
ஒருவருக்கு அவர் எதிர் பார்த்த பணவரவு ஏற்பட்டு விட்டால் அவருடைய பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதனால் புதிதாக இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற நல்ல காரியத்தை செய்வார்கள். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்காது. கடன் இருக்கும் பட்சத்தில் அதை அடைத்து விடுவார்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். குழந்தைகளை நன்றாக படிக்க வைப்பார்கள். இப்படி தங்கள் குடும்பத்தை மென்மேலும் உயர்த்துவதற்கு பணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட பணத்தை பெறுவதற்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு இளநீரை வைத்து செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தடைகள் நீங்க வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அருள் என்பது வேண்டும். மகாலட்சுமியின் அருளோடு சுக்கிர பகவான் மற்றும் குருபகவானின் அருளும் கிடைக்க வேண்டும். மகாலட்சுமியின் அருளை பெற்றாலே சுக்ர பகவானின் அருளும் கிடைக்கும். அதனால் நாம் செய்யக்கூடிய பரிகாரமானது மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதோடு குரு பகவானின் அருளையும் பெரும்படி செய்ய வேண்டும். அப்படிப்பட்ட ஒரு பரிகாரத்தை பற்றி தான் பார்க்க போகிறோம்.
நாம் இருக்கும் வீட்டில் இருந்து கிழக்கு திசையில் சென்று அங்கு இருக்கக்கூடிய தென்னை மரத்திலிருந்து ஒரு இளநீரை பறித்து வரவேண்டும். இந்த இளநீர் பூமியில் படாத அளவிற்கு பறிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கு திசையில் தென்னை மரம் இல்லாத பட்சத்தில் வடக்கு திசையில் இருக்கக்கூடிய தென்னை மரத்தில் இருந்து இளநீரை பறிக்கலாம். இப்படி பறித்த இளநீரை வீட்டிற்கு கொண்டுவந்து சுத்தம் செய்து பூஜையறையில் வைத்து விட வேண்டும்.
ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்து அதில் இளநீரை வைத்து மூட்டையாக கட்டி அதற்கு சந்தனம் குங்குமம் மலர்கள் இவற்றை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு இதை அப்படியே மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் படும்படி வைத்து பணவரவு அதிகரிக்க வேண்டும் என்றும், பொருளாதாரத்தில் இருக்கக்கூடிய தடைகள் விலக வேண்டும் என்றும் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி வேண்டி முடித்த பிறகு இந்த மூட்டையை அப்படியே எடுத்துக் கொண்டு போய் நிலைவாசலில் கட்டிவிட வேண்டும். பிறகு சாம்பிராணி தூபம் காட்டி இந்த பரிகாரத்தை பூர்த்தி செய்து விட வேண்டும்.
தென்னை மரம் இல்லை என்பவர்கள் கிழக்கு திசை பார்த்தவாறு சென்று அங்கு இளநீர் விற்கும் கடையில் இருந்து பச்சையாக இருக்கக்கூடிய இளநீரை வாங்கி வந்து இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையில் நாம் செய்வதன் மூலம் குரு பகவான் மற்றும் மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இதை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. ஒரு முறை கட்டினாலே போதும். தங்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் தங்களுக்கு தோணும்பொழுது இந்த மூட்டையை எடுத்துக் கொண்டு போய் ஓடுகின்ற தண்ணீரில் விட்டுவிட்டு புதிதாக இளநீரை வாங்கி இதே முறைப்படி பரிகாரம் செய்து கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: இஷ்டப்படி பணம் சேர ஏகாதசி பரிகாரம்
இளநீரை தென்னை மரத்திலிருந்து பூமியின் படாத அளவிற்கு பறித்து வந்து இப்படி மூட்டையாக கட்டி வைப்பதன் மூலம் அனைத்து தெய்வங்களின் அருளும் நமக்கு கிடைக்கும். மேலும் அதன் மூலம் பணவரவும் அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.