4-4-2025 இன்றைய தினம் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள, உகந்த தினமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. நேரம் காலம் பார்த்து ஒரு வேலையை செய்தால், நாம் செய்யக்கூடிய நல்ல காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும் என்று சொல்லுவார்கள் அல்லவா. அதுபோல தான் இன்றைக்கு வந்திருக்கும் இந்த பிரபஞ்ச சக்தி வாய்ந்த நாளும் இருக்கிறது.
இந்த நாளில் பிரபஞ்சத்திடம் நாம் வைக்கும் வேண்டுதல் அதிவிரைவாக பலிக்கும் என்று நம்பப்படுகிறது. உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் இதை நீங்கள் பின்பற்றி பாருங்கள். இன்றைய தினம் முடிவதற்குள் இந்த பரிகாரத்தை எந்த நேரத்தில் செய்தாலும் சிறப்பு. முடிந்தால் இன்று மாலை 4:44pm மணிக்கு இந்த பரிகாரத்தை செய்யவும்.
கடன் தீர பரிகாரம்
4 பிரியாணி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். நான்கு பிரியாணி இலையிலும் ஒரு பக்கம் 444 என்று எழுதி விடுங்கள். அதற்கு பின்னால் உங்களுக்கு இருக்கும் கடன் தொகை சீக்கிரம் அடைய வேண்டும் என்று எழுத வேண்டும். உதாரணத்திற்கு இந்த வங்கியில் வாங்கிய கடன் சீக்கிரம் அடைய வேண்டும், பைக் லோன் சீக்கிரம் அடைய வேண்டும், வீட்டில் லோன் சீக்கிரம் அடைய வேண்டும், என்று எழுதலாம்.
நீங்கள் குறிப்பிட்ட நபரிடம் கைநீட்டி பணம் வாங்கி இருந்தால், அந்த நபரின் பெயரை எழுதி அந்த கடன் அடைய வேண்டும் என்று எழுதிக் கொள்ளலாம். நான்கு பிரியாணி இலையிலும் ஒரே ஒரு கோரிக்கை மட்டும் தான் எழுதப்பட வேண்டும். உங்களை விட்டு எந்த கடன் சீக்கிரம் விலகி செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த கடனை எழுதி இந்த பிரியாணி இலையை நெருப்போடு நெருப்பாக எரித்து விடுங்கள்.
பிறகு அந்த சாம்பலை தண்ணீரில் கரைத்து சிங்கில் கொட்டி விட வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம். இது வெறும் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு மட்டும்தானா. நிச்சயம் கிடையாது. உங்களை விட்டு எந்த கெட்ட பழக்கங்கள் விடுபட வேண்டும் என்றாலும், இதே பரிகாரத்தை முயற்சி செய்யலாம்.
அந்த பிரியாணி இலையில் உங்களை விட்டு விலக வேண்டிய கெட்டப்பழக்கத்தை எழுதுங்கள், அல்லது ஒரு குறிப்பிட்ட நபர் உங்களை விட்டு விலக வேண்டும், எதிரி தொல்லை உங்களை விட்டு விலக வேண்டும், கண் திருஷ்டி விலக வேண்டும், எதுவாக இருந்தாலும் இந்த பிரியாணி இலையில் எழுதிக் கொள்ளலாம். உங்களை விட்டு என்ன கஷ்டம் விலக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை பிரியாணி இலையில் எழுதி எரித்து விடுங்கள். நிச்சயம் அந்த கெட்டது உங்களை விட்டு விலகி விடும்.
சரிங்க, எனக்கு விருப்பம் இருக்கிறது. வேண்டிய வரங்களை நான் பெற வேண்டும். குறிப்பிட்ட நபரை திருமணம் செய்து, கை பிடிக்க வேண்டும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், இதுபோல ஆசைகள் இருக்கிறது என்றால் என்ன செய்வது.
இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனையிலிருந்து தப்பிக்க உதவும் ஆன்மீக குறிப்புகள்
ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்து உங்களுடைய விருப்பங்களை 44 முறை எழுதினால் நீங்கள் விரும்பியது உங்கள் கையை வந்து சேரும். இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் 44 நாட்களுக்குள் உங்களுடைய வேண்டுதல் நிறைவேற நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.