
பணம்தான் நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதால் தான் அனைவரும் பணத்தை தேடித்தேடி சம்பாதித்துக் கொண்டு இருக்கிறோம். எவ்வளவு கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்தாலும் அந்த பணத்தை வைத்து தேவையான செலவுகளை செய்து மீதம் இருக்கும் பணத்தை சேமிப்பாக மாற்றினால் தான் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண முடியும். அதை தவிர்த்து விட்டு சம்பாதித்த பணத்தை வீண் விரயமாக செலவு செய்யும் பொழுது எந்த வித முன்னேற்றமும் ஏற்படாது. அந்த வகையில் நமக்கு ஏற்படக்கூடிய வீண் செலவை குறைத்து பணத்தை சேர்த்து வைக்கவும் பணம் நம்மிடம் தங்கவும் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பணம் தொடர்பான எந்த பிரச்சினையாக இருந்தாலும் வேண்டுதலாக இருந்தாலும் நாம் மகாலட்சுமி தாயாரை தான் வழிபாடு செய்வோம். மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. பரிகாரங்களும் இருக்கின்றன. மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய வழிப்பாட்டு முறைகளும், பரிகாரமும் இருக்கிறது. அதேசமயம் சற்று மெனக்கெட்டு சில பொருட்களை வாங்கி சேகரித்து செய்யக்கூடிய வழிபாடுகளும் பரிகாரங்களும் இருக்கின்றன. இவற்றுள் மிகவும் எளிதில் நம் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்தே செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த பரிகாரத்தை மாதத்திற்கு ஒருமுறை செய்தால் போதும். அந்த மாதம் முழுவதும் நம்மிடம் பணம் தங்கும். இதற்கு நமக்கு தேவைப்படக்கூடியது பச்சரிசியும், 11 ஒரு ரூபாய் நாணயமும் தான். ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை போட்டு பரப்பிக் கொள்ளுங்கள். பிறகு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து பச்சரிசிக்குள் வைக்க வேண்டும். ஒரு ரூபாய் நாணயம் வெளியில் தெரியக்கூடாது. இந்த முறையில் வைத்து இந்த தாம்பாள தட்டை அப்படியே மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக வைத்து விடுங்கள். அந்த பச்சரிசியின் மேல் வாசனை மிகுந்த மலர்களை வைப்பது கூடுதல் பலனைத் தரும்.
தினமும் நாம் தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் பொழுது அந்த பச்சரிசிக்கும் ஊதுபத்தி, சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும். இப்படி செய்து வைத்த இந்த பச்சரிசியை ஒரு மாதம் வரை எதுவுமே செய்யக்கூடாது. ஒரு மாதம் நிறைவடைந்த பிறகு பழைய பச்சரிசியை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். புதிதாக மறுபடியும் பச்சரிசியை போட்டு அதே 11 நாணயங்களை அதில் வைத்து மகாலட்சுமி தாயார் முன்பாக வைத்து விட வேண்டும். பழைய பச்சரிசியை கால் படாத ஏதாவது ஒரு மரத்தின் அடியில் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் தீருவதோடு மகாலட்சுமியின் அருளால் வீண் செலவுகள் எதுவும் ஏற்படாமல் சம்பாதித்த பணம் சேமிப்பாக உயரும்.
இதையும் படிக்கலாமே: அடமானத்தில் இருக்கும் நகையை திருப்ப விருட்ச வழிபாடு
அதிக அளவில் செலவு செய்து யாகங்கள் வளர்ப்பது, ஹோமங்கள் செய்வது, பூஜைகள் செய்வது போன்றவற்றை செய்யாமல் மிகவும் எளிமையான முறையில் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே மகாலட்சுமி தாயாரை முழுமனதோடு நினைத்து இந்த பரிகாரத்தை செய்ய நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் வீண் செலவு ஆகாமல் நம்மிடம் தங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.