடன் எப்போதும் சேர்த்து வைக்க பணம் ஆனது வீண் விரையமாவதில்லை.

- Advertisement -

பச்சை கற்பூரம் மற்றும் கிராம்பின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். பச்சை கற்பூரம், இது மிகவும் சக்திவாய்ந்த ஒரு நறுமணப் பொருள். இது நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்டது. பணம் வைக்கும் இடத்தில் பச்சை கற்பூரத்தை வைப்பது, செல்வத்தை ஈர்க்கும் காந்தமாக செயல்படும் என்பது ஐதீகம். துர்சக்தியை நீக்கி, வீட்டில் சுபிட்சத்தை நிலைநிறுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு. அதுபோல கிராம்பிற்கு வசீகரிக்கும் தன்மை உண்டு. இது பணப்புழக்கத்தை அதிகரிக்கும் என்றும், பணத்தடையை நீக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஒரு சில கிராம்புகளை பணத்துடன் சேர்த்து வைப்பது, பண வரவை அதிகரிக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

எப்படி சேர்த்து வைப்பது?
உங்கள் வீட்டில் இருக்கும் பணப்பெட்டி (பீரோ), உண்டியல் அல்லது சில்லறை நாணயங்களை சேமித்து வைக்கும் சிறிய பெட்டி/கிண்ணம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு சிறிய சுத்தமான கிண்ணம் அல்லது சிறிய பச்சைப் பட்டுத் துணியை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு கை நிறைய சில்லறை நாணயங்கள் (உங்களிடம் உள்ள நாணயங்கள்) போடவும். அதனுடன், ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரம் மற்றும் 4 முதல் 5 முழு கிராம்புகளை (மொட்டு உடையாமல் இருப்பது நல்லது) சேர்த்து வைக்கவும். இந்தக் கிண்ணத்தை அல்லது துணியில் முடிந்து உங்கள் பணப்பெட்டியில் அல்லது சில்லறை நாணயங்கள் இருக்கும் இடத்தில் வைத்துவிடவும்.

- Advertisement -

எப்போதும் சில்லரை நாணயங்கள் உடைய ஒலியானது குபேரனுக்கு ரொம்பவும் இஷ்டமானது. வீட்டில் சிலர் நாணயங்கள் இல்லாமல் துடைத்து வைப்பார்கள். வீட்டில் ஆங்காங்கே சில்லரை நாணயங்களை போட்டு வைப்பது நல்லது. சில்லறை நாணயங்களை அஞ்சறைப்பெட்டியில் பத்திரப்படுத்துவதும், உண்டியலில் சேமிப்பதும் நிறைய நன்மைகளை தரும். பச்சை கற்பூரம் நாளடைவில் கரையக்கூடும். அது கரைந்தவுடன், மீண்டும் புதிய பச்சை கற்பூரத்தை மாற்றி வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே:
பணம் சேர பால் பற்கள்

இந்த எளிய பரிகாரத்தை வெள்ளிக்கிழமையிலோ அல்லது பௌர்ணமி நாளிலோ தொடங்குவது மிகவும் விசேஷமானது. இந்த எளிய ஆன்மீகக் குறிப்பைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும், பணத்தடைகள் நீங்கும், மேலும் நீங்கள் செல்வச் செழிப்புடன் வாழ குபேரனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை!

- Advertisement -