
பணம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம். சாப்பிடுறது, உடை, வீடு, மருந்துன்னு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பணம் வேணும். திடீர்னு ஏதாவது செலவு வந்தா பயப்படாம இருக்கவும், நாம விரும்புற வாழ்க்கையை வாழவும், நல்ல கல்வி, ஆரோக்கியம் பெறவும், உறவுகளை பலப்படுத்திக் கொள்ளவும் பணம் உதவுது. ஆனா, பணம் மட்டுமே சந்தோஷத்தைக் கொடுக்காது. அன்பும், நல்ல உறவுகளும், மன அமைதியும் தான் முக்கியம். பணம் ஒரு கருவி, அதை எப்படிப் பயன்படுத்துறோம்? என்பதில் தான் எல்லாம் இருக்கிறது.
ஒரு ஜான் வயிற்றுக்குத்தானே இந்த திண்டாட்டமெல்லாம் என்று அடிக்கடி நமக்கு விரக்தி மனப்பான்மை வரும். பணம் பத்தும் செய்யும் என்றுதான் உங்களுக்கு தெரியும். இந்த பணம் பதினொன்றாவது ஒன்றையும் செய்யும். இருப்பதை அனுபவிக்க விடாமல், பறப்பதற்கு ஆசைப்பட வைக்கும். இப்படி எவ்வளவு தத்துவங்கள் சொன்னாலும் கடைசியில், பணம் தான் இங்கு எல்லாம் என்று முற்றுப்புள்ளி வைப்பவர்களுக்கு, பணத்தை வசியம் செய்வது எப்படி? என்று இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
பணம் வசியம் ஆவதற்கு முதலில் மகாலட்சுமிக்கு பிடித்தபடி உங்களுடைய வீட்டை வைத்துக் கொள்ளுங்கள். வீடு சுத்தமாக இருந்தாலும் மன அழுத்தம் குறையும், இதனால் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் ஈடுபாட்டுடன் நம்மால் இயங்க முடியும். மன அழுத்தம் இல்லாத கடினமான உழைப்பு நம்மை மென்மேலும் உயர்த்தி பணக்காரனாக்கும். கடவுள் நம்பிக்கையை அதிகமாக வளர்த்துக் கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்ததும் சுத்த பத்தமாக குளித்து முடித்து பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றி வைத்து சாமி கும்பிடுங்கள்.
காலையில் வேலைகளை துவங்கும் முன்பு நம் மூளைக்கு நாம் கொடுக்கும் இந்த இறை சிந்தனை தான் பணத்தை வசியம் செய்து ஈர்க்கக்கூடிய மாபெரும் ரகசியமாகும். இது ஒரு விதமான பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும். அப்படி சாமி கும்பிடும் பொழுது ஒரு சிறிய பித்தளை தட்டில் சிறிதளவு கிராம்பு மற்றும் கசகசாவை பொடி செய்து போடுங்கள். இவற்றை லேசாக வறுத்து பொடி செய்து ஒரு கண்டெய்னரில் வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது பயன்படுத்துவதற்கு சுலபமாக இருக்கும்.
இந்த பொடி சம அளவு சேர்த்து அதனுடன் பன்னீர் கலந்து திலகம் போல தயார் செய்து கொள்ளுங்கள். இதை தினமும் நெற்றியில் நீங்கள் வேலைக்கு கிளம்பும் முன்பு பூஜை அறையில் நின்று வைத்துக் கொண்ட பின்னர் புறப்படுங்கள். இது உங்களை எதிர்கொள்ளும் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு கவசமாக செயல்படும். கண்ணேறு, கண் திருஷ்டிகள் கழிந்து போகும். தீய சக்திகள் உங்களை அண்டவிடாமல் பாதுகாக்கும் அரணாக செயல்படும். நேர்மறை ஆற்றல்களையும் பணத்தையும் ஈர்க்கும் சக்தி இதற்கு உண்டு என்று நம்பப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:
முருங்கைக் கீரை சட்னி செய்முறை
பணத்தை எப்போதும் எண்ணும் பொழுது எச்சில் தொட்டு எண்ணாதீர்கள். பணத்தை வலது கையில் மற்றவர்களுக்கு கொடுக்க பழகுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள். பணம் என்பது ஒரு இடத்தில் நிலையாக தங்கும் ஒரு விஷயம் அல்ல! அது கைக்கு கை மாறிக்கொண்டே இருக்கிறது. பணம் நிலையாக ஒரு நபரிடம் தங்குவதற்கு, மகாலட்சுமியின் அருள் தேவை. இந்த அருளை கொடுக்கக்கூடிய சக்தி வாய்ந்த இந்த திலகத்தை தினமும் நீங்கள் வேலைக்கு செல்லும் முன்பு நெற்றியில் இட்டுக்கொண்டு பின்னர் வேலைகளை துவங்கிப் பாருங்கள், நல்ல அதிர்ஷ்டம் உங்களை வந்து சேர்ந்து நிறைய சம்பாதிப்பீர்கள்.