
இந்த பிரபஞ்சம் விசித்திரமானது. பல மாயைகளும், மர்மங்களும் நிறைந்தது. விடையில்லா கேள்விகள் கொண்டது. பிரபஞ்சத்தை மனிதன் எப்படி பார்க்கிறானோ, அப்படி பிரதிபலிக்க கூடியது. ரொம்பவும் அற்புதம் நிறைந்த இந்த பிரபஞ்சத்தில் இன்று பணம் தான் எல்லாம் என்று ஆகிவிட்டது. இந்த பணத்தை ஈட்டுவதற்கு, நாமும் கட்டு கட்டாய் சேர்ப்பதற்கு பணத்தை கையாளும் முறையும், அதனுடன் எப்படி விளையாடக்கூடாது? என்னும் ஆன்மிகம் சார்ந்த தகவல்களையும் அறிந்து கொள்ள போகிறோம்.
பிரபஞ்சத்தில் ஒன்றை கவனத்து இருக்கிறீர்களா? பணம் அதிகமாக யாரிடம் இருக்கிறதோ, அவர்களிடம் தான் அது மென்மேலும் சேர்ந்து கொண்டே இருக்கும். ஒருமுறை நாமும் அதைப் பற்றிக் கொண்டால், அது நம்மை விட்டுவிடாமல் நம்முடனே தங்கிவிடும். அதற்கு ஒரு சில ரகசியங்களை நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பணம் மகாலட்சுமியுடன் தொடர்புடையது. செல்வங்களுக்கு சொந்தக்காரியாக இருக்கும் மகாலட்சுமியின் அம்சமாக இருக்கக்கூடியது பணம் என்பதால் அதை அவமதிப்பது தவறாகும்.
வீட்டில் பணத்தை துடைத்து வைக்க கூடாது. பணத்தை இடது கையால் யாருக்கும் கொடுக்கவே கூடாது. பணம் ஒரே இடத்தில் இல்லாமல் வீட்டில் ஆங்காங்கே போட்டு வைத்தால் பணம் சேரும். சிலருடைய வீடுகளில் பணம் சமையலறை டப்பாக்களிலும் கூட விளையாடிக் கொண்டிருக்கும். இது சரியான செயல் தான். வறுமை நீங்க பணம் சமையலறையில் கடுகு டப்பா, பருப்பு டப்பா என்று எதிலாவது போட்டு வைக்க வேண்டும்.
சில்லரை நாணயங்கள் பஞ்சமில்லாமல் வீட்டில் இருக்க வேண்டும். உண்டியலில் சேர்த்து வைக்கலாம் அல்லது சில்லரை நாணயங்களை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு பூஜை அறையில் வைக்கலாம். சில்லறை நாணயங்களின் சத்தம் குபேரனுக்கு ரொம்பவும் பிடிக்கும். நிறைய சில்லரை நாணயங்கள் வீட்டில் இருந்தால் கட்டு கட்டாய் பணம் வீட்டில் சேரும். இப்போதெல்லாம் நவீனமயமாதல் காரணமாக சில்லறைகளை பார்க்க முடிவதில்லை.
பணத்தை கணக்கு பார்க்காமல் செலவு செய்யக்கூடாது. பணத்தை எதற்காக செலவு செய்கிறோம்? என்று கணக்கு எழுதி வைத்து செலவு செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை கணக்கு எழுதும் பொழுது ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து வைத்து பிறகு கணக்கு எழுத துவங்குங்கள். இப்படி செய்யும் பொழுது பணம் விரைவில் சேரும். பணத்தை தூக்கி எரிந்து விளையாட கூடாது. பணத்தை அவமதித்தால் பணம் சேராமல் போகும். பணத்துடன் எப்பொழுதும் நான்கைந்து கிராம்பு துண்டுகளை போட்டு வையுங்கள். சிறிதளவு பச்சை கற்பூரத்தையும் சேர்க்கலாம். இதனால் பணம் பிரபஞ்சத்தின் மூலம் ஈர்க்கப்பட்டு தக்க வைக்கும்.
இதையும் படிக்கலாமே:
நான்கு அற்புதங்களை உள்ளடக்கிய பிரதோஷம்
நம்மிடம் இருப்பது போக தான் மற்றவர்களுக்கு என்னும் கூற்று தவறானது. நம்மிடம் இருப்பவற்றில் ஒரு சிறு பகுதியாவது மற்றவர்களுக்கு என்று கொடுக்க வேண்டும். நமக்கென கேட்டால் இறைவன் செவி சாய்ப்பதில்லை, பிறருக்கே என கேட்டால் இறைவன் உடனே செவி சாய்கிறார் என்கிறது சாஸ்திரங்கள். எனவே மற்றவர்களுக்கு உதவி செய்ய தயக்கம் காட்டாதீர்கள். தேவைப்படுபவர்களுக்கு தாராளமாக உதவி செய்ய உங்கள் பணத்தை செலவளியுங்கள். செலவழிக்க செலவழிக்க தான் பணமானது சேரும். சேர்த்து வைத்துக் கொண்டே இருந்தால், அது தேய்ந்து கொண்டே போகும் என்பது தான் பணத்தின் பிரபஞ்ச விதியாகும். முயற்சி செய்து பாருங்கள், நீங்களும் பணக்காரனாகலாம்.