- Advertisement -

பாவங்களை நீக்கும் பெருமாளின் திருநாமங்கள்

- Advertisement -

விரதங்களிலேயே மிகவும் உன்னதமான விரதமாக திகழப்படுவது தான் ஏகாதசி விரதம். பொதுவாக மார்கழி மாதத்தில் வரக்கூடிய வைகுண்ட ஏகாதசி அன்றுதான் பலரும் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்வார்கள். ஆனால் ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை ஏகாதசி என்றும் தேய்பிறை ஏகாதேசி என்றும் இரண்டு ஏகாதசிகள் வரும். இந்த இரண்டு ஏகாதசிகளிலுமே விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்யும்பொழுது பெருமாளின் பரிபூரணமான அருளை நம்மால் பெற முடியும். அதனால் செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் ஏற்படாது.

ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய்பிறை ஏகாதசி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. அந்த வகையில் வைகாசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை ஏகாதசி வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பை தரும். இந்த சிறப்பு வாய்ந்த தேய்பிறை சுக்கிர ஏகாதசி அன்று விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் காலையில் எழுந்தவுடன் பெருமாளின் இந்த நாமங்களை முழு மனதோடு ஒருமுறை கூறினால் போதும். இதுவரை நாம் செய்த பாவங்கள் அனைத்துமே நீங்கும். அந்த நாமங்கள் என்ன என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

பாவங்களை நீக்கும் திருநாமங்கள்

பொதுவாகவே பெருமாளுக்குரிய ஏகாதசி நாளன்று பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. இயன்றவர்கள் அன்றைய தினம் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்வார்கள். உங்களால் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலோ அருகில் இருக்கக்கூடிய பெருமாளின் ஆலயத்திற்கு செல்ல இயலாது என்ற சூழ்நிலையில் இருந்தாலும் இந்த திருநாம வழிபாட்டை நாம் செய்யலாம்.

அனுதினமும் ஒவ்வொரு நொடியும் நாம் தெய்வீக சிந்தனையில் ஈடுபடுகிறோம் என்றால் அதற்கு தெய்வங்களின் திருநாமங்களை உச்சரிப்பதே ஒரே வழியாக திகழ்கிறது. அந்த வகையில் பெருமாளின் அதி அற்புதமான இந்த 24 திருநாமங்களை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய ஏகாதசி நாள் அன்று காலையில் எழுந்தவுடன் கூற வேண்டும். இந்த நாமத்தை கூறுவதற்கு குளித்திருக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. காலையில் எழுந்ததும் பல் துலக்கி விட்டு முகத்தை கழுவி விட்டு ஏதாவது ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து இந்த நாமத்தை கூறலாம். பூஜை அறையில் அமர்ந்து கூற வேண்டும் என்ற நிபந்தனையும் கிடையாது. தீபம் ஏற்றி வைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் கிடையாது. பெண்கள் மாதவிடாய் சமயத்தில் இருந்தாலும் இந்த மந்திரத்தை கூறலாம் என்பது கூடுதல் சிறப்பு வாய்ந்தது.

- Advertisement -

ஒரே ஒருமுறை மட்டும் இந்த பெருமாளின் 24 திருநாமங்களை முழுமனதோடு பெருமாளையும், மகாலட்சுமி தாயாரையும், கருடாழ்வாரையும் நினைத்து கூறினால் போதும். பெருமாளின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும். அதன் மூலம் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். பணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

பெருமாளின் திருநாமங்கள்

“ஓம் சங்கர்ஷனாய நமஹ
ஓம் நாராயணாய நமஹ
ஓம் வாசுதேவாய நமஹ
ஓம் மாதவாய நமஹ
ஓம் ப்ரத்யும்னாய நமஹ
ஓம் கோவிந்தாய நமஹ
ஓம் அனிருத்தாய நமஹ
ஓம் விஷ்ணுவே நமஹ
ஓம் புருஷோத்தமாய நமஹ
ஓம் மதுசூதனாய நமஹ
ஓம் அதோக்ஷஜாய நமஹ
ஓம் வாமனாய நமஹ
ஓம் த்ரிவிக்ரமாய நமஹ
ஓம் லட்சுமி நரசிம்மாய நமஹ
ஓம் அச்சுதாய நமஹ
ஓம் ஸ்ரீதராய நமஹ
ஓம் ஜனார்தனாய நமஹ
ஓம் ரிஷிகேசாய நமஹ
ஓம் உபேந்த்ராய நமஹ
ஓம் ஹரியே நமஹ
ஓம் தாமோதராய நமஹ
ஓம் ஸ்ரீனிவாசாய நமஹ
ஓம் பத்மநாபாய நமஹ
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ”

இதையும் படிக்கலாமே: சகல ஐஸ்வர்யம் தரும் குபேர வியாழன் வழிபாடு

முழுமனதோடு பெருமாளையும், மகாலட்சுமி தாயாரையும், கருடாழ்வாரையும் நினைத்துக் கொண்டு இந்த மந்திரங்களை ஒருமுறை மட்டும் கூறினால் போதும். நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -