- Advertisement -
- Advertisement -

மொத்தம் 15 திதிகள் இருக்கின்றன. வளர்பிறை திதிகள் என்றும் தேய்பிறை திதிகள் என்றும் வரும். ஒவ்வொரு திதிகளுக்கும் ஒவ்வொரு விதமான தெய்வம் அதி தேவதையாக இருப்பார்கள். அந்த திதிகளுக்குரிய தெய்வத்தை நாம் வழிபாடு செய்வதன் மூலம் அந்த தெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். ஒவ்வொரு திதியும் 24 மணி நேரமும் முழுமையாக இருக்காது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிறைவடையும். அதற்குப் பிறகு அடுத்த திதி என்பது ஆரம்பமாகும். இப்படி வரக்கூடிய திதிகளில் மூன்று திதிகள் ஒரே நாளில் சேர்ந்து வருவதை தான் முத்திதி நாள் என்று கூறுகிறோம். இந்த நாட்களில் நாம் செய்யக்கூடிய வழிபாடு நமக்கு பலவிதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில் நாளைய தினம் வரக்கூடிய முத்திதி நாளில் நிலை வாசலுக்கு எந்த முறையில் வழிபாடு செய்ய பணவரவு அதிகரிக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

வீடு என்றால் அதற்கு கண்டிப்பான முறையில் நிலைவாசல் என்பது இருக்கும். நிலை வாசலின் வழியாக தான் யாராக இருந்தாலும் அந்த வீட்டிற்குள் வர முடியும். அதனால்தான் வீடு கட்டும் பொழுது நிலைவாசல் வைப்பதற்காகவே சிறப்பு மிகுந்த பூஜைகளை செய்வார்கள். நிலை வாசலில் மஞ்சள் குங்குமம் வைத்து வழிபாடு செய்யும் வழக்கமும் இருக்கிறது.

- Advertisement -

அப்படிப்பட்ட நிலை வாசலுக்கு நாம் அனுதினமும் பூஜை செய்யும்பொழுது நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும். ஏனென்றால் நிலை வாசலில் தான் கிரகலட்சுமி வீற்றிருக்கிறார் என்றும், நம் குலத்தைக் காக்கக்கூடிய குலதெய்வம் வீற்றிருக்கிறது என்றும், வாக் தேவதை என்று கூறக்கூடிய தேவதையும் வீற்றிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரையும் ஒருசேர நினைத்து நாம் நிலை வாசலுக்கு பூஜை செய்யும் பொழுது இவர்கள் அனைவரின் அருளாலும் நாம் வேண்டிய அனைத்தும் கிடைக்கும், வேண்டாத நன்மைகளும் நம்மை தேடி வந்து சேரும்.

அதனால்தான் நம்முடைய முன்னோர்கள் அன்றைய காலத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நிலை வாசலை சுத்தம் செய்து மஞ்சள் பூசி குங்குமம் வைத்து அதற்கு மலர்களை வைத்தும் வழிபாடு செய்தார்கள். அதேபோல் நிலை வாசலுக்கு வெளியே இரண்டு புறங்களிலும் தீபமேற்றியும் வைத்தார்கள். இன்றைய காலத்தில் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் வரக்கூடாது என்பதற்காக நிலை வாசலில் எலுமிச்சம் பழத்தை வைப்பது கல் உப்பை வைப்பது என்று பலவிதமான பரிகாரங்களும் செய்யப்பட்டு தான் வருகிறது. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நிலை வாசலில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான தீப வழிபாடு நமக்கு பணத்தை சேர்க்கக்கூடிய யோகத்தை தரும். அந்த வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

மார்ச் மாதம் 26 ஆம் தேதி விடியற்காலை 12: 27 வரை ஏகாதசி திதி இருக்கிறது. பிறகு அன்று இரவு 11 05 வரை தூவாதசி திதி இருக்கிறது. அதற்குப் பிறகு திரியோதசி திதி இருக்கிறது. இந்த மூன்று திதிகளும் ஒருசேர மார்ச் மாதம் 26 ஆம் தேதி வருகிறது என்பதால் அன்றைய தினத்தில் மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணிக்குள் நாம் இந்த ஒரு தீப வழிபாட்டை செய்ய வேண்டும்.

வீட்டு நிலை வாசலை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். நிலை வாசலின் இரண்டு புறங்களிலும் ஏதாவது ஒரு மலரை வைத்துக் கொள்ளுங்கள். நிலை வாசலுக்கு வெளியே இரண்டு அகல் விளக்குகளை வைத்து அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு தீபத்தை ஏற்ற வேண்டும். பிறகு நிலை வாசலுக்கு ஊதுபத்தி, சாம்பிராணி தூபம் காட்டி கற்பூர ஆரத்தி காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்படி முத்திதிகளும் சேர்ந்து வரக்கூடிய நாளில் நிலை வாசலுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் கிரகலட்சுமி, குலதெய்வம் மற்றும் வாக் தேவதையின் அருளால் நம்மை தேடி பணம் வருவதற்குரிய யோகம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் நல்ல நேரம்

எளிமையான இந்த வழிபாட்டை முழுமனதோடு நிலை வாசலில் முத்திதிகளும் சேர்ந்து வரக்கூடிய நாளில் செய்வதன் மூலம் பணவரவு உண்டாவதற்குரிய யோகம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -