- Advertisement -
- Advertisement -

நம் வாழ்க்கையில் அறிந்தும், அறியாமலும் சில பாவங்களை செய்து வருகிறோம். அந்த பாவங்களுக்கு உரிய தண்டனைகளாக கர்மா பின் தொடர்கிறது, ஆனால் சிலவை மட்டும் கர்மாவை தாண்டி, அது சாபமாக நமக்கு உருபெறுகிறது. இந்த சாபம் பொல்லாதது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. வாழ்க்கையில் தெரியாமல் கூட இந்த 3 பேருடைய சாபத்தை பெறக்கூடாது! அது யாருடைய சாபங்கள்? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவலை இப்பதிவில் பகிர்வோம் வாருங்கள்.

சாபங்கள் ஏராளமானவை, அதில் குறிப்பிட்ட 13 சாபங்கள் உள்ளதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த 13 சாபங்களும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பெரும் இழப்புகளையும், அவமானங்களையும் தேடித் தருமாம். அதிலும் குறிப்பிட்ட இந்த மூன்று பேருடைய சாபங்கள் சக்தி வாய்ந்ததாக இருக்குமாம். வாழ்க்கையில் நாம் பெறக் கூடாத இந்த மூன்று சாபங்கள் பற்றிய தகவல்களையும், அதிலிருந்து விடுபடக்கூடிய விமோசன பரிகாரத்தையும் பார்ப்போம்.

- Advertisement -

முதலாவது சாபம், பெற்றோர்களுடைய சாபம் ஆகும். இந்த உலகுக்கு நமக்கு உயிர் கொடுத்துக் கொண்டு வந்தது பெற்றோர்கள். இவர்களுடைய சாபத்திற்கு நாம் ஆளானால், அது மோசமான விளைவுகளை நமக்கு ஏற்படுத்துமாம். பெற்றோர்கள் சாபத்தை பெறுவது பிள்ளைகளுக்கு ஆகாது. நம் உறவுக்கும், உடைமைகளுக்கும், சொத்துக்களுக்கும் சொந்தக்காரர்கள் இவர்கள். பெற்றோர்களுடைய சாபத்தை பெற்றால் ஒரு மனிதன் வாழ்க்கையில் தொடர் தோல்விகளை நிச்சயம் சந்திப்பான். இதிலிருந்து விமோசனம் பெறுவதற்கு ஈசனுடைய சொத்துக்களை பாதுகாக்கும் வேலையை செய்யக்கூடிய சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். சண்டிகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து மனதார சாபம் நீங்க பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள், விமோசனம் அடையலாம்.

இரண்டாவதாக நாம் நம் உடன் பிறந்தவர்களுடைய சாபத்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என்று சாஸ்திரங்கள் எச்சரிக்கை செய்கிறது. பாவத்திலேயே பெரிய பாவம் உடன்பிறந்தவர்களை ஏமாற்றுவது ஆகும். நமக்கென நம் மீது உரிமை கொண்டுள்ளவர்கள் இவர்கள். ஒரு தாய் வயிற்றில் இருந்து பிறந்த உடன்பிறந்தவர்களை எக்காரணம் கொண்டும் ஏமாற்றக்கூடாது. அப்படி ஏமாற்றினால் அது மிகப்பெரிய சாபமாக உரு மாற்றம் பெறும். இது ஏழேழு பிறவிக்கும் நம்மை பின் தொடரும் அழியா சாபமாக இருக்கும். இதிலிருந்து விடுபடுவதற்கு பைரவருக்கு அஷ்டமி திதியில் மிளகு தீபம் ஏற்றி மனதார மன்னிப்பு கேட்டு வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -

மூன்றாவதாக வரக்கூடாத மிகப் பெரிய சாபம் விதவைகள் சாபம். ஏதோ ஒரு விதி வசத்தால் கணவனை இழந்த பெண்களின் சாபத்தை ஒருபோதும் ஒரு மனிதன் பெறவே கூடாது. விதவைகளின் சாபம் பெற்ற ஒரு மனிதனால் இரவில் நிம்மதியாக தூங்கக்கூட முடியாது, தவிப்பார்களாம். பல வகையில் அவனுக்கு உடல் நல பாதிப்புகளும், சோதனைகளும் வருமாம். அது அவனை மட்டும் அல்லாமல், அவனுக்கு பிறந்த பிள்ளைகளையும் பின் தொடரும், கொடூரமான சாபமாக மாறுமாம்.

இதையும் படிக்கலாமே:
தண்ணீரை தீர்த்தமாக மாற்றும் பணம் தரும் மந்திரம்

விதவைகள் மட்டுமல்ல பொதுவாகவே பெண் சாபம் பொல்லாதது தான் என்பார்கள். சுமங்கலி பெண்கள் கண்ணீர் மல்க விடும் சாபமும், ஒரு மனிதனை சும்மா விடாது. இதிலிருந்து விமோசனம் பெறுவதற்கு நந்தி பகவானை திருதியை திதியில் வழிபாடு செய்து மன்னிப்பு கேளுங்கள், விமோசனம் அடையலாம். இந்த மூன்று சாபங்களுக்கு விமோசனம் கிடைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல! இருப்பினும் அறியாமல் செய்த பாவத்திற்கு மனம் வருந்தி திருந்தி மன்னிப்பு கேட்டு பரிகாரம் செய்தால் நிவாரணம் கிடைக்கும்.

- Advertisement -