
பொதுவாகவே பங்குனி மாதம் என்பது முருகப்பெருமானுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அந்த மாதத்தில் வரக்கூடிய பங்குனி உத்திரம் என்பது முருகப் பெருமானுக்குரியதாகவும் அதேசமயம் பங்குனி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த கிழமையாகவும் திகழ்கிறது. அப்படிப்பட்ட பங்குனி செவ்வாய்க்கிழமையோடு முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை நட்சத்திரம் சேர்ந்து வருவதால் அன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய முருக வழிபாட்டிற்கு பல மடங்கு பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நன்னாளில் முருகப் பெருமானை எப்படி வழிபாடு செய்தால் வேண்டிய வரம் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாகவே முருகப்பெருமானை நினைத்து விரதம் இருக்கக்கூடிய நட்சத்திரங்களில் ஒன்றாக திகழ்வதுதான் கிருத்திகை நட்சத்திரம். ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்ய நம்முடைய வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக முருகப்பெருமானுக்கு உகந்த மாதங்களில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரத்திற்கு அதிக பலன் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. அந்த வகையில் பங்குனி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரம் என்பது ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆரம்பித்து ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி 2 மணிக்குள் முடிகிறது. அதனால் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியே நாம் கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய வழிபாட்டை செய்து விட வேண்டும்.
பலரும் கிருத்திகை நட்சத்திர நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை செய்து தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். அப்படி வழிபாடு செய்பவர்கள் எப்பொழுதும் போல் அவர்களுடைய வழிபாட்டை செய்து கொள்ளலாம். ஒருவேளை புதிதாக வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த பங்குனி கிருத்திகை அன்று வழிபாட்டையும் மேற்கொள்ளலாம். எப்போதும் செய்யும் வழிப்பாட்டோடு சேர்த்து இந்த ஒரு எளிமையான வழிபாட்டையும் நாம் செய்வதன் மூலம் முருகப்பெருமானின் அருள் நமக்கு விரைவிலேயே கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.
பொதுவாக கிருத்திகை நட்சத்திர நாளன்று ஆறு அகல் விளக்குகளில் கார்த்திகை பெண்களை நினைத்து முருகப்பெருமானுக்கு முன்பாக தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த தீபத்தை ஏற்றுவதோடு மட்டுமல்லாமல் இந்த ஒரு முறையையும் நாம் பின்பற்றும் பொழுது நாம் வேண்டியவரும் நமக்கு கிடைக்கும்.
இதுக்கு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாள தட்டில் ஆறு வெற்றிலைகளை வைக்க வேண்டும். இதன் காம்பை நீக்கக்கூடாது. இந்த வெற்றிலைகளை மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தமாக கழுவி அதன் நுனிப்பகுதி உள் இருப்பது போல் காம்பு பகுதி வெளியில் இருப்பது போல் வட்ட வடிவில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு வெற்றிலைக்கு நடுவிலும் ஒரு ஸ்பூன் அளவிற்கு துவரம்பருப்பை வைக்க வேண்டும். பிறகு துவரம்பருப்பிற்கும் மேலாக ஒரு ரூபாய் நாணயத்தை 6 வெற்றிலைகளிலும் வைக்க வேண்டும். இப்படி வைத்து முடித்த பிறகு முருகப்பெருமானுக்குரிய சரவணபவ மந்திரத்தை ஒவ்வொரு வெற்றிலையின் மேல் இருக்கக்கூடிய நாணயத்தின் மீது கையை வைத்துக்கொண்டு ஆறு முறை கூற வேண்டும். இப்படி ஒவ்வொரு வெற்றிலையின் மீதும் கைவைத்து ஆறு முறை சரவணபவ மந்திரத்தை கூறி முருகப் பெருமானை முழுமனதோடு வழிபட முருகப் பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே:சகல காரியங்களிலும் வெற்றி உண்டாக
எளிமையான அதே சமயம் அதிக சக்தி வாய்ந்த இந்த வழிபாட்டு முறையை பங்குனி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திர நாளன்று முழு மனதோடு முருகப்பெருமானை நினைத்து செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டிய வரம் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.