- Advertisement -
- Advertisement -

பணம் ஒருவருடைய கையில் அதிகம் புழங்க, அவர்களுக்கு சில பழக்கவழக்கங்கள் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. ஒருவர் கைராசியாக இருப்பதற்கும், முக ராசியாக இருப்பதற்கும் கூட அவர்களின் செயல்கள் தான் காரணம் என்கிறது சாஸ்திரம். பெண்களுக்கு ஒவ்வொரு விதி இருப்பது போல, ஆண்களுக்கும் இந்த மாதிரியான விதிகள் கடைபிடிக்க பணம் நிறைய சேரும் என்பது நம்பிக்கை. ஆண்களிடம் பணம் சேராமல் போகும் காரணம் என்ன? பணம் சேர்க்கக் கூடிய விதிகள் என்னென்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் தொடர்ந்து காண இருக்கிறோம் வாருங்கள்.

1.
முதலாவதாக ஆண்கள் பெண்களை அழ வைப்பது, வேதனைப்படுத்துவது, துன்புறுத்துவது போன்ற விஷயங்களை செய்யக்கூடாது. பெண்கள் அழும் வீட்டில், ஆண்களிடம் பணம் சேராது என்பார்கள். எனவே இந்த விஷயத்தில் நீங்கள் தான் அவர்களை அழாமல் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்களின் சிரிப்பில் தான் உங்களிடம் மகாலட்சுமியும் தங்குகிறாள்.

- Advertisement -

2.
பகல் நேரத்தில் ஒரு ஆண் உடலுறவு கொள்ள முயற்சிப்பது பணத் தடையை ஏற்படுத்தும். பகலில் அவன் சுத்தபத்தமாக இருக்க வேண்டும். பகல் நேரத்தில் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பகலில் அவன் ஆற்றலை முழு உழைப்பாக மாற்றினால் அவனிடம் பணம் இயல்பாகவே தங்கும்.

3.
மனைவியைத் தவிர ஒரு ஆண், மற்ற பெண்களை சீண்டுவது கூட பாவம் தான். வேறு பெண்களுடன் மனைவியை விடுத்து, ஒரு ஆண் உறவு கொண்டால் அவரிடம் பணம் தங்குவது கடினமாகிவிடும். எப்பேர்ப்பட்ட உழைப்பை கொடுத்தாலும், அவனால் முன்னேற்றம் காண்பது அரிதானது.

- Advertisement -

4.
ஒரு ஆண் இந்த பிரபஞ்சத்திடம் மனம் உருகி எது கேட்டாலும், அது இந்த பிரபஞ்சம் அவனிடம் எடுத்துக் கொண்டு வந்து சேர்க்கும். ஆழமாக எந்த ஒரு விஷயத்தை அவன் நினைத்தாலும், அது அவனை வந்தடையும். ஆனால் அதன் மேல் ஆயிரம் மடங்கு முழுமையான நம்பிக்கையை செலுத்த வேண்டும். இந்த பிரபஞ்ச இயற்கை பார்க்குமாறு வெட்ட வெளியில் ஒரு பெண்ணுடன் அவன் உறவு கொண்டால் நிச்சயம் அவனிடம் பணம் சேரவே சேராது.

5.
திருமணமான ஒரு ஆணுக்கு பணம் சேர, அவன் தன் மனைவியை அன்பாகவும், மரியாதைடனும் நடத்த வேண்டும். மேலும் அவன் பணக்காரன் ஆக தன் மனைவிக்கு வாசனை மிகுந்த மல்லிகை மலர்களை அடிக்கடி வாங்கி கொடுக்க வேண்டும்.

- Advertisement -

6.
ஒரு ஆணிடம் பணம் சேர்வதற்கு, அவன் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தன் மனைவியிடம் சண்டை போடாமல் இருக்க வேண்டும். இந்த நாட்கள் மிகவும் புனிதமானவை. புனிதம் மிகுந்த இந்த நாளில் பக்தியுடன் அவன் இருக்க, செல்வாதி செல்வங்கள் அத்தனையும் அவன் வசப்படும். அதை விடுத்து வீண் சண்டை போட்டால் வந்த மகாலட்சுமியும் திரும்ப சென்று விடுவாள்.

இதையும் படிக்கலாமே:
திருஷ்டி போக்கும் மந்திரம்

7.
ஒரு ஆணிடம் பணம் சேருவதற்கு, அவன் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை மார்பக பகுதிகளில் அல்லது தொடை பகுதிகளில் படுமாறு முன்பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். உடலின் பின் பாகத்தில் பணம் வைத்தால் அவனிடம் பணம் சேருவது என்பது கடினமாகிவிடும். பின் பாக்கெட்டில் பணம் வைப்பவர்கள் பணத்தை எண்ணி எண்ணி தான் செலவிட வேண்டி இருக்கும். தாராளமாக செலவு செய்ய அவர்களால் முடியாது.

- Advertisement -