- Advertisement -

பண வரவு அதிகரிக்க மூன்றாம் பிறை பரிகாரம்

- Advertisement -

சிவபெருமான் தன்னுடைய முடியில் சூடிக்கொண்டு இருக்கக்கூடிய மூன்றாம் பிறை சந்திரன் என்பவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக திகழ்கிறார். அப்படிப்பட்ட மூன்றாம் பிறை சந்திர தரிசனம் என்பது நமக்கு பல விதங்களில் நன்மையை தரும். அதிலும் நவராத்திரியும் வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வரக்கூடிய மூன்றாம் பிறை தரிசனம் என்பது இன்னும் அதிக பலனை தரும். இந்த மூன்றாம் பிறை பரிகாரம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய பணம் ரீதியான பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் என்றே கூறலாம். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பண வரவு அதிகரிக்க மூன்றாம் பிறை பரிகாரம்

சந்திரனையும் மகாலட்சுமி தாயாரையும் ஒருசேர நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு அதிக அளவில் பலன் கிடைக்கும். அதே சமயம் இவர்களுக்குரிய பரிகாரத்தை நாம் செய்யும்பொழுதும் அந்த பரிகாரத்தில் நல்ல பலன் நமக்கு கிடைக்கும். பண வரவு ஏற்பட வேண்டும் என்பதற்காக சந்திர தரிசன நாளன்று மகாலட்சுமி தாயாருக்குரிய பொருட்களை வைத்து பரிகாரம் செய்யும் பொழுது அந்த பரிகாரத்திற்கு முழுமையான பலன் கிடைக்கும் என்றே கூறலாம். இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பொதுவாகவே வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதும் அந்த நாளில் பணவரவு அதிகரிப்பதற்காக பரிகாரங்கள் செய்வதையும் வழக்கமாகவே வைத்திருப்போம். இந்த நாளில் மூன்றாம் பிறை தரிசனமும் வருகிறது. மூன்றாம் பிறை நாளன்று நாம் சந்திர பகவானுக்குரிய பரிகாரத்தை செய்யும் பொழுது அதன் பலனால் பிறை நிலவானது எப்படி வளர்ந்து முழுமதி ஆகிறதோ அதேபோல் நம்முடைய வீட்டிலும் பணவரவு என்பது வளர்ந்து கொண்டே செல்லும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு தாந்திரீக சக்தி வாய்ந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமையுடன் சேர்ந்து வரக்கூடிய மூன்றாம் பிறை நாளன்று செய்வது என்பது மிகவும் சிறப்பு. அப்படி இந்த நாளை தவறவிட்டவர்கள் அடுத்த மாதம் வரக்கூடிய மூன்றாம் பிறை நாளன்றும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இதற்கு முதலில் ஒரு ஸ்பூன் அளவிற்கு பச்சரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் இதனுடன் அரை ஸ்பூன் அளவிற்கு பட்டைத்தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பட்டை தூள் கிடைக்காத பட்சத்தில் இரண்டு துண்டு பட்டையாவது அதில் வைக்க வேண்டும். அடுத்ததாக உடையாத நல்ல ஏலக்காயாக பார்த்து ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். மேலும் இதனுடன் இரண்டு ரூபாய் நாணயத்தையும் வைக்க வேண்டும். இதில் இரண்டு என்பது சந்திரனுக்குரிய எண்ணாக கருதப்படுகிறது. பச்சரிசி என்பதும் சந்திரனுக்குரிய தானியமாக கருதப்படுகிறது. மற்றொரு புறம் பார்க்கும் பொழுது பச்சரிசி, பட்டை தூள், ஏலக்காய், நாணயம் இவை அனைத்துமே மகாலட்சுமிக்குரிய பொருளாக கருதப்படுகிறது.

- Advertisement -

இப்பொழுது இதை ஒரு சுத்தமான வெள்ளை நிற துணியில் வைத்து மூட்டையாக கட்ட வேண்டும். இந்த மூட்டையை பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். அவ்வாறு வைக்கும் பொழுது சந்திர பகவானையும் மகாலட்சுமி தாயாரையும் மனதார நினைத்துக் கொண்டு “எங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டும் தாராளமாக பணம் வரவேண்டும்” என்று வேண்டிக்கொண்டு வைக்க வேண்டும். இந்த பரிகாரத்தை மாலை 6:08 மணியிலிருந்து 6:48 மணிக்குள் செய்துவிட வேண்டும். ஒரு வேளை இந்த நேரத்தை தவறவிட்டால் இரவு படுக்கச் செல்வதற்கு முன் இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள்.

இதை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றினால் போதும். இரண்டு மாதம் கழித்து இதில் இருக்கக்கூடிய நாணயத்தை மட்டும் எடுத்து ஒரு பேப்பரில் மடித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். மற்ற பொருட்களை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு மறுபடியும் மூன்றாம் பிறை நாளில் இதே போல் பரிகாரத்தை செய்து வைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: எதிர்பாராத நன்மைகள் ஏற்பட மூன்றாம் பிறை தரிசனம்

இந்த தாந்திரீக பரிகாரத்தை சந்திர பகவான் மற்றும் மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்துக் கொண்டு செய்பவர்களுக்கு பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி எதிர்பாராத பணவரவு உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -