- Advertisement -

கையில் பணம் தாராளமாக புலங்க செய்ய வேண்டிய பரிகாரம்

- Advertisement -

ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் சந்திர ஆதிக்கம் நிறைந்த தினங்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பௌர்ணமி மற்றும் அமாவாசை தினத்தில் மகாலட்சுமி வழிபாடு செய்யும்பொழுது மகாலட்சுமி அருளை பரிபூரணமாக பெற முடியும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் லட்சுமி பூஜைக்கு உரித்தான ஒரு முக்கியமான அமாவாசையாக தான் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திகழ்கிறது. இந்த நாளில் குபேர லட்சுமி பூஜை செய்வது, மகாலட்சுமி பூஜை செய்வது, கேதார கௌரி விரதம் இருப்பது போன்ற பலவிதமான வழிபாட்டு முறைகளை பின்பற்றும் வழக்கத்தை பலரும் வைத்திருப்போம். இந்த நாளில் மிகவும் எளிமையான முறையில் கையில் அதிகளவு பணம் புழங்குவதற்கு செய்ய வேண்டிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கையில் பணம் புலங்க பரிகாரம்

மகாலட்சுமியின் பரிபூரணமான அருளை பெற்றவர்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட மகாலட்சுமி எந்த இடத்திலும் நிலையாக இருக்க மாட்டாள். ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்கு மாறிக்கொண்டே செல்லக்கூடியவளாக தான் மகாலட்சுமி திகழ்கிறார். அதனால்தான் அடிக்கடி மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதிலும் ஒரு சில குறிப்பிட்ட நாட்களில் நாம் செய்யக்கூடிய மகாலட்சுமி வழிபாடு அதிக அளவில் பலனை பெறும். அந்த நாட்களில் செய்யக்கூடிய பரிகாரத்திற்கும் சிறந்த பலன் உண்டு. அந்த வகையில் இந்த ஐப்பசி மாத அமாவாசையை நாம் குபேர அமாவாசை என்று கூறுகிறோம். இந்த குபேர அமாவாசையில் நாம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தைப் பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

அக்டோபர் மாதம் 22ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று குபேர அமாவாசை. இந்த பரிகாரத்தை இன்று இரவு 12 மணிக்குள் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு எந்தவித தடையும் கிடையாது. அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் செய்யலாம், பெண்கள் தீட்டு சமயமாக இருந்தாலும் செய்யலாம், வெளியூரில் இருந்தாலும் செய்யலாம், சுத்தமாக இல்லை என்றாலும் செய்யலாம், குளிக்காமல் கூட இந்த பரிகாரத்தை நாம் செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு ஒரே ஒரு பேனா இருந்தால் போதும். இந்த பேனாவின் மையானது நீளம் அல்லது பச்சை நிறத்தில் இருந்தால் போதும். முதலில் வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள்.

பிறகு பேனாவை எடுத்து உங்களுடைய இடது உள்ளங்கையில் பின்வரும் இந்த எண்ணை “808520741” எழுத வேண்டும். எழுதி முடித்த பிறகு அந்த எண்ணை ஒரு நிமிடத்தில் இருந்து ஐந்து நிமிடம் வரை உற்று நோக்க வேண்டும். பிறகு நாம் எப்பொழுதும் போல் நம்முடைய அன்றாட வேலைகளை செய்யலாம். இந்த எண் உள்ளங்கையில் குறைந்தது அரை மணி நேரமாவது இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி குபேர அமாவாசை இருக்கக்கூடிய நாளில் இந்த எண்ணை நம்முடைய உள்ளங்கையில் எழுதுவதன் மூலம் நமக்கு அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: தூக்கம் வர கற்பூரம்

எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை முழு நம்பிக்கையோடு மகாலட்சுமியை நினைத்து செய்பவர்களுக்கு அவர்களுடைய கையில் எப்பொழுதும் பணம் இருக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -