- Advertisement -

வரும் வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் வரை செய்ய வேண்டிய பரிகாரம்

- Advertisement -

இந்த பூமியில் நாம் வாழ்ந்து முடித்த பின்பும் நம்முடைய பெயரை அடுத்தவர்கள் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஏதாவது ஒரு சாதனையை படைக்க வேண்டும். இந்த உலகத்திற்கே நம்முடைய புகழ் தெரிய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், வாழ்க்கையில் நீங்கள் அதி விரைவாக முன்னேற வேண்டும் என்று நினைத்தால், இன்று தொடங்கி பங்குனி உத்திரம் வரும் நாள் வரை முருகப்பெருமானை எப்படி வழிபாடு செய்யலாம்.

அட அவ்வளவு தூரம் செல்ல வேண்டாம் அன்றாட வாழ்க்கையில் நிம்மதி கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெயர், புகழ், அந்தஸ்து, பதவி உயர்வு, பணம், கல்வி, திருமணம் குழந்தை பாக்கியம் இவைகளை எல்லாம் வாரி வழங்குவதில் வல்லமை கொண்டவர் முருகப்பெருமான். இன்று தொடங்கி, முருகப்பெருமானை ஒரு சக்தி வாய்ந்த முறையில் வழிபாடு செய்யப் போகின்றோம். அதற்கான பதிவு தான் இது.

- Advertisement -

பங்குனி உத்திரம் பரிகாரம்

இன்று வெள்ளிக்கிழமை. அடுத்த வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம். இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய துவங்கக்கூடிய நாள் உங்களுடைய வாழ்க்கையில் வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக, உங்கள் தலையெழுத்தானது நிச்சயம் மாற்றி எழுதப்படும். உங்கள் தலையெழுத்தை மாற்றப் போகும் சக்தி வாய்ந்த இந்த வழிபாட்டைப் பற்றிய விரிவான தகவலை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

முதலில் இதற்கு ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வழக்கம்போல தான் முருகப்பெருமானை வேண்டிக் கொண்டு இந்த பரிகாரத்தை துவங்கவும். பூஜை அறையில் விளக்கு ஏற்றி, முருகனை வணங்கி, நோட்டுப் புத்தகத்தில் முதலில் “ஓம் சரவணபவ” என்று எழுதுங்கள். பிறகு “வேலும் மயிலும் துணை” என்று எழுதிவிட்டு நட்சத்திர கோலம் போட்டு அதன் உள்ளே “ஓம் சரவணபவ” மந்திரத்தை எழுதி விடவும். பரிகாரத்தை துவங்கும் போது முதல் பக்கத்தில் இதை எல்லாம் எழுதி விடவும். அடுத்த பக்கத்தை திருப்பிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது உங்களுடைய பிரார்த்தனையை அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுத துவங்க வேண்டும். எத்தனை முறை தெரியுமா 3 6 9 முறை. அச்சச்சோ, பயந்து விடாதீங்க. 369 முறை எழுத வேண்டாம். காலையில் உங்களுடைய வேண்டுதலை 3 முறை எழுதுங்கள், மாலை உங்களுடைய வேண்டுதலை 6 முறை எழுதுங்கள். இரவு தூங்க செல்லும் போது 9 முறை உங்களுடைய வேண்டுதலை அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுத வேண்டும் இவ்வளவுதான் பரிகாரம். நீங்க எந்த இடத்தில் இருந்தாலும் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் கையில் அந்த நோட்டு புத்தகத்தை வைத்து உங்களுடைய வேண்டுதலை எழுத மறக்காதீங்க.

பரிகாரத்தை துவங்கக்கூடிய முதல் நாள் மட்டும் முதல் பக்கத்தில் நட்சத்திர கோலம் வரைந்து, வேலுமையிலும் துணை என்று எழுதி, சரவணபவ மந்திரத்தை எழுதினால் போதும். அடுத்தடுத்த நாட்களில் உங்களுடைய கோரிக்கையை மட்டும் அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதி வர வேண்டும்.

- Advertisement -

முருகனை மனதில் நிறுத்தி என்ன வேண்டுதல் வைத்தாலும் தவறு கிடையாது. நியாயமான வேண்டுதலாக இருக்க வேண்டும். ஒரே ஒரு வேண்டுதலை தான் அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுத வேண்டும். பல கோரிக்கைகளை போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது வேண்டுதல் ஒரு கோரிக்கைக்காக மட்டும் இருக்க வேண்டும்.

நல்ல வாழ்க்கைத் துணை அமைய வேண்டும், திருமணம் நடக்க வேண்டும், கடன் சுமை குறைய வேண்டும், வீடு கட்ட வேண்டும், வேலையில் ஜெயிக்க வேண்டும், வியாபாரத்தில் ஜெயிக்க வேண்டும், இப்படி ஒரு வரியில் உங்களுடைய பிரார்த்தனையை எழுதினால் போதும்.

நீங்கள் என்ன பிரார்த்தனையை அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதினீர்களோ, அது பங்குனி உத்திரம் வரக்கூடிய நாளில் பலிக்கும் என்பதுதான் இந்த பரிகாரத்தில் பின்னால் மறைந்திருக்கும் நம்பிக்கை. ஆத்மார்த்தமாக இதை செய்ய வேண்டும் நம்பிக்கை இல்லாமல் செய்பவர்களுக்கு நிச்சயம் பரிகாரம் பலன் தராது. சரி பங்குனி உத்திரம் எந்த நாளில் வருகிறது என்று சொல்லவில்லையே.

இதையும் படிக்கலாமே: 4-4-2025 கடன் தீர பிரியாணி இலை பரிகாரம்

இன்று வெள்ளிக்கிழமை. வரக்கூடிய வெள்ளிக்கிழமை ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி 2025 பங்குனி உத்திர நாள் வரவிருக்கிறது. வெள்ளிக்கிழமை அன்று வரக்கூடிய இந்த பங்குனி உத்திரத்திற்கு பல மடங்கு சிறப்பு. இந்த நாளை தவிர விடாதீங்க. நிச்சயம் ஒரே வாரத்தில் உங்களுடைய ஆசை நிறைவேற இது ஒரு நல்ல வாய்ப்பு என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -