
பணம் என்ற ஒற்றை சொல் எத்தனை வலிமை வாய்ந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பணம் இருப்பவர்களுக்கும் அதன் தேவை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது தான். பணம் இல்லாதவர்கள் அதை பெருக்குவதற்கான வாய்ப்புகளை தினம் தினம் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். பணம் அத்தகைய பெரிய சக்தி வாய்ந்த ஒரு விஷயமாக மாறி விட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அத்தகைய பணத்தை ஈர்ப்பதும் சேர்ப்பதும் எளிமையான காரியம் அன்று இதுவும் பலரும் அறிந்த ஒன்று தான்.
அப்படி ஆனால் பணத்தை நம்மால் சேர்க்கவே முடியாதா? நாம் பணக்காரர்களாக ஆக முடியாதா என்று கேள்வி பலரும் எழுவது ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பணம் சேர முதலில் நாம் அதற்கான வழிமுறைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும் உழைக்க வேண்டும் இவையெல்லாம் முறையாக செய்வது முக்கியம் சரி இப்படி எல்லாம் செய்தால் பணம் நம்மிடம் வந்து சேர்ந்து விடுகிறதா என்றால் அதிலும் சிலர் இல்லை என்று தான் சொல்வார்கள்.
ஏனெனில் சம்பாதிக்கும் பணம் கையில் தங்குவதில்லை சம்பாதிப்பதெல்லாம் செலவாகி விடுகிறது. ஏன் பல நேரங்கள் சம்பாதிப்பதற்கான வழியே கிடைப்பதில்லை என்பதும் தான் காரணம் இத்தகைய பணப்பிரச்சனை தீருவதற்கு ஒரு எளிமையான பரிகார முறை உள்ளது என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
பணம் தொடர்பான பரிகாரங்களையும் அல்லது வழிபாடுகளையும் செய்ய வேண்டும் என்றாலே அதற்குரிய சரியான நாள் வெள்ளிக்கிழமைதான். ஏனெனில் பணத்திற்கு அதிபதி தெய்வங்களான மகாலட்சுமி தாயார், சுக்கிரர் இருவருக்கும் உகந்த நாளாக வெள்ளிக்கிழமை தான் அமைந்துள்ளது. அன்றைய நாளில் இந்த பரிகாரத்தை செய்வதுதான் சிறந்தது.
இந்த பரிகாரம் செய்வதற்கு வெள்ளிக்கிழமை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்துவிட்டு உங்கள் பூஜை வழிபாடுகளை முதலில் செய்து விடுங்கள். அதன் பிறகு ஒரு சிகப்பு நிற துணியில் எடுத்து அதில் சிறிதளவு கல் உப்பை வையுங்கள். இந்த கல்லுப்பு ஆனது மகாலட்சுமி தாயாரின் அம்சம் பொருந்தியது இதற்கு மேல் ஐந்து ரூபாய் நாணயத்தை வையுங்கள். இந்த ஐந்து ரூபாய் ஆனது குபேரரின் அருளை நமக்கு முழுவதுமாக பெற்று தரக் கூடியது.
இவையெல்லாம் ஒன்றாக வைத்து ஒரு மூட்டையாக கட்டி விடுங்கள். இந்த மூட்டையை மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து உங்களின் பணத்தேவை அனைத்தும் தீர வேண்டும் பண பற்றாக்குறை இல்லாத நிலையில் நிம்மதியாக வாழ வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த மூட்டையை உங்கள் வீட்டின் வரவேற்பு அறையில் வடகிழக்கு மூலையில் வைத்து விடுங்கள். வடகிழக்கு மூளை ஆனதும் குபேர அம்சம் பொருந்தியதாகவே சொல்லப்படுகிறது.
இத்தனை அம்சங்கள் பொருந்திய அனைத்தும் ஒரே இடத்தில் ஒன்றாக சேரும் போது பணம் ஈர்ப்பு தன்மை நமக்கும் நம் இல்லத்திற்கும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த மூட்டையை நீங்கள் அடிக்கடி மாற்றத் தேவையில்லை மாதத்திற்கு ஒரு முறை மட்டும் மாற்றினால் போதும் அப்படி மாற்றும் போது உப்பை மட்டும் கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள் சிகப்பு நிற துணியும் நாணயத்தையும் மறுபடியும் இதே போல கட்டி வைத்து விடலாம்.
இதையும் படிக்கலாமே:கிருஷ்ண ஜெயந்தி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்
இந்த பரிகாரம் பணம் தொடர்பான அனைத்து பிரச்சனையும் தீர்க்கும் என்று சொல்லப்படுகிறது. பணவரவையும் அதிக அளவில் ஈர்த்து தரும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் பரிகாரத்தில் செய்து பலனை அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.