நாளை பங்குனி மாதத்தில் வந்திருக்கும் தேய்பிறை பிரதோஷம். இதில் வேறு என்ன சிறப்பு இருக்கிறது. நாளைய தினம் சிவனுக்குரிய மாத சிவராத்திரியும் இருக்கிறது. வியாழக்கிழமை அன்று இந்த பிரதோஷ நாள் வந்திருப்பதால், இதை குருவார பிரதோஷம் என்று சொல்கிறார்கள். ஆக நாளை தினம் குரு பகவான் வழிபாடு செய்வது சிறப்பு.
வியாழக்கிழமை என்றால் நம் நினைவுக்கு வருவது குபேரர். ஆகவே இந்த பிரதோஷ நாளை குபேர பிரதோஷம் என்றும் சொல்லலாம். ஆக, சிவராத்திரி, பிரதோஷம், குரு நாள், குபேர நாள். இந்த நான்கு சக்திகளை ஒன்றாக அடக்கியுள்ள இந்த நாளில் நேர்மறை ஆற்றல் பூமியில் அதிகமாக இருக்கும்.
இந்த நாளில் பிரதோஷ நேரத்தில் நாம் வைக்கக்கூடிய வேண்டுதலுக்கு பல மடங்கு பலன் கிடைக்கும். இப்போது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பிரச்சனை என்றால் அது பண பிரச்சனை. இதை தீர்க்கக் கூடிய சக்தி ஐஸ்வரேஸ்வரர் என்று சொல்லப்படும், சிவனுக்கும் இருக்கு. குரு பகவானுக்கும் இருக்கு. குபேரருக்கும் இருக்கு.
பணக்கஷ்டம் தீர்க்கும் பிரதோஷ தீபம்
நாளை 27-3-2025 வியாழக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் இந்த விளக்கை வீட்டில் ஏற்றி விட வேண்டும். ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். 27 கொண்டை கடலையை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு கொண்டை கடையிலையாக அந்த தாம்பூல தட்டில் வைக்க வேண்டும்.
“ஐஸ்வர்யேஸ்வராய நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி கொண்டை கடலையை அந்த தட்டில் வைத்து, அந்த கொண்டைக்கடலைகளுக்கு நடுவே ஒரு மண் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பச்சை நிற திரி போட்டு, தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இவ்வளவுதான் வழிபாடு. இந்த கொண்டைக்கடலை தட்டின் மேல் 3 வில்வ இலைகளை வைத்து விடுங்கள். இந்த விளக்கை பூஜை அறையில் ஏற்றி வைக்கலாம்.
நாளை பிரதோஷ நேரத்தில் இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, மனம் உருகி பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தர வேண்டும் என்று வேண்டுதல் வைத்தால் கோடான கோடி கடனும் அடையும். கோடான கோடி செல்வம் உங்களுடைய வீட்டில் பெருக்கும். கொண்டைக்கடலை குரு பகவானுக்கு உரியது, வியாழக்கிழமை மாலை நேரம் குபேர நேரம். பச்சை நிற திரி போட்டு, விளக்கு ஏற்றினால் குபேரர் ஓடோடி வந்துவிடுவார்.
முடிந்தால் நெற்றியில் கொஞ்சம் பச்சை குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். ஈசனுக்கு வில்வ இலை மகாலட்சுமிக்கு நெய், குரு பகவானுக்கு கொண்டை கடலை, என்று அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து வைத்து விட்டோம். விளக்கை ஏற்றி வைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜை செய்தால் மட்டும் போதும்.
இதையும் படிக்கலாமே: கணவன் கைக்குள் இருக்க
பூஜை நிறைவடைந்த பிறகு, அடுத்த நாள் அந்த கொண்டைக்கடலைகளை எடுத்து நன்றாக வேக வைத்து, சுண்டல் செய்து பிரசாதமாக சாப்பிடலாம். இவ்வளவுதான் பரிகாரம். நம்பிக்கை இருந்தால், இதை நீங்கள் செய்து பாருங்கள். அடுத்த மாதம் வரக்கூடிய பிரதோஷத்த நாளுக்குள், உங்களுடைய பண பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்திருக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.