- Advertisement -

ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதித்து சேர்க்க வேண்டும் என்று தான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த பணம் நம்மிடம் தங்கி சேர்ந்து பெருக நாம் செய்யக்கூடிய செய்யக் கூடாத விஷயங்கள் என பல வரையறைகள் உண்டு. அவற்றுள் பணம் தங்க செய்யக் கூடாதவற்றை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பணம் சேர செய்யக் கூடாதவை

ஆன்மீகத்தில் தவிர்க்க வேண்டும் என்று ஒரு விஷயத்தை சொன்னால் அதற்கு விஞ்ஞான விதத்தில் கூட பல காரணங்கள் இருக்கும். அதனை ஆன்மீகமாக பார்ப்பவர்கள் ஆன்மீகமாகவும், விஞ்ஞானமாக பார்ப்பவர்கள் விஞ்ஞானமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். இது அவரவரின் விருப்பத்தை பொறுத்தது. சரி இப்பொழுது செய்யக் கூடாதவையாக சொல்லப்படுபவற்றை பற்றி பார்க்கலாம்.

- Advertisement -

மாலை வேளையில் வாசலில் அமர்ந்து பேசலாமா? கூடாது, மாலை நேரத்தில் கஷ்டங்களை பற்றி பேசக் கூடாது, மாலை வேளையில் மற்றவர்களை பற்றி குறை பேசக் கூடாது, குழந்தைகளைக் கெட்ட வார்த்தையில் திட்டக் கூடாது, தலை வாரி முடியை வீட்டுக்குள் பறக்க விடக் கூடாது இதில் ஆன்மீகம் இருப்பது என்பதை விட தலையை சீவி வீட்டில் முடியை அல்லாமல் விட்டால் தரையில் அமர்ந்து சாப்பிடும் போது முடி துண்டுகள் சாப்பாட்டில் விழுந்து குடல் குல் செல்ல வாய்ப்புள்ளது.

நம் வீட்டை குப்பையாக வைப்பதை தவிர்க்க வேண்டும். நம் வீட்டில் நல்லதை நினைத்து நல்லதை மட்டுமே பேச வேண்டும். கெட்டதை தவிர்க்க வேண்டும், இந்த காலத்தில் சில பேர் செய்யும் பெரிய தவறு விரல் நகத்தை பெருசாக ஸ்டைல் என்று வளர்க்கிறார்கள். அசுரர்கள், நரசிம்மர், சம்ஹார மூர்த்தி ஆகிய அனைவருக்கும் மட்டுமே நகம் பெரியதாக இருக்கும்.

- Advertisement -

ஏன் அவர்களைப் போல் வளர்க்கக் கூடாது என்று கூறுகிறார்கள் என்றால் பெரியதாக நகம் வளர்ப்பது அகோர தன்மையை காட்டும் . ஆகையால் அகோர தன்மை மற்றும் அகோர எண்ணத்தை அடக்கி நல்லது மட்டுமே நினைக்க அனைவரும் நகத்தை வெட்டுவதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி மரத்திற்கோ செடியிர்க்கோ தண்ணி ஊற்றாமல் அதனை வாட விட கூடாது. இதுவும் தரித்திர நிலையில் ஏற்படுத்தும்.

இந்த விஷயங்களை வீட்டில் தவிர்த்தால் வீட்டில் இருக்கும் அனைத்து தரித்திரங்களும் நீங்கி அனைத்து கெட்ட எண்ணங்களும் நீங்கி பெயர், பொருள் ஆபரணம் என பல செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியாக நம் வாழ்வை வாழ முடியும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த விஷயங்களை தவிர்ப்பவர்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் என்றென்றும் நிறைந்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: குபேர வசியம் ஏற்பட பூஜை செய்யும் முறை

இந்த விஷயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் கடைப்பிடித்து தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -