
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை என்பது வரும். இந்த திங்கட்கிழமையை சோமவாரம் என்று கூறுவோம். சந்திர பகவானுக்குரிய கிழமையாக இந்த கிழமை திகழ்கிறது. சந்திர பகவானுக்குரிய அதிதேவதியாக சிவபெருமான் திகழ்கிறார். அதனால் சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த கிழமையாகவும் திங்கட்கிழமை திகழ்கிறது. அப்படிப்பட்ட திங்கட்கிழமை அமாவாசை முடிந்து வரக்கூடிய வளர்பிறை திங்கட்கிழமையாக இருக்கும் பட்சத்தில் அந்த நாளில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்தோம் என்றால் நம் வாழ்வில் நாம் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகிச் செல்லும் என்று கூறலாம். அப்படிப்பட்ட சிவபெருமான் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நாம் ஒவ்வொருவருக்கும் பலவிதமான கஷ்டங்கள் இருக்கும். அந்த கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டுதான் இருப்போம். எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த கஷ்டங்களில் இருந்து விடுபட முடியாத சூழ்நிலையில் கூட சிலர் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களும் சரி, இதுவரை நாம் பட்ட கஷ்டம் இனிமேல் நமக்கு வரக்கூடாது என்று நினைப்பவர்களும் சரி அமாவாசை முடிந்து வரக்கூடிய முதல் வளர் பிறை சோமவார நாள் அன்று மறவாமல் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
அந்த வகையில் அமாவாசை முடிந்து வரக்கூடிய முதல் திங்கட்கிழமையாக ஜூன் மாதம் 30ஆம் தேதி ஆனி மாதத்தின் 16ஆம் நாள் திகழ்கிறது. இது ஜூன் மாதத்தின் கடைசி நாள் என்பதால் அன்றைய தினத்தில் நாம் இந்த சிவ வழிபாட்டை செய்யும் பொழுது இனிமேல் பிறக்கப் போகும் மாதம் நமக்கு சிறப்பாக அமையும் என்றே கூறலாம். இந்த நாளில் நாம் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். தங்களால் எந்த நேரத்திற்கு செல்ல முடியுமோ அந்த நிறத்திற்கு செல்லலாம்.
அவ்வாறு செல்லும் பொழுது சிவபெருமானுக்குரிய வில்வ இலையை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். இது மாலையாகவோ அல்லது உதிரியாகவோ எப்படி இருந்தாலும் பரவாயில்லை. உதிரியாக இருக்கும் பட்சத்தில் அர்ச்சனை செய்ய கொடுக்கலாம். மாலையாக இருக்கும் பட்சத்தில் சிவபெருமானுக்கு சாற்ற சொல்லிக் கொடுக்கலாம். இப்படி செய்துவிட்டு தங்களின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஒருவேளை ஆலயத்திற்கு செல்ல இயலாது என்பவர்கள் வீட்டிலேயே இருக்கக்கூடிய சிவபெருமானின் படத்திற்கு அல்லது லிங்கத்திற்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி வளர்பிறை சோமவார நாள் அன்று சிவபெருமானை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யும் பொழுது நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்துமே நீங்கும்.
இதையும் படிக்கலாமே: வாழ்க்கையை வெற்றி மயமாக்கும் 369
ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவபெருமானுக்கு விசேஷமான கிழமை தான். இருப்பினும் அமாவாசை முடிந்து வரக்கூடிய முதல் திங்கட்கிழமை நாம் சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது சிவபெருமானின் அருளால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளும், கஷ்டங்களும் நம்மை விட்டு நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.